ஹரிதாஸ்
65 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு என் கோடிக்கணக்கான நன்றிகள் - கேபிள் சங்கர் ஆட்டிசம் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. இக்குறைபாடுள்ள குழந்தைகளின் பிரச்சனையை முளையிலேயே உணர்ந்து அதற்காக ஸ்பெஷல் பயிற்சிகள் கொடுத்தால் அக்குழந்தையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடியவனாய் வலம வர முடியும். உலகில் தலை சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பல பேர் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளி வந்தவர்கள் தான். எதற்காக ஆட்டிசத்தைப் பற்றி எழுதுகிறேன் என்றால் இப்படம் ஆட்சத்தினால் பாதிக்கப்பட்ட மகனுக்கும், அவனின் வாழ்க்கையை தன் வாழ்க்கையாய் கொண்ட தகப்பனுக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் படத்தின் கதை.என்னடா இது ஆட்டிசம், அப்பா, மகன் உறவு என்று செண்டிமெண்டை கொட்டி, பிரச்சாரமாய் இருக்குமோ என்று பயப்படாதீர்கள். ஒர் சுவாரஸ்ய திரைக்தையமைத்து மிக அழகாய் கொடுத்திருக்கிறார்கள். ரொம்ப நாளாகி விட்டது தமிழில் இப்படி ஒரு சென்சிபிள் படம் பார்த்து.