100% Love
சுகுமார், நாக சைதன்யா, ரொம்ப நாளைக்கு பிறகு தமன்னா தெலுங்கில், தேவி ஸ்ரீ பிரசாத, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என்று ஒரு பெரிய வெற்றிக் கூட்டணியே ஒன்றினைந்திருக்கும் படம். அதனால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கு அளவேயில்லை. வழக்கமாய் சுகுமாரின் அத்துனை படங்களிலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கும். அதாவது ஹீரோவின் கேரக்டரைஷேஷன். அது அவரது முதல் படமான ஆர்யாவிலாகட்டும், இரண்டாவதுபடமான ஜகடத்திலாகட்டும், மூன்றாவதான கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகப் போன ஆர்யா-2விலாகட்டும் ஒரு டீடெயில்டு கேரிக்கேச்சர் இருக்கும். அதற்காக அவர் நிறைய உழைத்திருப்பார். ஆனால் அம்மாதிரியான உழைப்பு கொஞ்சம் ஓவராகி ஆர்யா –2 போல தோல்வியடைவதும் உண்டு. தமிழ் நாட்டில் அப்படத்தை பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். ஏன் எனக்கும் மிகவும் பிடித்தப் படம். ஆனால் அந்திரத்தில் படம் வெகு சுமார் ரிசல்ட்டே.