சாப்பாட்டுக்கடை- கும்பகோணம் மங்களாம்பிகா
ஏற்கனவே இவர்களைப் பற்றி சில வருடங்களுக்கு முன் சாப்பாட்டுக்கடை பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.நான் எப்போது கும்பகோணம் போனாலும் இவர்களுடய ரவா தோசை, சாம்பார், கார சட்னிக்கு அடிமை. அட்டகாசமாய் இருக்கும். முன்பு கும்பேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் வைத்திருந்தவர்கள் இப்போது அந்த கோவிலின் பிரகாரத்தின் பின்னால் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே செட்டப்பில் தான் இக்கடையும். நாங்கள் சென்ற போது ஏகப்பட்ட கூட்டம். இத்தனைக்கும் வார நாட்கள் தான். வெளியூர்க்காரர்கள் தான் அதிகம். அங்கே உட்கார்ந்திருந்த தெலுங்குகார கஸ்டமரிடம் கும்மோணத்துக்கார சப்ளையர் தெலுங்கு அரிசு உப்புமாவை “உப்பு பிண்டி” பிய்யம் உப்பு பிண்டி என்று ரெகமெண்ட் செய்து கொண்டிருந்தார். இடம் கிடைத்து உட்கார்ந்த மாத்திரத்தில் உடனடியாய் ஆர்டர் செய்தது ரவா தோசைதான். நல்ல முறுகலா கொடுங்கன்னு சொல்லி ஆர்டர் செய்தேன். மகனார்கள் நெய் பொடி தோசை ஆர்டர் செய்தார். இன்னொருவர் பரோட்டா. மனைவியும் அம்மாவும் தோசை மற்றும் ரவா. நான் கேட்டார்ப் போலவே நல்ல முறுகலாய் ரவா தோசை வந்தது. உடன் காரச்சட்னியை கேட்டு வாங்கி போட்டுக் கொண்டேன். நல்ல எண்ணெய் ...