முத்திரை - திரைவிமர்சனம்
டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, ஸ்ரீநாத, யுவன், என்று கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி. கிடைத்த வாய்ப்பில் முத்திரை பதிக்காமல் போய்விட்டார்கள். இரண்டு ஸ்மால் டைம் திருடர்கள், ஒருவன் ஹைடெக், இன்னொருவன் லோக்கல் பிக்பாக்கட், இருவரும் ஒன்று சேர்கிறார்கள். ஹைடெக் லஷ்மிராயையும், நிதின் மஞ்சரியையும், காதலிக்கிறார்கள். அவர்களின் ப்ளாட்டில் வசிக்கும் சேத்தனிடம் ஒரு அரசியல் கொலை ரகசியம் மாட்ட அவனிடமிருக்கும் ரகசியம் அடங்கிய லேப்டாப் இவர்களிடம் மாட்டுகிறது. ஒரு பக்கம், போலீஸ், இவர்களை துரத்த, மறுபக்கம், வில்ல்ன் பார்ட்டிகள் துரத்த, என்று மாறி, மாறி ஓடுகிறார்கள். திடீரென திரும்பி நிற்கிறார்கள். அதற்கு அப்புறம் என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ். பரபரப்பாக சொல்ல வேண்டிய கதை. படு சொதப்பலாக சொல்லியிருக்கிறார்கள். அதிலும் முதல் பாதியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள், லவ் பண்ணுகிறார்கள், என்று ஒரே உட்டாலக்கடி, இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள வைத்திருக்கிறார்கள். எல்லாமே கொஞ்சம் டூமச்சாய், ஏதோ முடிக்க வேண்டும் என்ற அவரச...