Posts

Showing posts with the label sun pictures

சென்னையில் ஒரு நாள்

Image
 ஹிதேந்திரன் எனும் சிறுவனின் உடலுறுப்புகளை ஒரு ஆஸ்பிட்டலிருந்து இன்னொரு ஆஸ்பிட்டலுக்கு துரித கதியில் யாரும் யோசிக்காத நேரத்தில் ஒர் போலீஸ்வேனில் கொண்டு வந்தார்கள்.  உயிருக்கு போராடிய இன்னொரு  உடலில் மாற்று இருதயம் பொறுத்தி உடல் உறுப்பு தானத்தை இன்று பாமரரும் யோசிக்கும் படியாய் செய்த ஒர் விஷயத்தை, மலையாள திரையுலகத்தினர் சில வருடங்களுக்கு முன் அதை அடிப்படையாய் வைத்து ஒர் அழகான, படத்தை எடுத்தனர். அதை தமிழில் எடுப்பதற்காக ராடன் டிவி நிறுவனம் வாங்கி இங்கே தயாரித்திருக்கிறது. வழக்கம் போல மாற்றான் தோட்டத்தில் மணந்தால் தான் நமக்கு தெரியும் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.

மங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.

Image
எந்த நேரத்தில் மங்காத்தா என்று சூதாட்டப் பெயரை வைத்தார்களோ? ஒரே ஆட்டமாய்தான் இருக்கிறது. மங்காத்தாவை ஆளாளுக்கு கை மாற்றி விட்ட குழப்பம் ஒரு வழியாய் முடிந்து மீண்டும் சன்னிடமே வந்துவிட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் விஷயமே வேறு. முதலில் மங்காத்தா படத்தை துரை தயாநிதியே வெளியிட நினைத்து தியேட்டர்களை புக் செய்ய முனைந்த போது துரை தயாநிதியின் முந்தைய படங்களான, வா குவாட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களினால் அடைந்த நஷ்டத்தை சரிகட்டினால்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.

எந்திரன்

எந்திரன் பாடல்கள் வெளியாகிவிட்டது. எலக்ட்ரானிக் டவுன்லோட் காலத்தில் சொற்ப பணத்துக்கு ஆடியோ ரைட்ஸ் விலைக்கு போகும் நேரத்தில், சமீப காலத்தில் ஆடியோ உலகில் பெரிய விலை போன படம் இதுவாகத்தான் இருக்கும். மிக பிரம்மாண்டமாய் மலேசியாவில் வெளியிட்டார்கள். முதல் முறையாய் கலாநிதி மாறன் தன் சினிமா கம்பெனி சார்பில் கலந்து கொண்ட படம். அபீஷியலாய் பார்த்தால் இதுதான் அவர் தயாரிக்கும் முதல் படம். மற்ற படமெல்லாம் மற்றவர்கள் தயாரித்து, அதை விநியோகிக்க, மொத்தமாய் வாங்கிய படம் தான். ஆனால் முதல் படமே மிக பிரம்மாண்டமான படமாய் அமைந்திருப்பது கலாநிதியின் தைரியத்தையும், தொழில் மேல் உள்ள வெறியையும் காட்டுகிறது. பாடல்கள் கொஞ்சம், கொஞ்சமாய் சுருதி ஏற ஆரம்பித்திருக்கிறது. நிச்சயமாய் தியேட்டரில வெளியாகும் போது மூன்று பாட்டுகள் சூப்பர் ஹிட் நிலையில் இருக்கும். ரிலீசான நாளில் அரிமா,,அரிமா மட்டும் பிடித்த எனக்கு இப்போது விஜய்பிரகாஷின் குரலில் வரும் காதல் அணுக்கள் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஸோ.. ஆஸ் யூஷ்வல் ரஹ்மான் டாமினேட்ஸ். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் விடியோவை பார்த்த போது.. அதில் ரஜினியின் பேச்சில் செம உற்சாகம். ...