Eega - நான் ஈ
ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி.