2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -3
2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -3 நிலா நிலா ஓடிவா பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ் வெப் சீரீஸ். ரொம்ப நாளாகவே இந்தியிலும், தெலுங்கிலும் கால் பதித்திருந்த வியூ எனும் ஸ்டீரிமிங் ஆப் தமிழில் ஆட்டத்தை ஆரம்பித்த சீரீஸ். ஒரு ட்ராகுலா பெண்ணுக்கும் நார்மலான இளைஞனுக்குமான காதல். ட்ராகுலா கூட்ட பிரச்சனை. அந்த ட்ராகுலாக்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் ஆபீசர் ஒருவர் அந்த ட்ராகுலாக்களை அழிக்க ஒர் தனிப்படை அமைக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியான ட்ராகுலாவுக்கும் பிரச்சனை வருகிறது பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. கதைக்களன் என்னவோ சுவாரஸ்யம் தான். ட்ராகுலாவாக நடித்த அழகு சுனைனாவும், ஸ்மார்ட் அஸ்வின் காக்கமானுவும் நடித்திருந்தாலும் மகா மொக்கையான காட்சிகள். சக்திமான் காலத்து சிஜிக்கள். காமெடி எனும் பெயரில் கருப்பு பெண், அசமந்த உதவியாளன். கொஞ்சமே கொஞ்சம் கூட மெனக்கெடாத திரைக்கதையமைப்பு. தூர்தர்ஷன் காலத்து படமாக்கல் என எல்லாமே சொதப்பல் தான். நந்தினியிடமிருந்து பெரிதும் எதிர்பார்த்தேன். இதே ஆஃப்பில் கேங்ஸ்டர் டைரி, கல்யாணமும் கடந்து போகும், மெட்ராஸ் மேன்ஷன், போன்ற அபத்த குறும்பட அந்தாலஜி சீரீஸ்...