Posts

Showing posts with the label சாலிக்கிராமம்

சாப்பாட்டுக்கடை - உங்க வீட்டு சாப்பாடு

Image
சாலிகிராமத்தில் சொல்லிக் கொள்கிறார்ப் போல நல்ல தரமான வெஜ் உணவகங்கள் அவ்வளவாக கிடையாது. நான் வெஜ் மட்டும் இருக்கிறதா என்று கேட்டீர்களானால் கொஞ்சம் தள்ளி வளசரவாக்கம், விருகம்பாக்கம் பக்கம் போனால் இருக்கிறது. மீண்டும் சரவணபவன், பார்வதி பவனை விட்டால் சிலாக்கியமாய் ஏதுமில்லாத நிலையில் ஒரு ஷூட் இடைவேளையில் நண்பர் நல்ல சாம்பார் சாதம், தயிர்சாதம் வாங்கி வரச் சொன்னார். எங்கிருந்து என்று கேட்க, விஜயகாந்த் வீட்டுக்கு முன்னால் அபுசாலி தெருவில், மாடியில் சின்னக்கடை இருக்கிறது. தக்காளி சாத ம், புளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் என வகை வகையான சித்ரான்னங்கள் வெறும் நாற்பது ரூபாய்க்கு என்றார். அடுத்த வாரமே அங்கே படையெடுத்தோம். படத்தில் காட்டப்பட்டிருக்கும் கருவேப்பிலை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் சேர்த்து எவ்வளவு தெரியுமா? ரூ.40 தான். தனியே வாங்கினால் இதே அளவுக்கு முழு சாதம் தருகிறார்கள். உதவி இயக்குனர்கள் வெகுவாய் சுற்றியலையும் இந்த ஏரியாவில் இம்மாதிரியான உணவகங்கள் அட்சய பாத்திரம். நல்ல தரமான,சுவையான சாத வகைகள். சரவண பவனிலேயே தயிர் சாதத்திற்கு ...

சாப்பாட்டுக்கடை

Image
அசைவ உணவு வகைகளுக்கு நிறைய உணவகங்கள் இருக்கிறது. ஆனால் சைவ உணவகங்களுக்கு நிஜமாகவே டிமாண்ட் தான். அதிலும் வெறும், தோசை, இட்லி என்று தேடினால் நிறைய கிடைக்கும். ஆனால் பொதுவாக நல்ல மெனு, நல்ல சாப்பாடு, சைட் டிஷ், நியாயமான விலை என்று தேடினால் கிடைப்பது அரிது. அதுவும் சைவ உணவகங்களில். அந்த வகையில் எல்லா வகையிலும் சிறநத உணவகம் சென்னை, சாலிக்கிராம,  அருணாச்சலம் ரோடில் மோகன் ஸ்டூடியோ எதிரிலுல்ள, கருணாஸ் சைவ உணவகம். மாலையில் சுடச்சுட, இட்லி, தோசை, அடை, ரவா தோசை, கொத்து பரோட்டா, என்று கலந்து கட்டி அட்டகாசப் படுத்தும் மெனு. சம்பார், சட்னி, கார சட்னி, இத்துடன் காரக்குழம்பு ஒன்று இவர்கள் ஸ்பெஷாலிட்டி. அதே போல மதிய சாப்பாடு. பொரியல், கூட்டு, அப்பளம், வத்தக்குழம்பு என்று நியாயமான விலையில் சுவையான சாப்பாடு, நிச்சயம் அடுத்த நாள் காலையிலோ, இரவிலோ வயிற்றை கெடுக்காத சாப்பாடு. இட்லி காரக்குழம்பு காம்பினேஷன் அடிச்சிக்க முடியாது. விஜய் டிவியின் நீயா நானாவில் கலந்து கொள்ள போய்விட்டு, நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டு, நான், அப்துல்லா, தண்டோரா மணீஜி, நர்சிம், சூர்யா ஆகியோர் கிளம்பினோம். அவர்களுக்கு ந...