Posts

Showing posts with the label மாஸ்கோவின் காவேரி

மாஸ்கோவின் காவேரி

Image
அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும்  சமந்தா, ஸ்மார்ட்டான பையன், ஆங்காங்கே பிக்சர்க்யூ ஷாட்டுகள், ஒவர்லாப்பில் வசனங்கள், ஒரே ஜம்ப் கட் ஷாட்டுகள்,  ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் வேறு நடித்திருக்க, ஒரு நல்ல தயாரிப்பாளர் என்று கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும்  படமாக்கிவிட முடிகிறது.. கீழிருக்கும் படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் பாக்யவான்கள். இதற்கு மேல் ஒன்னும் சொல்லி பிரயோஜனமில்லை..     இருக்கிற டைட் ஷெட்யூலில் கஷ்டப்பட்டு நைட் ஷோ வேறு. ட்ரைலரை பார்த்து ஏமாந்து போன சோனகிரிகளில் நானும் ஒருவன். தமனின் கோரே.. கொக்கோரே பாட்டையும் கட் செய்துவிட்டார்கள். ஆ ஒருத்தருக்கு நன்றி சொல்லணும். அது இயக்குனர் ரவிவர்மனுக்கு.. மொத்தமா 100 நிமிஷத்துல படத்தை முடிச்சு அனுப்பினதுக்கு. பி கிரேட் படங்களில் கூட ஏதாவது கதைன்னு ஒன்னு வச்சிருப்பாங்க.. மாஸ்கோவின் காவேரி – வேணாம் இருக்கிற கடுப்புல எதாவது சொல்லிருவேன்.