Posts

Showing posts with the label hindi web series

Crack Down - Hindi Web Series Review

Image
  shootout at lokanwala படத்தின் இயக்குனர் அபூர்வ லக்கியாவின் முதல் வெப் சீரீஸ். பேமிலி மேனின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட சுவாரஸ்ய ரா உளவுத்துறை சம்பந்தமான கதைகள் இந்தியில் சிறப்பாகவே வர ஆரம்பித்திருக்கிறது. இந்த க்ராக்டவுனும் அதில் ஒன்று என்று சேர்க்கலாம். சிக்ஸ்பேக்கில் இறுக்கமான முகத்துடன் சமயங்களில் ரா தலைமைக்கே போன் போடு, அவனை பிடி என்று உத்தரவு கொடுக்கும் அளவுக்கான டாமினெண்ட்  சாகுப் சலீம், கொஞ்சம் ராஸ் பட அலியா பட் கேரக்டரின் சாயலில் வரும் ஷிரியா பில்கனோகர்,   ராவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசியல். சட்டப்படி நடவடிக்கையை மீறி செயல் படும் ராவுக்கும் டைரக்டர் ஆப் ஆப்பரேஷனுக்குமிடையே நடக்கும் உள் புகைச்சல்கள். பாகிஸ்தானிய தீவிரவாதிகள். முஸ்லிம் ஏரியாக்களில் ஊடுருவும் பெண் தீவீரவாதிகள். கொலை செய்வதற்கு முன் நமாஸ் செய்துவிட்டு போகும் தீவிரவாதிகள் என எல்லா தீவிரவாதக் கதைகளுக்குண்டான அத்தன விஷயங்களும் இதில் இருக்கிறது.  சிந்தன் காந்தியும், சுரேஷ் நாயரும் இணைந்து எழுதியிருக்கும் இந்த சீரீஸுக்கு இவர்கள் தந்த டீடெயிலிங் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு இதை படமாக்க...