Posts

Showing posts with the label gopichand

Sahasam

Image
இந்தப் படத்தை மிக ஆர்வமாய் பார்க்கக் காரணம் இதன் இயக்குனர் சந்திரசேகர் ஏலெட்டிதான். இன்ஸ்பிரேஷனில் தான் படமெடுப்பார் என்றாலும், மிக சுவாரஸ்யமான லைன், வித்யாசமான கதைக் களன் என ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை படமெடுப்பவர். இவரின் முதல் படமான அய்தே சுமார் ஒன்னரை கோடியில் எடுக்கப்பட்டு, ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்த படம். இதை பிரகாஷ்ராஜ் நடிக்க தமிழில் கூட எடுத்தார்கள். ஓடவில்லை. அதே போல அனகோகுண்டா ஒக்க ரோஜு, ஒக்கடுன்னாடு, ப்ராயாணம் , இதோ இப்போது இந்த சாகஸம். இதற்கு முந்தைய படங்கள் ஆந்திராவில் கிரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் ஓகேயான படங்கள். எல்லா படங்களும் ஓரிரு நந்தி அவார்டுகளை தட்டிச் சென்றவை. நம்மூர் கலைமாமணி போல அல்ல நந்தி அவார்ட். இப்படியாப்பட்ட இயக்குனரிடமிருந்து ஒரு பேண்டஸி படமென்றால் ஆர்வம் வரத்தானே செய்யும்?. 

Mogudu

Image
கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில், டாப்ஸி, கோபிசந்த, ராஜேந்திரப்ரசாத், நரேஷ், ரோஜா என்று ஏகப்பட்ட நட்சத்திரக்கூட்டம் குழுமியிருக்கும் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது இப்படத்தைப் பற்றி. அதிலும் போஸ்டர் டிசைனில் டாப்ஸியின் 16 எம்.எம். பரந்த முதுகை பார்த்ததும், பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தை இளைஞரகளுக்கு ஏற்படுத்தியிருந்ததால் பார்த்தாகிவிட்டது.