Thottal Thodarum

Sep 16, 2020

Flesh - Web Series Review

முதல் எபிசோடிலிருந்து கடைசி எட்டாவது எபிசோட் வரை பெரிய குறையொன்றுமில்லாத வெப் சீரீஸ். என்ன ஆங்காங்கே லாஜிக் மீறல்களும், பெனிச ஆக்‌ஷன்களும் கொஞ்சம் ப்ரேசிலியன் படமான ட்ரேடின் சாயலும் இருந்தாலும், நல்ல கிரிப்பிங் கதை, நடிப்பு எல்லாமே. சுவரா பாஸ்கர் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். பட் நல்ல பர்பாமென்ஸ். வழக்கப்படி கெட்ட வார்த்தை, கொஞ்சம் வயலன்ஸ் என்று உறுத்தாமல் இருக்கிறது.


நீங்க ஜியோ நம்பர் வைத்திருந்தால், ஜியோ சினிமாவில் ஈராஸ் நவ் ஓடிடி இலவசம். அதில் வந்திருக்கிறது இந்த #flesh @erosnow

Sep 14, 2020

Atkan Chatkan - Film Review

 ஒர் ஏழை சிறுவன். அவனது அபார கவனிப்பாரற்ற இசை திறமை. க்ளைமேக்ஸில் என்ன ஆவான்? சொல்லுங்க.

1.அப்பா, அம்மா பெரிய வித்வான். ரைட்
2. அப்பா அம்மா பிரச்சனையில் இருவரும் பிரிவு. அப்பா குடிகாரர். ரைட்
3. பையனின் திறமையை பத்திருபது சீனுக்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ளும் கல்லூரி அல்லது பள்ளி தாளாளர். ரைட்
4. பையன் நாலு பையன் பொண்ணுடன் சேர்ந்து தகரம், குச்சி, போன்றவற்றை வைத்து இசைக்குழு நடத்துவது. ரோட் சைட் குழந்தைகள் நிச்சயம் அவர்களை வைத்து சம்பாரிக்கும் வில்லன்கள். பள்ளியில் பணக்கார மீசிக் படிக்கும் இளைஞர்கள் அவர்களால் இந்த சிறுவர்களுக்கு பிரச்சனை. க்ளைமேக்ஸில் ஓடி தப்பித்து வந்து பாடி அல்லது வாசித்து ஜெயிப்பது. ரைட்டு ரைட்டு ரைட்டு.

எல்லா ரெடி. எடுப்பா ஒரு ஃபீல் குட் மிசிக்கல் படத்தை என்று எடுத்துவிட்டார்கள். ட்ரம்ஸ் சிவமணி தான் இசை. அவரது ட்ரம்ஸ் தான் ஆதாரம். படம் நெடுக ஒரே குழப்பம். பாடல் பாடுகிறவர்களை செலக்ட் செய்வார்களா? அல்லது ட்ரம்ஸ் தான் மூலமா? எது நல்ல இசையை தீர்மானிக்கிறது? ஏனென்றால் சிவமணி என்றால் ட்ரம்ஸ் தான். பாட்டாய் நல்ல ரிதத்தோடு நன்றாகவே இருக்கிறது. ஆனால் எந்த திறமைக்கு அவர்கள் அங்கரிக்கபடுகிறார்கள் என்பதில் ஆரம்பித்து ஏகப்பட்ட குழப்பங்கள். டோலக் வாசிக்கும் அப்பா அம்மாவின் பிரச்சனை என்னவென்று யோசித்திர்கள் என்றால் அப்பா டோலக் வாசிக்கும் போது நடுவில் உட்கார்ந்து வாசிக்க, அவர் பின்னால் பாடும் பெண் உட்கார்ந்திருக்கிறார். மெல்ல அவரின் குரல் முன்னணிக்கு வந்து அவர் நடுவில் உட்கார டோலக் பின்னால் போகிறது. நிஜத்தில் டோலக்கை நடு நாயகமாய் வைத்து கச்சேரி செய்து நான் பார்த்ததில்லை. இப்படி இசையைப் பற்றிய புரிதல் பெரிதும் இல்லாமலேயே லிடியன், சிவமணி ஆகியோரை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். ரஹ்மான் வழங்கும் என்று சிவமணியின் பழக்கத்திற்காக போட்டு, ஜீ5 க்கு விற்றிருக்கிறார்கள் போல, சிவமணி, லிடியனைத் தவிர சொல்லிக் கொள்ள வேறேதும் இல்லை.

பெர்முடா - நாவல் விமர்சனம் -1

 பெர்முடா. விமர்சனம்#1

மூண்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாக இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார்.

எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Mohan Balu
Thx sir

பெர்முடா https://amzn.to/36tb8gg

பெர்முடா புத்தகமாய் அமேசானில் வாங்க https://amzn.to/2QACABx

Sep 11, 2020

சாப்பாட்டுக்கடை -தேவி அக்கா குழம்புக்கடை

ஹைதராபாத்தில் நிறைய குழம்பு கறிஸ் கடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் சென்னையில் ஏனோ நிறைய குழம்பு கடைகள் இருந்து பார்த்ததில்லை. அவ்வப்போது சில சைவ உணவு சிறுகடைகள் குழம்பு ,கூட்டு, பொரியல், ரசம் என தனித் தனியே இருபது ரூபாய்க்கு விற்பனை செய்ததை பார்த்திருக்கிறேன். ஆனால் அதையே முழு நேரக்கடையாய் பார்த்ததில்லை. சில ஆண்டுகளாய் அம்மாதிரியான குழம்புக்கடைகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. முக்கியமாய் நான் வெஜ் குழம்பு கறிக்கடைகள். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொன்று முளைக்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் வீட்டிலிருந்து சமைக்க ஆரம்பித்து மெல்ல வியாபாரம் பெருக, பெருக, ஆட்களை வைத்து சமைக்க ஆரம்பித்து சுவை கெட்டுப் போய் மூடிய கடைகள் ஏராளம். ஆனால் இன்றளவில் நிறைய குழம்புக்கடைகள் அவரவர்களின் ஸ்பெஷல் கைவண்ணத்திற்கு ஏற்ப அட்டகாசமான வியாபாரம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அப்படியான ஒரு கடை தான் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள இந்த தேவி அக்கா குழம்புக்கடை. என் நியாபகம் சரி என்றால் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் வாய் மொழி காரணமாய் மெல்ல இந்தக்கடையில் சுவைக்காக குழம்பு வாங்க ஆரம்பித்தார்கள். 

நான் முதல் முதலாய் சிக்கன் தொக்கும், ஒரு சப்பாத்தியும் வாங்கித்தான் என் கணக்கை ஆரம்பித்தேன். தாம்பாளமாய் சப்பாத்தி ஒன்று 15 ரூபாய் கூடவே நம்மூர் சிக்கன் தொக்கு நான்கு ஐந்துபீஸ்களோடு அளவான காரம் மணத்தோடு 70 ரூபாய். வாங்கி சாப்பிட்ட மாத்திரத்தில் மிகவும் பிடித்துப் போக, பல நேரங்களில் மட்டன் தொக்கு, சிக்கன் தொக்கு ஒரு சப்பாத்தி என மதிய உணவு அவர்களிடம் என்றானது. கொஞ்சம் கூட காரலோ, வயிற்று பிரச்சனையோ வந்ததேயில்லை. கூடவே 25 ரூபாய்க்கு ஒரு ஆள் சாப்பிடும் அளவிற்கான சாதம் கொடுக்க ஆரம்பிக்க, மட்டன் குழம்பும், மீன் குழம்பும் சிறப்பை கூட்டின. எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருக்க, கொரானா வந்து மொத்த வியாபாங்களையும் புரட்டிப் போட்டிருக்க, தக்கன பிழைக்கும் என்பதற்கு ஏற்ப இவர்களது கடை குவாரண்டைன் விதிகளீன் படி பார்சல் மட்டுமே அனுமதி என்றானது இவர்களுக்குமிகவும் வசதியாய் போனது. ஏகப்பட்ட பேச்சிலர்கள், இருக்கும் ஏரியா சாலிகிராமம். குறிப்பாய் உதவி இயக்குனர்கள். 100 ரூபாய்க்கு குழம்பு, சப்பாத்தி, சாதம் சாப்பிட முடியும் அதுவும் நல்ல தரத்தோடு எனும் போது ஏன் விற்காது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாய் அருமையாய் சுவையை மெயிண்டையின் செய்து வருகிறார்கள். 

மீன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு என எல்லாவற்றிலும் நல்ல தரம் சுவை. சாலிக்கிராமம் பக்கத்தில் இருந்தா ஒரு முறை ட்ரை செய்து பார்க்கவும்

தேவி அக்கா குழம்புக்கடை\
அபுசாலி தெரு
சாலிகிராமம்
விஜய்காந்த் வீடு தாண்டி
9345876277

24 சலனங்களின் எண். விமர்சனம் -2

 விமர்சனம் #2

வணக்கம், சலணங்களின் எண் 24 , ஒரு சினிமா தொழிலின் பின்பக்கம் இப்படியா , காமிரா மேன் , அசோசியேட் டைரக்டர், கோ டைரக்டர், மாஸ்டர், ஹீரோ , ஹீரோயின், அல்லக்கைகள், தயாரிப்பாளர் இவர்களின் ஒருங்கிணைப்பு எந்தளவிற்கு ஒரு படத்தை உயிரோட்டத்துடன் வைக்கும் என்பதை பல இடங்களில் வெளிப்படுத்திய விதம் அருமை ,தயாரிப்பாளரின் சபலம் ஒரு பெண்ணை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை எழுத்தில் காட்சியாக்கி விட்டீர்கள், முதல் பட தயாரிப்பாளர் மணி ,நட்பினால் வரும் கேடு (அவரை கொலை செய்யாமலிருந்திருக்கலாம்) அதன்பின் அந்த குடும்ப உறுப்பினர்கள் அவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்த முயற்சிகளை எழுத்தாளுமையில் பார்த்தேன் . ஒரு சுய தொழில் புரிபவனாக சொல்கிறேன் , ஒரு சினிமா தொழிலின் நெளிவு சுழிவுகளுடன் , ஆரம்பம் முதல் , டிஜிட்டல் மார்கெட்டிங் , ரைட்ஸ் &ரிலீஸ் வரை விளக்கமாக வரைந்த ஒர் ஓவியம் , டீடெய்ல்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் . வாழ்த்துக்கள். நன்றி. ஹீரோ ,நித்யா , காதல் , டைரக்டர் மன உளைச்சல்...... இன்னும் நிறைய எழுதலாம் இவ்விடம் போதாது
நன்றி

24 சலனங்களின் எண் நாவல் கிண்டில் வர்ஷன் வாங்க https://amzn.to/2MwgkIb

24 சலனங்களின் எண் அமேசானில் வாங்க https://amzn.to/2VQg8H3

Sep 10, 2020

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?  

அமேசானில் நேரிடையாய் வெளியாகி நல்ல படம் என்று பெயர் எடுத்தபடங்கள் என்று பார்த்தால், சகுந்தலாதேவி, சீ யூ சூன் மட்டுமே. அமேசான் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என அமிதாப்பின் குலாபோசித்தாபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, ஜோதிகாவின் பொ... பென்குவின், கன்னட லா, ப்ரெஞ்சு பிரியாணி, மலையாளம் சுஜாதையும்.. , சி யூ சூன். ஆகியவை எட்டு படங்களில் ரெண்டு ஹிட் என்பது வழக்கமாய் இந்தியாவில் தயாராகும் படங்களின் வெற்றி சதவிகித  அடிப்படையில் பார்த்தால் நல்ல ஆவரேஜ் தான்.

இந்தியாவில் வெளியாகிற அத்தனை படங்களும் ஹிட் அடித்துக் கொண்டிருந்தது போலவும்,  இப்போது அமேசான் போன்ற ஓடீடீ தளங்களில் வெளிவந்ததினால் தான் தோல்வி என்று சீன் போடக் காரணம். நம்பர் விளையாட்டு இவர்களால் ஆட முடிவதில்லை. இத்தனை கோடி கலெக்‌ஷன், அத்தனை கோடி கூட்டம், என் பொய் நம்பர் சொல்ல முடிவதில்லை. ரசிக மனப்பான்மை கோஷங்கள் இல்லை. அமேசானும் எத்தனை பேர் பார்த்தார்கள் என்கிற கணக்கை வெளிப்படையாய் கொடுப்பதில்லை. கொண்டாட்டத்தை துவேஷத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாத இண்டஸ்ட்ரி ட்ராக்கர்களுக்கு வியாபாரம் போய்விட்டதால் அதையே நெகட்டிவ் பப்ளிச்சிட்டியாய் மாற்றுகிறார்கள். 

உண்மையில் சொல்லப் போனால் இந்த படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஓடீடீயில் வெளியான கண்டெண்டுகளுக்கு 100வது நாள் போஸ்டர் எல்லாம் எத்தனை அபத்தம் என்று தெரிந்தே தான் செய்கிறார்கள். இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் நம்பர்கள் இவர்களின் வாழ்வாதாரம். அதில் மாற்றம் வரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் புலம்பல் தான் ஓடீடீ ரிலீஸ் எல்லாம் மொக்கை என்பது. அமேசானைப் பொறுத்தவரை, இத்தனை படங்கள் மூலமாய் கிடைத்திருக்கும் புதிய வாடிக்கையாளர்கள். தக்க வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இப்படங்களுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் லாபம். அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கண்டெண்டுகள் அந்ததந்த மாத வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தினால் போதுமானது. அதில் வெற்றி பெரும் படங்கள் அவர்களின் பார்வையாளர்களுக்கு திருப்தியைத் தரும். உதாரணமாய் ஹாட்ஸ்டாரில் தில் பேசாரா படத்தை இலவசமாய் அனைவரும் பார்க்க வெளியிட்டார்கள். சுமார் என்பது கோடி பேர் பார்த்ததாய் டேட்டா பேஸ் கொடுக்க, அதை ஒரு கொண்டாட்டமாய், இத்தனை பேர் பார்த்தார்கள் என்று கொண்டாடினார்கள். சினிமாவிற்கு இந்த கொண்டாட்டங்கள் நம்பர்கள் தேவையாய் இருக்கிறதோ இல்லையோ வியாபாரிகளுக்கு தேவையாய் இருக்கிறது.

ஹாட்ஸ்டாரில் வெளியான படங்களில் தில் பேச்சார, லூட் கேஸ், குதா ஹபீஸ், சடக் 2, ஆகியவைகளில் தில்பேச்சாரா, லூட் கேஸை தவிர பெரிய ஹிட்டோ, விமர்சன ரீதியான வரவேற்போ இல்லை. இங்கேயும் அவர்களது ரிலீஸ் லிஸ்டில் இரண்டு ஹிட் இருக்கிறது.

நெட்ப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாகவே பெரிய பட்ஜெட் படங்களாய் வாங்கி வெளியிடாமல் அவர்களின் ஏ செண்டர் ஆடியன்ஸ் மார்கெட்டுக்கு ஏற்பான படங்களை தயாரித்தோ, அல்லது தயாரிக்கப்பட்ட படங்களையோ வாங்கி வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். அந்த வகையில், ராத் அகேலி ஹே, கிருஷ்னா அண்ட் ஹிஸ் லீலா, சமன்பஹர், குஞ்சன் சக்சேனா, க்ளாஸ் ஆப் 84 ஆகியவை வெற்றிப் படங்களே, எட்டுக்கும் மேற்ப்பட்ட படங்களை இந்திய மொழியில் வெளியிட்ட நெட்ப்ளிக்ஸின் வெற்றி கணக்க்கு இது. சீரீஸ்களின் வெற்றி இதில் கணக்கில் வராது. உண்மையில் பார்த்தால் சின்னகல்லு பெத்த லாபம்.

ஜீ டிவியின் அங்கமான ஜீ5யில் கூட தமிழ் தெலுக்கு, ஹிந்தி, மராத்தி, பெங்காலி என அடித்து துவம்சம் செய்கிறார்கள். இவர்களின் வெளியீட்டில் யாரா என்கிற ஒரு ஆவரேஜ் பட்ஜெட் படம் கவனம் பெற்றது. லூசர் எனும் ஒரு வெப்சீரீஸ் கவனம் பெற்றிருக்கிறது. சுராலீ எனும் பாகிஸ்தானிய சீரீஸ் வெற்றி, சின்னச் சின்ன படங்களை சகாய விலைக்கு வாங்கி அதை ஓ.டி.டி, டிவி, டப்பிங் என எல்லா வியாபாரத்திலும் கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட டேனி, காக்டெயில் போன்ற படங்களின் தோல்வி தியேட்டரில் வெளியாகியிருந்தாலும் அதே நிலைதான். லாக்கப் ஒன்று தான் தமிழில் வெளியாகி அபவ் ஆவரேஜ் கவனம் பெற்ற படமாய் அவர்களுக்கு அமைந்தது.

ஆஹா என்று ஒரு ஓ.டி.டி ப்ளாட்பார்ம் தற்போது தெலுங்கு படங்கள், கண்டெண்டுகளுகாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்த லாக்டவுன் ப்ரீயடில் மிகப் பெரிய அளவில் தெலுங்கு ஆடியன்ஸை கவர்ந்த ஒர் ஓடிடி என்றால் அது அஹாவைதான் சொல்ல வேண்டும். கடந்த மாதங்களில் மட்டும் ட்ரான்ஸ், போரன்ஸிக் போன்ற மலையாளப் படங்களை டப்பிங்கில் வெளியிட்டு பெரும் வெற்றி பெற்ற அதே வேளையில், சின்னப்படங்களான கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா, பானுமதி ராமகிருஷ்ணா, போன்ற படங்களின் வெற்றி இன்னும் பல மாதங்களுக்கு தாங்கும்.

ஏன் உலகளவில் ஆப்பிள் டிவி டாம் ஹாங்ஸின் “க்ரே ஹவுண்ட்” எனும் படத்தை நேரிடை ஓ.டி.டி ரிலீஸ் செய்தது. சுமார் என்பது மில்லியனுக்கு விலைக்கு வாங்கியதாய் தகவல். ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த ப்ளாட்பார்மிற்கு பெரும் வரவேற்பை பெற்று தந்திருக்கிறது இந்த படம். அடுத்ததாய் வில் ஸ்மித் நடிக்கும் படத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது அப்பிள் டிவி.

உண்மையில் சொல்ல போனால் தெலுங்கில் வெளியான வி, இந்த க்ரே ஹவுண்ட் போன்ற படங்கள் பெரிய திரையில் பார்க்கும் போது நிச்சயம் அதற்குண்டான உற்சாகத்தை பெரும் திரை தான் தரும் என்பதில் ஐயமேயில்லை. ஆனால் அந்த உற்சாகத்தை மீறி முடிவாய் படம் கொடுக்கும் நிறைவே அதன் வெற்றி தோல்விக்கு அடிகோலும், அப்படியான வி தியேட்டரில் வெளியாகியிருந்தாலும் தோல்விதான். அதே நேரத்தில் நிச்சயம் பெரிய திரையில் பார்த்தால் இன்னொரு மடங்கு லாபம் சம்பாரிக்ககூடிய படம் தான் க்ரேஹவுண்ட். ஏனென்றால் அது போர் படம். குறிப்பாய் கடற்படையிடையே நடக்கும் போர் பற்றிய படம். அதை பெரிய திரையில் பார்த்தால் நிச்சயம் ஒர் மிக அற்புதமான அனுபவத்தை தந்திருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. நாளை ஒரு வேளை மாஸ்டர் போன்ற படங்கள் இதில் வெளியானால் நிச்சயம் தியேட்டர் கொண்டாட்டம் என்பதை இழந்துதான் பார்க்க வேண்டியிருக்கும்

இவர்கள் எல்லோருக்கும் லாபம் வருமா? இத்தனை கோடி போட்டு படம் வாங்குகிறார்களே? எப்படி வெற்றி தோல்வியை கணக்கிடுவது? நல்ல விமர்சனம் வருவதை வைத்தா? அல்லது இத்தனை கோடி ரூபாய்க்கு விலைக்கு போன நம்பரை வைத்தா? இதே லாப நஷ்ட கணக்கை இந்த இண்டஸ்ட்ரி ட்ராக்கர்கள் வெப் சீரீஸுக்கு பார்ப்பதில்லை. ஏனென்றால் அது அந்தந்த நிறுவனங்கள் அவர்களின் பணம் போட்டு அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இல்லையேல் முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்கபடுகிறது உதாரணமாய் பாதாள் லோக் எனும் சீரீஸின் பட்ஜெட் என்னவாக இருக்கும்? அதன் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா முதல் காப்பி அடிப்படையில் அமேசானுக்காக தயாரித்து கொடுத்த வெப் சீரீஸ். அதில் அவருக்கு எத்தனை லாபம் வந்தது என்று யாராவது கவலைப் பட்டு பார்த்திருக்கிறீர்களா? மாட்டார்கள். ஏனென்றால் அதில் இம்மாதிரியான போலி பேக் ட்ராக்டர்களுக்கு வியாபாரம்.

சோஷியல் மீடியாவுக்கு முன்பு என்றாவது இந்த படத்தின் பத்தாவது ஆண்டு, இவருக்கு பிறந்தநாள், அதற்காக ஸ்பெஷல் டிபி, பிரபலத்தைப் பொறுத்து அதற்கு வீடியோ, ஆடியோ செய்திகள் என களேபரப்படுகிறது. இத்தனைக்கும் பின்னால் ஒரு வியாபாரம் இருக்கிறது. இதனால் ஆதாயம் அடைகிறவர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேரும் உண்மையில் சொல்லப் போனால் கிட்டத்தட்ட துறை சார்ந்த ஒட்டுண்ணிகள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படியாக போடப்படும் விளம்பரங்கள் அனைத்துமே இவர்களுக்கான வியாபாரம். அதை தான் அனைவரும் விரும்புகிறார்கள். மீடியாவில் தங்களைப் பற்றிய பேச்சும் இம்மாதிரியான ஒரு நாள் பரபரப்பு அவர்களது ஆட்டத்தை நிர்ணையிப்பதாய் நினைக்க வைக்கிறார்கள் இந்த ட்ராக்கர்கள்

தியேட்டர்கள் திறந்திருந்த போது அந்தந்த பட தயாரிப்பாளர்களிடமிருந்து விளம்பரம் பணம்  வாங்கிக் கொண்டு முதல் நாளே நூறு கோடி பத்து கோடி என கலெக்‌ஷன் ரிப்போர்ட் எழுதுகிற இவர்களின் ஆண்டு ரிப்போர்ட்டில் அந்த படங்கள் இருக்கவே இருக்காது. தியேட்டர்கள் நடைபெற்ற போதும் அய்யோ நல்ல படங்கள் ஓடுவதில்லை. நல்ல படங்களுக்கு ஆட்கள் வருவதில்லை. பெரிய படங்கள் தொடந்து தோல்வி, வெற்றி என இவர்களின் வாழ்க்கையே நம்பர்களை வைத்துத்தான் என்றிருந்தது கொரானாவால் மாறியது. நம்பர் இல்லாமல் இவர்களுக்கு வியாபாரம்  இல்லை. உண்மையில் சினிமா ரசிகனுக்கு அவர்களுடய நம்பர் தேவையேயில்லை. அவனுக்கு தேவையானது எல்லாம் அவன் செலவு செய்யும் பணத்திற்கு கிடைக்கும் அனுபவம். அந்த பணம் நம்பராய் தெரிய வரும் போது அவன் அதிலிருந்து விலகிவிடுவான்.  எனவே நம்பர் நல்லது.

Cable Sankar