
படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..?

படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான்.

முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவர்களை அங்கஹீனபடுத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலின் தலைவனிடம் மாட்டி கொள்கிறார்கள்.. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் ஜமாலின் அண்ணன் மாலிக் முக்கிய ஆளாய் ஆகிறான். தன் தம்பிக்கு அங்கே பிரச்சனை வரும் போது அங்கிருந்து தப்பி, ஓடும் ரயிலில் தப்பி ஆக்ராவுக்கு சென்று கைட், திருட்டு என்று பல பட்டறையாகிறாகள். பின்பு தன் பழைய நண்பியான லதிகாவை தேடி மும்பைக்கு வருகிறார்கள், அவளை ஒரு விபசார விடுதியிலிருந்து காப்பாறுகிறான் ஜமாலின் அண்ணன் மாலிக், ஜமாலுக்கும், லதிகாவுக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், அவனின் அண்ணன் லதிகாவை நான் தான் காப்பாற்றினேன் என்று சொல்லி அவளை அடைகிறான்.

படம் முழுக்க போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி அவனுக்கு பதில் தெரிந்தது என்று ஜமாலின் வாழ்க்கை நடந்த சம்பவஙக்ளின் மூலம் காட்டியிருப்பது. சூப்பர். அதிலும் அனில் கபூர் அவனை போட்டியிலிருந்து விலக்க தவறான ஒரு பதிலை பிரேக்கின் போது சொல்லி, அவனை குழப்ப, அவன் தெளீவாக, ஆப்ஷனில் வேறு பதிலை தேர்ந்தெடுப்பது, வாழ்க்கை அவனுக்கு கற்று தந்த பாடம்தான் அவனை வழிநடத்தி செல்கிறது.
அவன் மேல் எந்த குற்றமும் இல்லை என்று போலீஸ் அவனை விடுதலை செய்கிறது, அடுத்த நாள் போட்டியில் அவனுக்கு கேட்கப்படும் கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியவில்லை,அதனால் தன்னுடய கடைசி ஆயுதமான போன் எ ப்ரண்ட் என்று தனக்கு தெரிந்த ஒரே நம்பரான தன் அண்ணனுக்கு போட, அந்த போனை அவனுடய காதலி லதிகாவிடம் தன் தம்பியுடன் சேர்த்து வைப்பதற்காக தன் முதலாளியின் பிடியிலிருந்து தப்பியோட வைத்து இறக்கிறான்.
இப்போது போன் லதிகாவிடம், ஜாமாலுக்கோ பதில் தெரியாது, அவளுக்காவது தெரிந்ததா..? லதிகாவும், ஜமாலும் ஒன்று சேர்ந்தார்களா..? என்று நம் மனதை உருக்குகிறார்கள்.
ஆங்கில படம் தான் என்றாலும் படம் முழுவதும் விரவிகிடக்கும் ஹிந்தி வசனங்கள், அந்த அந்த காலகட்டங்களில் கேரக்டர்களுக்கும் அவர்கள் நடிகர்களை தேர்தெடுத்த பாங்கும் அசத்தலாயிருக்கிறது. ஜமால், அவன் அண்ணன், லதிகா என்ற மூன்று கேரக்டர்களும் 4 வயது முதல் 18 வயது வரையான நிலைகளில் வருவதால் அதற்கு ஏற்றார் போல சிறுவர்களை தெரிவு செய்திருப்பது அருமை.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாரும் மிக இயல்பான நடிப்பில் நம்மை கட்டி போடுகிறார்கள், தேவ் படேல், கதாநாயகி, இர்பான்கான், சுரப் சுக்லா.
இசை நம்ம ஏ.ஆர்.ரஹ்மான். மனுசன் சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரீ ரிக்கார்டிங்கில் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும் என்ன ஒரு காம்போஸிஷன். இந்த வருட கோல்டன் க்ளோப் அவார்ட்டுக்கு சிறந்த இசையமைப்பாளராய் இவரை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
படத்தில் குறைகளே இல்லையா..? என்று கேள்வி எழுப்பினால் மிகவும் யோசிக்க வேண்டியிருக்கு, இல்லாமல் இல்லை ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டாயில்லை என்பதே உண்மை.

Q&A என்கிற பெயரில் விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலுக்கு, அவரும் சைமன் பிஃபாய் என்பவரும் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இயக்கம் டானி போயலே.. இவரை பாராட்ட வார்தைகளே இலலை. ஏற்கனவே இந்த படம் டொரண்டோ பீப்பிள் சாய்ஸ் அவார்ட்டை வென்றிருக்கிறது. கண்டிப்பாய் இந்த படம் பல உலக பட விருதுகளையும், ஆஸ்கர்களையும் வெல்லும் என்பது நிச்சயம்
Don't Miss it.....
ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை/ பேட்டி
http://moviesblog.mtv.com/2008/12/29/dont-sleep-on-slumdog-millionaire-composer-mia-collaborator-ar-rahman/
Song 1
Song 2
Song 3
Song 4
படத்தின் டிரைலரை பார்க்க..
உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...