Thottal Thodarum

Dec 14, 2008

Rab Ne Bana di Jodi - Review


படம் ஆரம்பித்ததும், அம்ரிஸ்டரின் தங்க கோயிலையும், அம்ரிஸ்ட்ரின் தெருக்களையும், காட்டும் போது, சரி எதையோ காட்ட போகிறார்கள் என்று நிமிர்ந்து உட்கார தோன்றுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் ஓரு சாதாரண “ஆம் ஆத்மியாய்” தன் அழகான மனைவியோடு இறங்க.. ஓரு பெரிய வீட்டின் முன் தானே உள்ளே சென்று ஓரு மணமகளை வரவேற்க்கும், சாங்கியங்களை செய்து அவளை வரவேற்று, அவளுக்கு கீழே ஓரு அறையை ஓதுக்கி, மேலே கண்டா முண்டா சாமான்கள் அறையை பயன் படுத்தும் ஷாருக்கானை பார்த்ததும், இன்னும் நிமிர்ந்து உட்கார, ஓரு சாதாரண ஸ்மார்ட் இல்லாத ஒருவன் எப்படி இவ்வளவு அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்தான் என்று ஃபளாஷ் பேக் ஆரம்பித்ததும், தொய்ய ஆரம்பிக்கிறது.

தன்னுடய் புரபஸ்ரின் மகளான தானியாவின் திருமணத்துக்கு போயிருக்கும், சுரீந்தர் சகாய் (ஷாருக்), அங்கே தானியாவை பார்த்து பிரம்மித்து நிற்க, அவருக்கு வர இருக்கும் மணமகன் ஓரு விபத்தில் இறந்து போக, புரபஸர் தன் மகள் தானியாவை, ஷாருக்குக்கு கைபிடித்து கொடுத்து விட்டு, இறந்து விடுகிறார். பின்பு ஷாருக் தானியாவை மணந்து அம்ரிஸ்டர் திரும்புகிறார். தன்னை விருப்பமில்லாமல் திருமணம் செய்த மனைவியின் அன்பை பெற, மிகவும் யூத்புல்லான ஓரு இளைஞனாக மாறி, தானியா விரும்பிய சூப்பர் டான்ஸ் ஜோடி போட்டியில் அவருக்கு ஜோடியாய் சேரும் அளவிற்கு மாறிவிடுகிறார். ஓரு கட்டத்தில் தானியாவுக்கு ஒரே குழப்பம், தான் விரும்புவது ராஜ் யையா அல்லது சுரீந்தரையா..? என்று. முடிவு எல்லோரும் எதிர்பார்த்த முடிவே.

கொட்டுகிற மழையில் நினைந்தபடி, பைக்கில் வரும் ராஜூம், தான்யாவும்,அந்த நிமிடங்களை சந்தோஷமாய் கழிக்க, அதே ராஜ், சுரீந்தராக வரும் போது மழையை பார்த்தபடி நிற்கும் தானியாவிடம், ஜன்னல் கதவை சாத்திக்கோ.. இல்லேன்னா தண்ணி உள்ளே வந்து தரையை நினைச்சிடும் என்னும் காட்சியில் இருவரது ரியாக்‌ஷன்களும் அருமை.

சுமார் எட்டு வருடங்களுக்கு பிறகு ஆதித்யா சோப்ரா இயக்கியிருக்கும் படம், கடைசியாய் அவர் இயக்கிய படம் “மொகப்தியான்’. மீண்டும் ஓரு தில்வாலே தில்ஹனியா லே ஜாயேங்கே.. வாக இருக்கும் என்று நினைத்து உள்ளே வருபவர்களுக்கு ஏமாற்ற்மே மிஞ்சும்..

ஒரு பெண்ணிற்கு மீசை இல்லாவிட்டால் தன் கணவனை அடையாளம் தெரியாது என்பதை நீங்கள் ஏற்று கொண்டால், உங்களால் கொஞ்சமாவது ரசிக்க முடியும். ஆங்காங்கே சிற்சில காட்சிகள் நம் மனதை கொள்ளையடித்தாலும், ஓன்றுமேயில்லாத திரைக்கதையில் மூணு மணி நேரம் வெறும் ஷாருக்கானையும், எப்போது பார்த்தாலும் ’க்ளிவேஜை’ காட்டியபடி நம்மை கட்டிப்போடும் அனுஷ்கா சர்மாவை எவ்வளவு நேரம்தான் பார்பது. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.. ஹி..ஹி.ஹி

படம் முழுவதும் ஷாருக் மிக அழகான சின்ன, சின்ன,ரியாக்‌ஷன்களில் சுரீந்தராக அழகான நடிப்பு, அதே சமயம் ஆர்பாட்டமான, காமெடி கலந்த பாடி லேங்குவேஜில் ராஜ் ஆக நடிக்கும் போது அவர் அலட்டும் அலட்டல் இருக்கிறதே.. சூப்பர். வழக்கபடி வினய் பதக் கலக்குகிறார்.

சலீம்- சுலைமானின் இசையில் “ஹோலே..ஹோலே’ என்ற பாடல் மட்டுமே ஹிட் ரகம். பிண்ணனி இசை பரவாயில்லை. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு கதையை மீறாமல் இயல்பாய் இருக்கிறது. அதிலும் அந்த பொற்கோயிலின் வெளிப்புறமும், அம்ரிஸ்டரின் வீதிகளும் அற்புதம். மேக்கப் துறை எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ஓரு அழகான விக்கை ஷாருக்கானுக்கு ரெடி பண்ண முடியவில்லையோ..?

வெறும் ஷாருக்கானை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்..Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

12 comments:

Anonymous said...

படத்தில் ஷாருக் ரொம்ப வயசானவரா தெரியல.. உங்கள் விமர்சனம் மிக சரியே.. முழுக்க, முழுக்க, ஷாருக்கை நம்பி எடுக்கப்பட்ட படம்..

Cable சங்கர் said...

அட ஆமாமில்ல..படத்துல அவரோட க்ளோஸப்ல ரொம்ப தெரியுது சான்சுவாஸ்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

astle123 said...

தனது ஒவ்வொரு படங்களிலும் (சக் தே, ஒம் சாந்தி ஓம் மற்றும் ஒரு அனிமேசன் படம் முழுக்க தமிழ் பேசும் பொம்மை தான் வில்லன்)
தமிழர்களையும், தென்னிந்தியர்களையும் கிண்டல் செய்து வரும் சாரூக் தமிழ் பட அந்நியனை காப்பியடித்தது தான் பேடித்தனம் !!

அதற்கு ஒரே காரணம் ரஜினிகாந்த் சென்ற வருடத்திறகான மிகச்சிறந்த இந்திய நடிகருக்கான விருதை பெற்றது தான்.

அவ்விழாவிலேயே அவரது பொறாமை உணர்ச்சி வெளி வந்தது.

http://www.rediff.com/movies/2008/jan/18rajni.htm

இனிமேலாவது பிறரின் மேலான தூஷனையை கைவிட்டு படத்தில் கவனம் செலுத்த வாழ்த்துவோம்.

astle123 said...

தனது ஒவ்வொரு படங்களிலும் (சக் தே, ஒம் சாந்தி ஓம் மற்றும் ஒரு அனிமேசன் படம் முழுக்க தமிழ் பேசும் பொம்மை தான் வில்லன்)
தமிழர்களையும், தென்னிந்தியர்களையும் கிண்டல் செய்து வரும் சாரூக் தமிழ் பட அந்நியனை காப்பியடித்தது தான் பேடித்தனம் !!


அதற்கு ஒரே காரணம் ரஜினிகாந்த் சென்ற வருடத்திறகான மிகச்சிறந்த இந்திய நடிகருக்கான விருதை ஷாருக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு பெற்றது தான்.

அவ்விழாவிலேயே அவரது பொறாமை உணர்ச்சி வெளி வந்தது.

http://www.rediff.com/movies/2008/jan/18rajni.htm

இனிமேலாவது பிறரின் மேலான தூஷனையை கைவிட்டு படத்தில் கவனம் செலுத்த வாழ்த்துவோம்.

Sridhar Narayanan said...

//படத்தில் ஷாருக் ரொம்ப வயசானவரா தெரியல//

அது மட்டுமா? நம்ம எழுத்தாளினி ஷோபா டே மேடம் சொல்றதைப் பாத்தீங்களா? :-))

Cable சங்கர் said...

//Sunday, December 14, 2008
SRK in a Shobhaa De saree....... stunning!!!
I really , really think Shah Rukh Khan will look lovely in one of my designer sarees......I 'll give him bangles to match. Gratis, of course. //

இத நான் சொல்லல..நம்ம பிரபல எழுதாளீனி ஷோபா டே சொல்லியிருக்காங்க.. நன்றி ஸ்ரீதர் நாராயணன்

Cable சங்கர் said...

தமிழ்மண மகுடத்தில இந்த பதிவை வரவழைத்த சக வாசகர்கள், பதிவர்களுக்கு நன்றி.. நன்றி

Karthik said...

//வெறும் ஷாருக்கானை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்..

நச்..!

Cable சங்கர் said...

//நச்..!//

நன்றி கார்திக்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்’

Anonymous said...

உங்கள் விமர்சனத்த பார்த்து விட்டு இந்த படத்தைப் பார்த்தேன்..

அட்லீஸ்ட் மே ஹூனா மாதிரி ஒரு mindless மூவியா இருக்கும்னு எதிர்பார்த்தேன்...அதுக்கும் சான்ஸ் இல்லை..

பல இடங்களில் மிகவும் எரிச்சலூட்டுகிறது....

அப்புறம் உங்க 'கிளீவேஜ்' கமெண்ட் ரொம்ப பொருத்தம்....படத்தில் நான் பார்க்கும்பொழுதெல்லாம்
உங்க விமர்சன் ஞாபகமே வந்தது..ஹீரோயினுக்கு மேல்பல் வரிசை பெரிதாகவும் குறைபாடாகவும்
தெரிந்ததைக் கவனித்தீர்களா...ம்ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் எங்கே கவனிக்கிறார்கள்..

Cable சங்கர் said...

நான் தான் சொல்லிட்டேனே.. ஷாருக்கை நம்பி எடுத்த படம் மத்தபடி ஒண்ணும் சொல்லிக்கிறமாதிரி இல்லைன்னு.. சொல்லற மாதிரி இருந்தது, அம்மணியோட க்ளிவேஜ்.. அவ்வளவுதான் .

Bleachingpowder said...

//ஒரு பெண்ணிற்கு மீசை இல்லாவிட்டால் தன் கணவனை அடையாளம் தெரியாது என்பதை நீங்கள் ஏற்று கொண்டால்//

ஒரு பெண்ணிற்கு மீசை இல்லாவிட்டாலா ????. பொண்ணுக்கு எப்போதுமே மீசை இருக்காது சார், அதுனால ஒரு கமா போடுங்க :)))

ரொம்ப லேட்டா வந்துட்டனோ