Thottal Thodarum

Dec 3, 2008

ஆணாதிக்கம்பூ படத்தின் முதல் பாடல் காட்சியை வெட்டிவிடபோவதாய் ஓரு செய்தி.. ஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமாய் இருக்கும் ஓரு பெண்ணின் காதலை பற்றி சொல்லும் படம்.. மிக அற்புதமாய், கவிதையாய் எடுக்கபட்டிருக்கும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லை. அதற்கு காரணம் படம் ஸ்லோவாக இருக்கிறது, கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளீப்பாடாகவே தோன்றுகிறது.

அழகி ஓரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை.. திருமணமான ஓரு ஆண் தன் காதலியை நீண்ட காலத்துக்கு பின் பார்க்கும் போது உருகும் காதலனை பற்றிய படம் எல்லோராலும் பாராட்டபட்டு மிக பெரிய வெற்றியை அடைந்தது.

பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான்.

அழகி படத்தில் டாக்டராய் இருக்கும் கதாநாயகன் கல்யாணமாகி குழந்தைகுட்டியுடன் சந்தோசஷமாய்தான் வாழ்ந்து வருகிறான். தன் பழைய காதலியை பார்த்ததும் உருகுகிறான். இந்த படத்தை பார்த்த எல்லா ஆண்களும் தன் பழைய காதலிகளை நினைத்து மருகி, உருகினர்.

எனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார். ஏன் என்று கேட்டால்.. அழகி தன்னை மிகவும் பாதித்துவிட்டதால் தன் பழைய காதல் நினைவுக்கு வந்துவிட்டதால் அப்படி செய்துவிட்டேன் என்றார்.. இதை பெரிது படுத்தாமல் ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இதே போல் ஓரு பெண் தன் விருப்ப வெறுப்புகளை வெளிபடுத்தினால் ஏற்றுக் கொள்ளாது.

ஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது..

என்னுடய கதை விவாத்தின் போது என் உதவியாளரிடம் கேட்டேன். “ஹிரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஓரு ஊடலின் முடிவில், கலவி ஏற்படுவதாய் காட்சியமைத்திருந்தேன்.”

அதற்கு அவர் “ சார்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோயின் படுத்தா கேரக்ட்ர் கெட்டு போயிரும். சனங்க ஒத்துக்க மாட்டாங்க..” என்றார். இதற்கு முன்னால் ஹீரோ ஓரு பெண் பித்தன் என்பதை ஒத்து கொண்ட அவர்..

ஆணாதிக்கம்..???


Blogger Tips -முத்தம் - சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


Post a Comment

24 comments:

முரளிகண்ணன் said...

\\எனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார்\\


தலைவரே, அது நீங்க இல்லையே.

சும்மா ஜாலிக்கு கோபிச்சுக்கிறாதீங்க.

ஜீன்ல இருந்து, பெற்றோர், சுற்றம் மூலமா ஆழமா செதுக்கப்படுறது ஆணாதிக்க சிந்தனை. அவ்வளவோ சீக்கிரமா நீர்த்துப் போகாது.

ஒரு விண்ணப்பம்

ஷூட்டிங் நடக்குரப்போ ஒரு நாளைக்காவது பார்க்க அனுமது கொடுங்க.

ஹீரோ ஹீரோயின் இருக்கப்ப கூட வேண்டாம். மற்ற காட்சிகள் எடுக்கும் போதாவது.

Cable சங்கர் said...

//ஜீன்ல இருந்து, பெற்றோர், சுற்றம் மூலமா ஆழமா செதுக்கப்படுறது ஆணாதிக்க சிந்தனை. அவ்வளவோ சீக்கிரமா நீர்த்துப் போகாது//

அப்படி நாமே சொன்னா எப்படி மாறும்.?

கண்டிப்பா ஓரு நாள் அழைக்கிறேன். கதாநாயகன்/நாயகி இருந்தால் என்ன நீங்கள் என் விருந்தினர்

கருப்பன் (A) Sundar said...

80களிளும் அதற்க்கு முற்பட்ட காலத்திலும்... பாடல்களிலேயே ஆணாதிக்கம் அதிகம் தெரியும். ஆண் பாடும் போது வாடி, போடி என்று ஒருமையில் பாடுவான், பெண் பாடும் போது வாங்க, போங்க என்று பன்மையில் பாடுவாள். 80களுக்கு பிறகு இந்த நிலை கொஞ்சம் மாறி வாய்யா போய்யா என்று பெண் பாடும் படி பாட்டு எழுதப்பட்டது. இப்போது பெண்ணும் வாடா போடா என்று பாடும் படி பாடல்கள் எழுதப்படுகின்றன... இப்படித்தாங்க கொஞ்சம் கொஞ்சமா காலத்துக்கு ஏத்தபடி படங்களும்/மக்களும் மாறுவாங்க, கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க ;-)

வனம் said...

வணக்கம்

நல்ல பதிவு

எதையும் மாத்தனும்னு நிணைக்கனும், நிணைச்சா மாத்தீடலாம்,

இப்படியும் ஒரு மாற்று சிந்தணைகளுடன் படங்கள் வரவேண்டும் வரும்

நன்றி

முரளிகண்ணன் said...

சங்கர் சார்

\\அப்படி நாமே சொன்னா எப்படி மாறும்.?
\\
ஆணாதிக்க சிந்தனை ஒழிய வேண்டுமென்றுதான் பல செயல்களை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னையும் அறியாமல் அது ஒட்டிக்கொண்டு இருப்பதாகவே சில சமயங்களில் தோன்றுகிறது.

10 வருடமாக இதைப்பற்றி பல புத்தகங்கள் படித்திருந்தாலும், கட்டுரைகள் எழுதியிருந்தாலும் முழுக்க முழுக்க அது என்னிடம் இருந்து அகலவில்லை.

அப்படியிருக்கும் போது, நாம் செய்வது ஆணாதிக்கம் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் எப்படி உடனே மாறுவார்கள்?

இந்த அர்த்தத்தில் தான் நான் பின்னூட்டம் இட்டிருந்தேன்.


என் மகனுக்கு சென்ற வாரம் வாட்டர் பாட்டில் வாங்க, அவனையும் அழைத்து சென்றிருந்தேன். பிங் நிறத்தில் பூ போட்ட பாட்டில் நன்றாக இருந்தது. அதை எடுக்கப் போனேன், உடனே அவன் சொன்னான் " டாடி அது கேர்ள்ஸ்க்கு". அவன் வயது 5. இப்பொழுதே அவனுக்கு எல்லா வித்தியாசமும் தெரிகிறது. கேர்ள்ஸை விட தான் உயர்ந்தவன் என்னும் எண்ணமும் அவனுக்கு இருக்கிறது.

இப்போது அடிக்கடி எல்லோரும் சமம் என்று அவனுக்கு சொல்லித் தந்து வருகிறேன். ஆனால் செயலில் காண்பிப்பது சற்று கடினமாகவே இருக்கிறது. (சமையல், துப்புரவு).

Raj said...

//கண்டிப்பா ஓரு நாள் அழைக்கிறேன். கதாநாயகன்/நாயகி இருந்தால் என்ன நீங்கள் என் விருந்தினர்//

முதலிரவு காட்சிகள் எடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள்...நானும் ஆஜராகி விடுகிறேன்...தப்பா நினச்சுக்காதீங்க..எதிர்காலத்துல நாம படம் எடுக்கும்போது...கொஞ்சம் கூச்சமில்லாமல் வேலை பார்க்க ஒரு அனுபவம் கிடைக்குமே

Raj said...

//தலைவரே, அது நீங்க இல்லையே.//

எனக்கும் அதே சந்தேகம்தான்

நவநீதன் said...

ஆணாதிக்கத்த பத்தி பக்கம் பக்கமா எழுதலாம்....
நாம ஆண்களா இருக்கிறதால நாம் உணர்ற ஆணாதிக்கம் ரொம்ப கம்மி தான்...
நீங்கள் உணர்ந்த ஆணாதிக்கத்த பத்தி அழகா எழுதிருக்கீங்க...

நவநீதன் said...

ரொம்ப நாலா எனக்கும் ஷூட்டிங் பாக்க ஆசை...
என்னையும் அனுமதியுங்களேன்...

அக்னி பார்வை said...

//ஷூட்டிங் நடக்குரப்போ ஒரு நாளைக்காவது பார்க்க அனுமது கொடுங்க.
///

என்னையும் இந்த விளையாட்டுல சேர்துங்கா.

முரளி , சங்கர் ஏமாத்திறாதீங்க..

அக்னி பார்வை said...

ஆண் ஆதிக்கம் என்பது சில நேரங்களி சமுதாயம் கூட புகுத்தி விடுகிறது ‘ இடொ பார்ரா இவன் பொண்டாட்டி தாசன்’

பொன்ற சொற்களை தவிர்க்கவே நல்ல ஆண்கள் விரும்புகிறார்கள்..

Athisha said...

அட !

சூப்பர் தல.. சின்னபதிவுனாலும் ஆளமா இருக்கே.

Cable சங்கர் said...

nandri karuppan

Cable சங்கர் said...

//இப்படியும் ஒரு மாற்று சிந்தணைகளுடன் படங்கள் வரவே//ண்டும் வரும்//

நன்றி வனம் உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும்

Cable சங்கர் said...

//இப்போது அடிக்கடி எல்லோரும் சமம் என்று அவனுக்கு சொல்லித் தந்து வருகிறேன். ஆனால் செயலில் காண்பிப்பது சற்று கடினமாகவே இருக்கிறது. (சமையல், துப்புரவு).//

athu ennavo sarithaan murali sir

Cable சங்கர் said...

//கொஞ்சம் கூச்சமில்லாமல் வேலை பார்க்க ஒரு அனுபவம் கிடைக்குமே//

padamedukka thaanee..???

Cable சங்கர் said...

//எனக்கும் அதே சந்தேகம்தான்//.

கண்டிப்பா நான் இல்லை தலைவரே

Cable சங்கர் said...

//நாம ஆண்களா இருக்கிறதால நாம் உணர்ற ஆணாதிக்கம் ரொம்ப கம்மி தான்...//

athu ennavo sarithan
navaneethan

Cable சங்கர் said...

//ரொம்ப நாலா எனக்கும் ஷூட்டிங் பாக்க ஆசை...
என்னையும் அனுமதியுங்களேன்...//

sure

Cable சங்கர் said...

//சூப்பர் தல.. சின்னபதிவுனாலும் ஆளமா இருக்கே.//

thanks athisha

Cable சங்கர் said...

ஆண் ஆதிக்கம் என்பது சில நேரங்களி சமுதாயம் கூட புகுத்தி விடுகிறது //

athuvum kuda sarithan agniparvai. thanks for your reply

Anonymous said...

indha post padichavudanayae
poo padam paarkkanum pola irukku

aana inga coimbatore la engae potrukkannu theriyalae

Silly Village Girl said...

Mr.Sankar,

I appreciate your post. Its convicing to note that most of them commented for your post have agreed with it. It's welcoming change atleast for the generation to come.

Cable சங்கர் said...

//I appreciate your post. Its convicing to note that most of them commented for your post have agreed with it. It's welcoming change atleast for the generation to come.//

i too expect the same silly village girl. thanks for your comment and your visit