
D.சரண்யா. புவியியல் பாடத்தில் 200/195 2006ல் எடுத்தவர்.
எனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். வருடா வருடம் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பத்தாவது, மற்றும் +2 தேர்வுகளில் ஸ்டேட் பர்ஸ்டாக வரும் மாணவ, மாணவிகள் பலரும் தாங்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற்றார்கள், தங்களுடய பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அவர்களுக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் சொல்வார்கள். அதிலும் மாணவிகள், தங்கள் எதிர்காலத்தில் டாக்டர் ஆகப் போறேன்.. இன்ஜினியர் ஆக போறேன்னு தங்கள் கனவுகளை சொல்வார்கள்.
அவங்க அப்படி சொல்லும் போது அவங்க கண்ல தெரியில கனவுகளும், அவர்களின் உழைப்புக்கான வெற்றி கிடைச்ச சந்தோசம் நிஜம். ஆனா வாழ்க்கை எல்லாருடய கனவுகளை நிஜப்படுத்துவதில்லை..

சென்ற வருடம் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவிகள் ரம்யா, ரூபிகா
சில வருடங்களூக்கு முன் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவ, மாணவிகளின் கனவுகள் நிறைவேறிச்சா.. பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. +2வில ஏன் அந்த அளவுக்கு ஸ்கோர் பண்ண முடியல.. அட்லீஸ்ட் ஸ்கூல் பர்ஸ்டாவது வந்தாங்களா..? +2வில ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. இப்ப என்ன பண்ணுறாங்க?
கடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யாராவது ஸ்டேட் பர்ஸ்ட் மாணவ, மாணவிகள் இருந்தா.. விசாரிச்சு சொல்லுங்களேன். அவர்களின் கனவு கண்டிப்பாய் நிறைவேறியிருக்க பிரார்த்திக்கும்......
உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...
Comments
நான் சொன்னன்ல
அண்ணன் ரொம்ப நல்லவரூரூரூ
நான் சொன்னன்ல
அண்ணன் ரொம்ப
நல்லவரூ ரூ ரூ
அண்ணன் ரொம்ப
நல்லவரூ ரூ ரூ//
:):):):):):):):):(:(:(??????
தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
சரி.. சரி. தெரியலைன்னா பரவாயில்லை.. எதுக்கெடுத்தாலும் அழப்படாது.. என்ன.. என்ன.. சொல்றது புரிஞ்சுதா..?
வாழ்த்துக்கள்.
ஆமா, அது என்ன இந்த அத்திரி எதுக்கெடுத்தாலும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
அவர் பெயரை அவ்வ்வ்வ்வ்வ் அத்திரினு மாத்திரலாமா?
குத்தல..குத்தல்.. பொய் சொல்லபடாது..
வாழ்த்துக்கள். //
நன்றி தராசுசார்.. நீங்க கூட முயற்சி செய்யுங்க சார்.. மீண்டும் நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
அவர் பெயரை அவ்வ்வ்வ்வ்வ் அத்திரினு மாத்திரலாமா?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..னு மாத்தட்டுமான்னு கேட்டதுக்கு அளுகறாரூ...
முக்தி அடிந்தால் மட்டுமே மேற்கொண்டு முயற்சி செய்யத் தேவையில்லை.
முக்தியடைவது என்பது தெரியும்தானே......
நீங்கள் சொல்வது உண்மையென்றாலும்.. எனக்கு தெரிய ஆசைப்படுவது.. அப்படி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் இன்றைய நிலை என்ன..? என்பதுதான் சுரேஷ்.
நல்ல கல்லூரியில் இடம்பிடிக்க தேவையான பாடங்களில் தேவையான மதிப்பெண்கள் எடுத்தால் போதும்.
நாங்கள் படிக்கும்போது மொழிப் பாடங்களை சாமிக்கு விட்டுவிடுவோம். அதில் தேர்ச்சிப் பெற்றாலே போதுமே.. படிக்க ஆரம்பிக்கும்போது அதைப் படிப்போம். பிற்கு விருப்பப் பாடங்கள் மட்டுமே...........
அப்படிப் படிக்குமாறுதான் நாங்கள் பழக்கப் படுத்தப் பட்டோம். சோ முதலிடத்திற்கு இங்கே வாய்ப்பேயில்லை. தேவையும் இல்லை......
http://www.sanakannan.com/plustwo.html
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
முதல் மார்க் வாங்கியவர்கள், அனேகமாக, நல்ல கல்லூரிகளில் சேர்ந்து முன்னேறிவிடுகின்றனர்...
ஒரு சிலரைத்தவிர..
நமக்குதான் வெளியில் அடுத்து என்ன என்று தெரிவதில்லை..
//
அந்த பதிவில் எப்படி முதல் மதிப்பெண் எடுத்தார்கள் என்றுதான் இருக்கிறது. அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் வென்றனவா.. என்பது தான் என் கேள்வி..
என்னுடய கேள்வி இது இல்லை.. அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்பதுதான்.
என்னுடய கேள்வி இது இல்லை.. அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்பதுதான்.//
ஐயா கேபிள் சங்கர் அவர்களே....
நீங்கள் என்ன கேட்கிறீர்கள்.
ரமனா பாணியில் யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் ....பள்ளீகள் உள்ளன. .....பாடப்பிரிவுகள் உள்ளன. ......தேர்வுகளில் ...பேர் முதலிடம் பிடிக்கிறார்கள். .......மேனிலைக் கல்விகள் உள்ளன. ,,,வேலை வாய்ப்புகள் உள்ளன். அதில் நன்கு படித்தவர்கள் ...பேரும் படிக்காதவர்கள் ....பேரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். மீதம் இருப்பவர்கள் ...பேர்.