Thottal Thodarum

Sep 5, 2008

"தனம்” -விமர்சனம்
ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல நினைத்து பில்டப் செய்வதும், அவரும் அதற்கு ஏற்றார் போல் ரஜினி பாஷா போல க்ளைமாக்ஸில் செய்வதும் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர்.


ஓரு ஆச்சாரமான இளைஞன் எப்படி ஓருவிபசாரியிடம் தன்னை இழக்கிறான் என்பதற்கே சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் மனதில் ஓட்டவில்லை. அப்படி ஓட்டாததால் அவர்களூக்குள் என்ன நடந்தால் நம்கென்ன என்ற மன நிலையிலேயே நம்க்கு தோன்றுகிறது.
அதிலும் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ் ஹைதராபாத்தில் சங்கீதாவை விபசாரத்துக்கு அழைக்க அவருக்கு இஷ்டமில்லாமல் இருக்க, அதை வைத்து ஓரு காமெடி சீன் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ஓன்றும் எடுபடவில்லை.

தினம் 500ரூபாய் ஓருவருக்கு என்று வாங்கி அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் அதை வாரி இறைத்து அதன் மூலம் அவர் ஓர் தியாகி என்று காட்ட நினைந்திருப்பதும், அவரை காப்பாற்றுவதற்காக, நீதிபதி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் போராடுவது எல்லாம் ஓரே தமாஷ்.

அதையெல்லாம் விடுங்க, கல்யாணத்துக்கு அந்த ஆச்சாரமான ஓரு குடும்பத்து தலைவன் எதற்கு சம்மதிக்கிறான் தெரியுமா? அவளின் ஜாதகத்தை பார்த்து இவள் உங்கள் வீட்டின் தனலஷ்மி, இவள் உங்க வீட்டில் வந்தால் உங்கள் வியாபார நஷ்டமெல்லாம் சரியாகி கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என்றவுடன் அதை ஏற்பது கொஞ்சம் கூட ஏற்பதற்கில்லை. அதைவிட அந்த சாமியாரின் இச்சைக்கு உடன்பட்டாததால் அவளூக்கு பிறந்த குழந்தையால் குடும்பத்துக்கு கெடுதல் என்று சொல்லி அந்த் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொல்வதும் ஏற்டுக்கொள்ள முடியவில்லை.

தான் பெற்ற குழந்தை தன் தாயின் அவதாரமாய் நினைத்து கொண்டிருக்கும் சங்கீதா, அதை கொன்றது அவளின் குடும்பம் தான் என்று தெரிந்தவுடன் மொத்த குடும்பத்துக்கும் ,சாமியாருக்கும் சேர்த்து சாப்பாட்ட்டில் விஷம் வைத்து கொல்வது போன்ற அதிரவைக்கும் க்ளைமாக்ஸ் இருந்தாலும், சங்கீதா கேரக்டரின் மீது அவ்வளவாக ஈடுபாடு ஏற்படாததால் , எல்லாமே விழலுக்கு இறைத்த நீர். பாவம் சங்கீதா தன்னை ஓரு ரஜினியாக பாவித்து நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தில் க்ரிஷ்கர்னாட்,ஜீவா,இளையராஜா போன்ற ஜாம்பவான்களை எல்லாம் போட்டு விட்டால் படம் ஓடிவிடும் என்று நினைத்தால் ம்..ஹூம்..

படத்தில் நன்றாக இருப்பது பாலசேகரின் கேமராவும், இசைஞானி இளையராஜாவின் “கண்ணனுக்கு என்ன் வேண்டும்” என்ற பாடல் தேவராகம்.

ஓரு ஏரியாவையே கட்டி காப்பாத்தும் சங்கீதாவை அந்த மக்கள், மகள், தங்கச்சி என்று அழைத்துக் கொண்டு, அவளுக்கே ஆள் கூட்டி கொடுப்பதாக காட்டுவது ஹைதராபாத்தில் ஓரு இடத்தில் கூட தெலுங்கு பேசாமல் இருக்கும் மக்களை காட்டுவதும், கதை நடக்கும் காலத்தை ரிஜிஸ்டர் செய்ய மறந்ததும் போன்ற பல குறைகள் படத்துடன் ஓட்ட மறுக்கிறது.

விலைமாதரை பற்றிய படம், எதாவது பிட்கிட்டு இருக்கும்னு பாக்க வேணாம் படம் படா போர். சும்மா இழுத்து போத்திகிணு வராங்க சங்கீதா.
Post a Comment

11 comments:

லக்கிலுக் said...

//எதாவது பிட்கிட்டு இருக்கும்னு பாக்க வேணாம் படம் படா போர். சும்மா இழுத்து போத்திகிணு வராங்க சங்கீதா. //

அய்யய்யோ. என் நெனைப்புலே மண்ணை அள்ளி போட்டுட்டீயளே? :-(

Cable சங்கர் said...

//அய்யய்யோ. என் நெனைப்புலே மண்ணை அள்ளி போட்டுட்டீயளே? :-(//

அதுக்குதான் சொன்னேன்.

கணேஷ் said...

நல்லவேளை சொன்னிங்க (படத்தில மேற்படி விஷயம் ஒன்னும் இல்லைன்னு)...... இல்லேன்னா அந்த பொக்க படத்த நாங்களும் பார்த்திருப்போம்... நீங்க நல்ல இருங்க சாமி

கணேஷ் said...
This comment has been removed by the author.
முரளிகண்ணன் said...

கெட்ட செய்தி

thamizhparavai said...

inthap padam rompa ethipaarthtaen...aemaaththittanga..
ilaiyaraaja 'kaNNanukku enna vaeNdum','kattilukku mattumthaana','kooththu oNNu' mUNu paatai inthap padaththula poattu waste pannittarae...

Cable சங்கர் said...

ஆமாம் தமிழ் பறவை. என்ன செய்வது.. நல்ல பாட்டெல்லாம் வேஸ்டா போவுது.

பரிசல்காரன் said...
This comment has been removed by a blog administrator.
Thamira said...

கொஞ்சம் பெட்டரா எதிர்பாத்தேன், போச்சா? ஏந்தான் இப்படி சுவாரசியமா சொல்லவேண்டிய கதைகளை வேஸ்ட்டாக்குறாங்களோ?

தமிழன்-கறுப்பி... said...

அடப்பாவமே...நான் சங்கீதாவுக்காக பாக்கலாம்னு இருந்தேன்...

யாத்ரீகன் said...

அய்யய்யோ. என் நெனைப்புலே மண்ணை அள்ளி போட்டுட்டீயளே? :-(

நீங்க நல்ல இருங்க சாமி

நான் சங்கீதாவுக்காக பாக்கலாம்னு இருந்தேன்...

repeatuuuuuuuuuuuuuuuuuuuuuuu