Rangeen- Hindi Web Series Review
ஆதர்ஷ் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளன். சொந்தமாய் பத்திரிக்கை ஒன்றை பார்ட்னருடன் நடத்தி வருகிறான். அவனுக்கு அழகான மனைவி நைனா. குழந்தைகள் இல்லை. நைனா வேறொரு இளம் வாலிபனான சன்னியுடன் சல்லாபம் செய்து கொண்டிருப்பதை ஆதர்ஷின் அக்கா பசங்கள் வீடியோ எடுத்து அனுப்ப, கையும் களவுமாய் மாட்டிக் கொள்கிறாள். சன்னியை துறத்திக் கொண்டு போய் மிஸ்ஸாகி, அவன் யார் என்று கண்டுபிடிக்கும் போது தான் தெரிகிறது. அவன் ஒரு ஜிகாலோ என்று. நான் ஒருவன் இருக்க, அவள் ஏன் ஜிகோலோவை தேடினாள் என்பது அவனது ஆண் ஈகோவை தட்டிவிட, மனைவி அவனை எதிர்கொள்ள முடியாமல் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி, அம்மா வீட்டில் போய் கிட்டத்தட்ட ஒளிந்து கொள்கிறாள். பத்திரிக்கையாளனான ஆதர்ஷுக்கு தானும் ஒரு ஜிகோலோ ஆக வேண்டும் என்று முடிவு செய்து ஜிகாலோ ஆகிறான். அதன் பின் என்ன ஆனது என்பது தான் கதை. செம்ம நாட். ஆதர்ஷாக வினீத் குமார் சிங். மனைவி தன்னை விட்டு வாடகை ஆணை தேர்ந்தெடுத்தது குறித்து ரியாக்ட் செய்யும் இடமாகட்டும், ஜிகாலோ பற்றி தெரிந்து கொள்ள விழைந்து ஏடாகூடமான இடங்களில் மாட்டிக் கொள்ளும் இடமாகட்டும், ஜிகாலோவாக மாறி க்ளையண்டுகளை இம்ப்ரஸ் செய்...