Posts

Showing posts with the label சாமியார்

”ஆமென்”

”ஆமென்” என்கிற புத்தகம் வெளிவந்த ஆறே மாதங்களில் 12 பதிப்புகளை கண்டிருக்கிறது. இதை எழுதிய பெண் தலைமறைவாக இருக்கிறாராம். அவர் பெயர் சகோதரி ஜெஸ்மி. இவரது புத்தகத்தில் பாதிரியாரால் பாலியல் ரீதியான பலாத்காரத்துக்குள்ளாகி தான் பட்ட வேதனைகளை, கொடுமைகளை பற்றி எழுதிய புத்தகம் தான் அது. இப்புத்தகம் உலகம் முழுக்க பலமான அதிர்வுகளை ஏற்படுதியுள்ளது என்றால் அது மிகையில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் இவர் ஆமென் புததகத்தின் இரண்டாவது பாகத்தை எழத ஆரம்பித்திருக்கிறார். இவர் எழுதிவரும் புத்த்கத்தின் மூலமாய் வறுமையினால் வாடும் அப்பாவி பெண்கள் சேவைக்காக தங்களை அர்பணித்து திருச்சபைகளில் கன்யாஸ்த்திரிகளாய் தஞ்சம் அடைபவர்களை, பாதிரியார்கள் பாலியல் ரீதியாய் சித்திரவதை செய்வதை பற்றி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் புத்தகமாய் இருக்கும் என்கிறார் ஜெஸ்மி. சமீபத்தில் கூட ஊட்டியில் ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்கிற பாதிரியார் மீது அமெரிக்காவில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டு அது கிட்டத்தட்ட நிருபிக்கப்பட்ட நிலையில் இவர் அங்கிருந்து தப்பி இங்கே ஊட்டியில் குஜாலாக இருந்திருக்கிறார். ...