Posts

Showing posts with the label Ellan avan seyal

எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.

Image
இருக்கிற கெட்டவர்களையெல்லாம் சட்டத்தின் உள்ள ஓட்டையை கண்டு பிடித்து அவர்களை விடுதலை செய்து, பின்பு அவர்களை கொல்கிறார் கதாநாயகன் எல்.கே. அவனின் பேருக்கு விளக்கமாய் Licence to Kill என்று சொல்லபடுகிறது. ஏற்கனவே மலையாளத்தில் வந்து சக்கை போடு போட்ட “சிந்தாமணி கொலை கேஸ்” என்கிற படத்தின் தமிழாக்கம்தான். மளையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கேரக்டரில் ஓரு புதுமுகம்.. பார்பதற்கு இவரும் ஆஜானுபாகுவாய்.. மலையாள ஹீரோ போலவே இருக்கிறார். என்ன நடிக்கத்தான் வர மாட்டேன்கிறது.. எப்போது பார்த்தாலும் க்ளோசப் காட்சிகளில் எதிரே யாரோ சிரிப்பு காட்டி கொண்டிருப்பதை அடக்கி கொண்டு சீரியஸாய் பார்பது போலிருக்கிறது.. கொஞ்சம் உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிடுங்கள்.. அவர் எப்படி இருப்பார் என்று புரியும்.. சிந்தாமணி என்கிற ஓரு ஏழை பெண் மெரிட்டில் மெடிக்கல் காலேஜ் சீட் கிடைத்து வருகிறாள். அங்கே காலேஜில் இருக்கும் ஸ்பைஸ்கேர்ள் என்று அழைக்கபடும் 9 பெண்கள் அவரை ராகிங் செய்து.. நம்ம ஊர் நாவரசன் போல் துண்டு துண்டாய் அறுத்து கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து எல்.கே எவ்வாறு வெளி கொண்டு வருகிறான். அந்த ஒன்ப...