Posts

Showing posts with the label விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா?

மின்னம்பலம் கட்டுரை -விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா?

விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா? விவேகம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து இணையமெங்கும் ப்ளூ சட்டைக்காரர் எனும் விமர்சகரை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சியிலிருந்து வெளிவந்த ரசிகர்கள் உட்பட விமர்சனம் ரெண்டும் கெட்டானாய் இருக்க, இணைய விமர்சகர்கள் ஆளாளுக்கு வலிக்காமலும், வலித்தா மாதிரி காட்டிக் கொள்ளாமலும், படம்னா இதுதாண்டா படம் என்று அஹா ஓஹோ என பாராட்டியும் விமர்சனங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ப்ளூ சட்டைக்காரர் மட்டும் வழக்கம் போல கழுவி ஊத்தி விட்டார்.  ஒவ்வொரு முறை பெரிய பட்ஜெட், நடிகர் படம் வரும் போதும் இதே பிரச்சனை தான். ஆரம்பத்திலிருந்து இன்று வரை இணையத்தில் வரும் விமர்சனங்களால் எங்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றே சொல்லி வந்தாலும், நிஜத்தில் இதற்கான பாதிப்பு இருக்கிறது என்று  திரையுலகத்தினர் நம்புகின்றார்கள் என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் இத்தனை கூப்பாடு தேவையேயில்லை. ஒரு காலத்தில் பத்திரிக்கை விமர்சனங்களைத் தவிர வேறு விமர்சன ஊடகமேயில்லாத நிலையில் பாஸ் மார்க் வாங்கினாலே ஒரளவுக்கு தப்பிச்சோம் என்று ஒரு பத்திரிக்கை விமர்சனத்துக்காக காத்த...