Posts

Showing posts with the label sattru mun kidaitha thagaval

சற்று முன் கிடைத்த தகவல் - திரை விமர்சனம்

Image
சில வருஷங்களுக்கு முன்னால் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ஊர்மிளாவும், மனோஜ் பாஜ்பாயும் நடித்து வெளிவந்த “Koun" என்கிற இந்தி படத்தை திரும்ப எடுத்திருக்கிறார்கள். அந்த படமே ஒரு ஒகே படம். மனோஜின், ஊர்மிளாவின் நடிப்பில், ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் சுமாராக இருக்கும். அதை எடுக்கிறேன் பேர்விழி என்று முதலில் ஆரம்பித்தவர் தக்காளி சீனிவாசன் என்பவர். இவ்ர் ஏற்கனவே அதிசயமனிதன், ஓமன் படத்தை தமிழில் ஓரளவுக்கு நல்லபடியாய் தந்தவர். முதலில் அவர் ஆரம்பித்ததும் ஓகே ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதற்கப்புறம் என்ன ஆனதோ தெரியவில்லை. அவர் அதிலிருந்து விலகி, தீடீரென்று புது இயக்குனர்.. புவனைகண்ணன், கனல் கண்ணன் என்று சில கண்ணன்கள் சேர்ந்து கொத்திவிட்டார்கள். சே.. என்ன இது விமர்சனம் எழுதறதுக்கு பதிலா பிலிம் நியூஸ் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். மனநல காப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் தனியாய் இருக்கும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைகிறான். அதற்கு அப்புறம் என்னவாகிறது என்பதே கதை.. லைன் என்னவோ நல்லாத்தான் இருக்குது. இந்தி படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஊர்மிளாவின் நடிப்பு மிக நன்றாக இருக்கும் இதில் ...