Posts

Showing posts with the label aha

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?    அமேசானில் நேரிடையாய் வெளியாகி நல்ல படம் என்று பெயர் எடுத்தபடங்கள் என்று பார்த்தால் , சகுந்தலாதேவி, சீ யூ சூன் மட்டுமே . அமேசான் தெலுங்கு , தமிழ் , மலையாளம் , இந்தி என அமிதாப்பின் குலாபோசித்தாபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி , ஜோதிகாவின் பொ . ம . வ . பென்குவின் , கன்னட லா , ப்ரெஞ்சு பிரியாணி , மலையாளம் சுஜாதையும் .. , சி யூ சூன் . ஆகியவை எட்டு படங்களில் ரெண்டு ஹிட் என்பது வழக்கமாய் இந்தியாவில் தயாராகும் படங்களின் வெற்றி சதவிகித   அடிப்படையில் பார்த்தால் நல்ல ஆவரேஜ் தான் . இந்தியாவில் வெளியாகிற அத்தனை படங்களும் ஹிட் அடித்துக் கொண்டிருந்தது போலவும்,   இப்போது அமேசான் போன்ற ஓடீடீ தளங்களில் வெளிவந்ததினால் தான் தோல்வி என்று சீன் போடக் காரணம் . நம்பர் விளையாட்டு இவர்களால் ஆட முடிவதில்லை . இத்தனை கோடி கலெக்‌ஷன் , அத்தனை கோடி கூட்டம் , என் பொய் நம்பர் சொல்ல முடிவதில்லை . ரசிக மனப்பான்மை கோஷங்கள் இல்லை . அமேசானும் எத்தனை பேர் பார்த்தார்கள் என்கிற க...