Up – Review
5 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய என் அன்பு சக பதிவர்களூக்கும்,வாசகர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றிங்கோ... கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். Lion King, Finding Nemo,வை எல்லாம் மனப்பாடம் செய்யும் அளவிற்கு பார்த்தவன். அதில் அவர்கள் கதை சொல்லும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும். நோகாமல் அட்வைஸ் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு புரியும் படி. சரி படத்துக்கு வருவோம். படம் ஆரம்பித்து பத்து, பதினைந்து நிமிடங்களில் ஒரு சிறுவன், சிறுமி நண்பர்களாகி, வளர்ந்து, திருமணம் முடித்து, வயதாகி, மனைவி இறந்துவிட, என்னடா ஒரே டீவி சீரியல் கதையாய் இருக்கிறதே என்று யோசித்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த போது, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஒரு பள்ளி சிறுவன் வயதானவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் ஒரு பதக்கம் பெற இவரை அணுக, அதே நேரத்தில் அக்கம் பக்கம் வீடு கட்டுவதால், ஏற்படும் பிரச்சனை, அது மட்டுமில்லாமல் மனைவியின் ஆசையை ஒரு பெரிய பள்ளத்தாக்கு, அதில் மேலிருந்து கொட்டும் அருவி, அதன் முனையில் ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற இளமையில் அட்வென்சர் செ...