கண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.
கண்ணுக்குள்ளே திரைப்படத்தின் இயக்குனர் திரு. லேனா மூவேந்தருடன் ஒரு பேட்டி.. உங்க படத்தை பற்றி சொல்லுங்க? ஒரு நல்ல படத்தை, வித்யாசமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை, மனதை வருடும் காட்சிகளோடு, எல்லாத்துக்கும் மேல ராஜா சாரோட இசையோடு கொடுத்திருக்கிறேன்ற, சந்தோஷத்தில இருக்கேன்.. வர்ற 25ஆம் தேதி ரிலீஸ்.. உங்க கதாநாயகனை பற்றி..? கதாநாயகனா கும்மாளம் படத்தில் நடிச்ச மிதுன் நடிச்சிருக்கார். இவரு கிட்ட முதல்ல கதை சொல்லப் போகும் போது, நான் சொன்ன முத விஷயம்.. “சார்.. படத்துல பஞ்ச் டையலாக் கிடையாது, பில்டப் கிடையாது.. ஃபைட் கிடையாது.. ஏன்.. படத்தோட ஆரம்பத்துல முத 20 நிமிஷம் உங்களுக்கு டயலாக்கே கிடையாது.” இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா. ஏற்கனவே ஒரு ஹீரோ கிட்ட நான் கதை சொன்ன போது இதெல்லாம் இல்லைன்னு சொன்னாரு.. அதனால் தான் முதல்லேயே உங்க கிட்ட சொல்றேன். என்றவுடன்.. பரவாயில்லை சொல்ல்லுங்கனு சொன்னாரு. கதை கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்து ஒப்பு கொண்டார். இந்த படம் மூலம் மிதுன் நிச்சயமாய் தமிழ் சினிமாவில் பேசப்படக்கூடிய நடிகராய் இருப்பார். உங்க கதாநாயகிகள்..? அனு என்கிற கேரள வரவு. மிகவும் குடும்ப பாங்கான, பக்கத்து வீ...