Posts

Showing posts with the label tamil cinema quaterly second report

தமிழ் சினிமா இரண்டாவது காலாண்டு ரிப்போர்ட்

ஏப்ரல் 2011 நஞ்சுபுரம், சன்னின் மாப்பிள்ளை, பிரசாந்தின் பொன்னர் சங்கர், கே.வி.ஆனந்தின் கோ, சிம்புவின் வானம் என்று கலந்தடித்து படங்கள் வெளிவந்தது. ராமநாராயணன் வெளியிட்டும் நஞ்சுபுரத்தின் விஷம் ஏறவில்லை. சன் வெளியிட்ட தனுஷின் மாப்பிள்ளை மீண்டும் சன்னுக்கு மட்டுமே சூப்பர் ஹிட் படமாய் தெரிந்தது. கலைஞர் கதை, திரைக்கதை வசனத்தில், பிரசாந்தின் இரட்டை வேட நடிப்பில் வெளிவந்த பொன்னர் சங்கர். ஒன்றும் சொல்லிக் கொள்ளூம்படியாய் இல்லை. படத்தை தியேட்டரிலிருந்து எடுத்தும் இன்றளவில் சில சமயம் கலைஞர் டிவியில் மட்டும் விளம்பரம் வருகிறது.