Posts

Showing posts with the label சீனு ராமசாமி

பதட்டமான சந்தோஷ விழா

Image
  வழக்கம் போல உங்கள் எல்லாருடய அன்பும், ஆசியுடன் சிறப்பாக நடந்தேறியது புத்தக வெளியீட்டு விழா.  வாரநாட்களாதலால் நண்பர்கள், பதிவகர்கள் எல்லோரும் அலுவலகம் முடித்து வருவதற்கு சிரமம் மேற்க்கொண்டுதான் வந்தார்கள். விழா என்னவோ சிறப்பாகத்தான் நடந்தாலும் பதட்டமாய்த்தான் ஆரம்பித்தது. ஆம் பதட்டம் தான். என் எல்லா விழாக்களிலுமே நடக்கும் பதட்டமான சம்பவங்களோடு விழா இனிதே ஆரம்பித்தது.   நடிகர் மோகன் பாலு முதல் ஆளாக வந்தார். மிக இனிமையான மனிதர். நிறைய வாழ்வனுபவம். வாசிப்பனுபவமும் உடையவர். எதை செய்தாலும் பெரும் ஈடுபாட்டோடு முழுதாய் தன்னை அர்பணிப்பவர். அது அவர் முதலாய் நடித்து வெளிவர இருக்கும் “அரும்பு மீசை.. குறும்பு பார்வை” படம் பார்த்தால் தெரியும்.  அடுத்து வந்தவர் நண்பர் இயக்குனர் திரு. சீனு இராமசாமி. இவருடன் எனக்கு பெரிதாய் பழக்கம் கிடையாது. அவரது தென்மேற்கு பருவக்காற்று திரைப்பட காட்சியில் தான் சந்தித்தேன். அதன் பிறகு அவரிடம் தொலைபேசியில் என்னுடய புத்தகவிழாவுக்கு வரமுடியுமா? என்று கேட்டவுடன், என்னைக்கு? என்று கேட்டுவிட்டு உடனடியாய் தேதி கொடுத்தவர். நிகழ்ச்சி ஆரம...