அடுக்குகளிலிருந்து - அமுதன்
அமுதனைக் கண்டால் என் ஆபீசில் வேலை செய்யும் பெண்ணைத் தவிர யாருக்கும் பயமே வராது. அவள் கூட ஒரு கட்டத்தில் அவனைப் பார்த்தால் உட்கார்ந்த மாத்திரத்தில் போ..போ என்று சைகையாய் சொன்னதும் ஏதும் பேசாமல் போய்விடுவான். ஆனால் தினமும் காலையில் எழுந்ததும் என் ஆபீசின் வாசலில் வந்து அரை மணி நேரம் நிற்காமல் போக மாட்டான். அமுதன் எதிர்வீட்டு ராகவாச்சாரியின் மகன். மூத்ததாய் ஒர் பெண். ஊருக்கெல்லாம் ஜாதகம் பார்க்கும் அவருக்கு கட்டம் சரியில்லை என்றே சொல்ல வேண்டும். மகளின் வாழ்க்கையும் சரியாய் அமையவில்லை. மகன் அமுதன் மனநிலை சரியில்லாதவன். ஆனால் இக்கவலைகள் எதையும் காட்டாமல் ராகவாச்சாரி சந்தோஷமாய் காலையில் நேற்று நடந்த கிரிக்கெட் மேட்ச் பற்றிய காலத்தை படித்துவிட்டு, மீண்டும் ரீடெலிகாஸ்டை பார்ப்பார். மீண்டும் சாயங்காலம் வந்து விவாதிப்பார். ராகவாசாரியின் பெண் அப்படியே அம்மா அப்பாவின் கலந்தடிக்கப்பட்ட ஜெராக்ஸ். அமுதனிடன் ராகவாச்சாரியின் தடம் கூட தெரியாது.