என்னா வாய்ஸ்டா?
சென்ற வருடம் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்2 வில் அல்கா அஜித் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியைப் பற்றி நிறைய பேர் மலையாளி, ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா? என்றெல்லாம் பேசினார்கள். பைனலின் போதான அவரின் சிங்காரவேலனை கேட்டும் கூட. இதோ இப்போது அவரின் முதல் திரைப்படப் பாடல். ஸ்ரீனிவாசின் இசையில் பாடியிருக்கிறார். அருமையான கம்போசிஷன். குரலை மட்டுமே வைத்து அதிக வாத்தியங்கள் இல்லாமல் போடப்பட்ட சூப்பர் மெலடி. ஒரு இடத்தில் ஒரு ஹைபிட்சில் போகும் இடத்தை கேளுங்கள். கண்களில் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். நெகிழ்வில். ஷி டிசர்வ் த டைட்டில். வாழ்த்துக்கள் அல்கா. .