Delhi Belly
சமீபத்தில் இவ்வளவு உற்சாகமாய் சிரித்து படம் பார்த்தது ஹாங் ஒவர் 2 வில் தான் என்று ஞாபகம். இந்தப்படம் ஹாங் ஓவருக்கான இந்திய பதில் என்று கூட சொல்லலாம். அமீர்கான் தயாரிப்பில், யூடிவி அளித்திருக்கும் படம். கேட்கவே வேண்டாம் ஹைப்புக்கு. அத்தனை ஹைப்புக்கும் சரியான ரிசல்ட்டை அளித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.