Posts

Showing posts with the label கள்ளச்சிரிப்பு

கள்ளச்சிரிப்பு - வெப் சீரீஸ்

கள்ளச்சிரிப்பு சென்ற மாதம் இணையம் எங்கும் பல விளம்பரங்கள். புதிய தமிழ் வெப் சீரீஸ்களைப் பற்றிய அறிவிப்புகள் என இருக்க, கோடம்பாக்கத்தில் ஷார்ட் பிலிம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வெப் சீரீஸ் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாது. இவைகளுக்கான மார்கெட் என்ன? எங்கு வியாபாரம் ஆகும்? எப்படி வியாபாரம் ஆகுமென்ற அடிப்படை கூடத் தெரியாமல் சில பல லட்சங்கள் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். சரி வியாபாரம் தெரியாமல் தான் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் வெப் சீரீஸ் என்றால் என்ன என்று கூட தெரியாமல் படமெடுத்துக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய. பேர். குறிப்பாய் கெட்ட வார்த்தைகளை மிகச் சுலபமாய் பேசக்கூடிய மீடியம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, சரளமாய் ஓ.த்தா.. ந்க்கொம்மா என்று ஆண் பெண் பேதமில்லாமல் பேசுவது தான் வெப் சீரீஸின் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டம் ஒன்று பரவலாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தமிழில் வெப் சீரீஸ் என்றவுடன் நியாபகம் வருவது பாலாஜி மோகனின் “ஆஸ் ஐயம் சபரிங் ஃபர்ம் காதல்” தான். அதில் மிக சாத...