ரத்த சரித்திரம்-2
ஏற்கனவே முதல் பாகத்தை பார்த்துவிட்டதால் பெரிய எதிர்பார்ப்பு ஏதுவுமில்லாமல் ஒரு ரெண்டு நாள் கழித்துத்தான் பார்த்தேன்.அதுவும் சூரியாவுக்காக. ரத்த சரித்திரம் பழிவாங்கும் உணர்வை உன்னதமாக்கும் முயற்சி. முதல் பாகத்தை ரத்ன சுருக்கமாய் முதல் இருபது நிமிடங்களில் காட்டுகிறார்கள். அதன் பிறகு சூரியா தன் பழிவாங்குதலை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ரத்தகளறி ஆரம்பிக்கிறது. இருவருக்குமான காய் நகர்தல்தான் அடுத்தடுத்து வரும் காட்சிகள் எல்லாம். பிரதாபை கொல்லும் முதல் முயற்சியில் சூர்யா தோற்கிறான். சூர்யாவை கொல்ல தேடி அலையும் பிரதாப்பிடமிருந்து தப்பிக்க, தான் வெளியே இருந்தால் பிரச்சனை என்று சூர்யா சரண்டர் ஆகி ஜெயிலுக்கு போகிறான். அவரது மனைவி ப்ரியா மணியை தேர்தலில் நிற்க எதிர்கட்சிகள் தூண்டிவிட, ஜெயிலில் இருந்த படியே சூர்யா காய் நகர்துதல்களை செய்கிறான். சூர்யா தன் பழிவாங்கலை முடித்தானா? இல்லையா? என்பதுதான் மீதி கதை. எனக்கென்னவோ.. முதல் பாகத்தில் பார்த்ததைவிட இதில் வன்முறை குறைவு என்றேதான் சொல்வேன். ஏன் என்றால் இதில் நடக்கும் அத்துனை விஷயங்களிலும் துப்பாக்கி வந்துவிட்டதால் டப்..டுப் என சடுதி...