தாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்
வழக்கமாக மகன் அல்லது மகளை தன் விவாகரத்து ஆன கணவனிடமிருந்து காப்பாற்ற நினைப்பது வழக்கம். ஆனால் இங்கே ஓரு கணவன் தன் மகனை அவனுடய மனநலம் குன்றிய மனைவியிடமிருந்து காப்பாற்ற கடந்த 435 நாட்களாக அமெரிக்கவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும்,சென்னையிலுருந்தும் போலீஸ், கோர்ட், அன்பு, மிரட்டல் என்று எல்லாவிதமான சாம, பேத,தண்ட களையெல்லாம் கையிலெடுத்துக் கொண்டு போராடுகிறார். அமெரிக்க சிட்டிசனான விஜயஸ்ரீ ஆரோரா என்பவருக்கும், பிறந்தவந்தான் அதித்யா, அவர்கள் இருவரும் விவாகரதானவுடன் அமெரிக்க கோர்ட் அதித்யா குழந்தையாய் இருப்பதால், தாயிடம் வளரவேண்டும் என்றும், வாரம் ஓரு முறை தந்தையிடம் விட வேண்டும் என்று கூறியது. அதன் பேரில் அவர்கள் இருவரும் நடந்து கொள்ள ஆரம்பிக்க, சிறிது நாட்களில் விஜயஸ்ரீ தன் கணவன் தன் மகனை தன்னிடமிருந்து பிரிக்க முயற்சி செய்வதாய் பிரச்சனை ஏற்படுத்த, அதன் பிறகு அவரின் கணவர் கோர்டுக்கு போய் தன் முன்னாள் மனைவிதான் அப்படி செய்வதாக புகார் கூற, அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் புகார் கூறுகிறார். அந்த குற்றசாட்டுப்படி விஜயஸ்ரீயை மனநிலை மருத்துவத்துக்கு உட்படுத்த தானே பணம் கொடுத்து கோர்டு மூலமாய் ...