சாப்பாட்டுக்கடை - பாட்டி வீடு
போன மாதம் இந்த உணவகம் ஆரம்பிக்கப் போவதாய் ஏகப்பட்ட ஆன்லைன் ப்ரோமோஷன்கள். ஞாயிறு அன்று மதியம் லஞ்சுக்கு புக் செய்யலாம் என்று போன் போட்டால் காலை பதினோரு மணிக்கே லஞ்ச் புல் சார் என்றார்கள். நண்பர் சிவசங்கர் லஞ்சுக்கு போகலாமா? புதுசா எதாச்சும் இடம் இருந்தா சொல்லுங்க? என்றார். பாட்டி வீடு என்றேன். தி.நகர் பாகிரதி அம்மாள் தெருவில் முன்பு ஒரு நான் வெஜ் ரெஸ்ட்ராரண்ட் இருந்த இடத்தைத்தான் இவர்கள் புதியதான் பழைய வீடு போல் செட் போட்டு முற்றிலும் மாற்றியிருந்தார்கள். அட்டகாசமான இண்டீரியர். வெல்கம் சென்னவரின் ஃபீரிக் குடுமியும், போட்டிருந்த பேகியும் நிச்சயம் அமெரிக்காவில் சம்பாதித்து ஹோட்டல் நடத்த வந்திருப்பவர் என்பதை பறைச்சாற்றியது. நண்பர்கள் வந்த பின் உள்ளே அழைத்து செல்லப்பட்டோம். அட்டகாசமான இண்டீரியர். பாட்டி வீட்டு மித்தம் போல ஒர் இடத்தில் நான்கு டேபிள் போடப்பட்டிருந்தது. கண்களை உறுத்தாத ஆனால் அதே நேரத்தில் காண்ட்ராஸ்ட் பெயிண்டிங் அண்ட் கட்லெரிகள். மெனு கார்டை டேப்ளெட்டில் காட்டினார்கள். கூடவே ஒர் பிரிண்டட் பேப்பரிலும். 7 கோர்ஸ் மீல்ஸ் என்றதுமே திக்கென இருந்தது. அத்தனையு...