மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள்
மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள் கொஞ்சம் ஹைஃபை உணவங்கள் எங்கே புதியதாய் திறக்கப்படும் என்று பார்த்தால் அது நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடாகத்தான் இருக்கும். அதே போல மிடில் ரேஞ்ச் கடைகள் என்றால் அது அண்ணாநகர் சாந்தி காலனியாய் இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாய் சென்னையின் முக்கிய இடங்கள் ரோட் சைட் புட் ஷாப்புகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. அதுவும் நடு ராத்திரி பிரியாணி கடைகள். ஒருசின்ன டிரக்கில் ஆரம்பித்தார்கள். தையல் இலை பிரியாணி, வாழை இலை பிரியானி, அந்த பாய் பிரியாணி, இந்த பாய் ப்ரியாணி. என ஆரம்பித்து அண்ணாநகர் 5வது அவின்யூவில் இடது வலது எங்கும் டேபிள் எல்லாம் போட்டு கடை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். விதவிதமான உணவுகள். தள்ளுவண்டிகளில், வீட்டிலிருந்து காரை எடுத்துவந்து டிக்கியில் வைத்து குடும்பமாய் கடை பரப்பி பானிபூரி முதல் நெய் சோறு வரை விற்றார்கள். மெல்ல 5வது அவின்யூ புல் ஆகி, நான்காவது, அண்ணாநகர் மெயிண்ட் ரோட் என எல்லா இடங்களிலும் கடைகள் முளைத்து செம்ம வியாபாரம் ஆகிக் கொண்டிருந்த வேளையில் கடந்த ஒரு வாரமாய் எல்லாக் கடைகளும் தூக்கப்பட்டு அண்ணாநகரே அலம்பி விட்டார்ப் போ...