உலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.
மணி சார்.. இப்படித்தான் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகத்தினர் அனைவரும் அன்புடன் அழைக்கிறார்கள் மணிரத்தினம் அவர்களை. தமிழ் சினிமாவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களின் முக்கியமானவர் மணிசார். இவரின் படத்தில் நடிப்பதென்றால் இந்தியாவின் பெரிய நடிகர்கள் கூட சம்பளம், டேட் எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்ய தயார் என்று சொல்லுமளவுக்கு இவரின் மேல் மரியாதை. இவருடன் இணையும் தொழில்நுட்ப கலைஞர்கள், உடனடியாய் கவனிக்க பெறுவது இவரின் சிறப்பு.