கொத்து பரோட்டா - 25/01/16
கேட்டால் கிடைக்கும் வெள்ளத்தில் என் வீட்டு டெலிபோன் மற்றும் இண்டர்நெட் இரண்டாம் தேதி டிசம்பர் அன்று கட் ஆனது. அதன் பிறகு என் வீட்டு லைன் 18 ஆம் தேதிதான் திரும்பவும் வந்தது. ஆனால் அதற்கு பில் தொகையாய் ஒரு முழு மாத தொகையை கட்டச் சொல்லி, அனுப்பியிருந்தார்கள். போன் செய்து கேட்ட போது டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம் முன்னூறு ரூபாய் என்றார்கள். அது என்ன கணக்கு? எப்படி முன்னூறு ரூபாய் வரும். என்னுடய கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் எனக்கு எந்த விதமான டெலி கம்யூனிகேஷன் தொடர்பு உங்களது நெட்வொர்க்கில் இல்லையே என்று தொடர்ந்து கேட்டதில் மாதம் 1500 ரூபாய் பேக்கேஜில் இருக்கும் எனக்கு உடனடியாய் பில் தொகை வெறும் 535 கட்டச் சொல்லி வந்தது. அதே போனில் என் மொபைல் எட்டு நாட்கள் வேலை செய்யாததற்கு 180 ரூபாய் டிஸ்கவுண்டும் பெற்றேன். ஏதோ என்னைப் போன்ற வேலையில்லாதவர்கள் கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் கேட்கிறோம் கிடைக்கிறது. இவனுங்க கிட்ட என்ன கேட்டு என்னத்த? என்று என்னத்த கன்னைய்யா போல இருக்கிற எத்துனை பேர் முழு பில்லையும் கட்டியிருப்பார்கள். இந்த ஏரியாக்களில் தங்களது லைன் வேலை செய்யவில்லை என்பது தெரிந்தே...