Posts

Showing posts with the label ஒலக சினிமா

பேஸ்புக் போஸ்டும் ஒலக சினிமாவும்

Image
சினிமா நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன். சில பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பும் போது சமீபத்தில் வெளியாகி பேஸ்புக்கில் சூப்பர் ஹிட்டாயிருக்கும் ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச்சு வந்தது. எப்படி? என்றார். ”நல்ல படம்” என்றேன். ”நீங்க பல படம் பாக்குறவரு நீங்களே நல்ல படம்னு தான் சொல்றீங்க” “அது என் கருத்துங்க. ஏன்னு நான் கட்டுரை எழுதியிருக்கேன்” ”எனக்கெல்லாம் உக்கார முடியலை. என் பொண்டாட்டி வாங்க போலாம்.. வாங்க போலாம்னு நச்சு. கிளம்பலாம்னு பார்த்தா பக்கத்து சீட்டுல பிரபல விமர்சகர் ஒருத்தர் நாலாவது வாட்டி பாக்குறதா சொல்லி உட்கார்ந்திருந்தாரு. எழுந்தும் வர முடியலை. வெளிய வந்து படம் பார்த்த நாலைஞ்சு நண்பர்கள் கிட்ட கேட்டா மொகத்த ஒரு மாதிரி வச்சிக்கிட்டு “ம்ம்ம்”னு தலையாட்டினாங்க. அது நல்ல படம் இல்லைனு சொல்ல வரலை. எனக்கு செட்டாகல. காக்கா மூட்டைய பாராட்டுனாங்க.. அத பார்த்த போது எனக்கு பிடிச்சிது. இது பிடிக்கலை அதுக்காக எனக்கு பிடிக்கலைன்னு கூட சொல்லுற சுதந்திரம் இல்லாம போயிருச்சு. சொன்னா நம்மளை முட்டாள். அறிவிலி. சினிமாவுக்கே லாயக்கில்லை. அப்படின்னு சொல்லி அவமானப்படுத்துறாங்க. உன...