இளைஞன்
படம் வெளியான பொங்கல் நாளன்று காலையிலேயே சூப்பர் ஹிட் என்று கலைஞர் டிவியில் போட்டார்கள். கலைஞர் நியூஸில் படம் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. கலைஞர் படம் பார்த்துட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடம் “என்னய்யா.. தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா.. இங்கிலீஷ் படம் எடுத்திருக்கே” அப்படின்னு கேட்டாராம். இப்படி ஆளாளுக்கு விஜய் படத்தை பத்தி.. சாரி.. பா. விஜய் படத்தை பத்தித்தான் தமிழ்நாடே பேசுது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் எது என்று கேட்டால் எந்திரனை விட இளைஞனுக்குத்தான் என்று தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெரும் போலிருக்கிறது. அவ்வளவு எதிர்பார்பாம். பாவம் மார்ட்டின் கஷ்டப்பட்டு லாட்டரி வித்து சம்பாதிச்ச காசு.. இப்ப கரியா போகணும்னு விதியிருந்தா யார் மாத்த முடியும். நடிக்கவே தெரியாத ஹீரோ. 1940களில் கூட எடுபடாத கதை திரைக்கதை வசனம், இந்த 50வது படத்தோட தன் திரைப்பணியை முடித்துக் கொள்ள தைரியம் கொண்ட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு நிச்சயம் தெரியும் இந்தப்படம் என்னவாகுமென..? தலைவர் கலைஞருக்கு மன்னிக்கணும் உங்களுக்கு தெரியாததில்லை..நீங்கள் திரைக்கதை வசனமெழுதிய முந்தின படங்கள் எல்லாம...