Thottal Thodarum

Dec 31, 2010

Ragada


ragadreview
நாகார்ஜுன், அனுஷ்கா, ப்ரியாமணி என்று நட்சத்திர பட்டாளம், அதிரடியான ஓப்பனிங், குத்து பாடல்கள், ஸ்கின் ஷோக்கள் என்று ஒரு பரபர மசாலாவை இயக்குனர் வீரு போட்லா கொடுத்திருக்கிறார். அது சுவையாக இருந்ததா இலலையா என்று சொல்ல வேண்டுமென்றால் அங்கு தான் பிரச்சனை.

நாகார்ஜுன் கடப்பாவிலிருந்து வந்து ஒரு ரவுடி கேங்கில் ஜாயின் செய்கிறான். அவர்களுடன் சேர்ந்து அந்த ரவுடியின் எதிரிகளை தன்னுடய புத்திசாலித்தனமான ஆட்டத்தால் காய் நகர்த்துகிறான் (அப்படித்தான் இயக்குனர் ஃபீல் செய்திருக்கிறார்). அப்போது அங்கே கிட்டத்தட்ட பெண் டானாக இருக்கும் அனுஷ்காவின் காதலில் விழுகிறார். அப்போது திடீரென ப்ரியாமணி அவருடன் வந்து சேருகிறார். நாகார்ஜுனின் காதல் பார்வை அவர் மேல் விழ, ஒரு சுபயோக சுபதினத்தில் ப்ரியாமணி நாகார்ஜுனை வைத்து ஒரு பெரிய அமெளண்டை ஆட்டையை போட்டு விட்டு எஸ்ஸாகிவிட,  அந்த பணம் ஊர் பெரிய தாதாவான பெத்தண்ணாவுடயது. ஏற்கனவே அப்பணத்தை டபுள் கிராஸ் செய்து கொள்ளையடித்த பணத்தைதான் கைப்பற்ற கடத்தியவனை பிடித்து வைத்திருக்க, ப்ரியாமணியின் தில்லாலங்கடியால் அவனை தப்பிக்க வைத்துவிட்டு,  துமபை விட்டு வாலை பிடிக்க அனுஷ்காவுடன் ஹாங்காங் எல்லாம் போய் கண்டுபிடிக்கிறார்கள். பணம் கிடைத்ததா? நாகார்ஜுன் ஏன் பணம் பணம் என்று அலைகிறார்? பெத்தண்ணா என்ன செய்தான்? நாகார்ஜுன் வேலை செய்த தாதாவின் காதலியாய் நடித்து வந்த அனுஷ்காவை காதலித்து தூக்கி வந்த நாகார்ஜுனை அவன் என்ன செய்தான்? அனுஷ்காவிற்கும், ப்ரியாமணிக்குமான தொடர்பு என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்.

ragada wallpaper 2
நாகார்ஜுனுக்கு 50 வயசாம். கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. அவரின் மகன் நாக சைதன்யாவை விட இளமையாய் இருக்கிறார். அவ்வளவு க்யூட்டாக ரொமாண்டிக்காக இருக்கிறார். அதற்காக காட்சிக்கு காட்சி.. நீ அழகு, நீ அழகு என்று ஆளாளுக்கு சொல்லும் போது எரிச்சலாய்தான் இருக்கிறது. பக்கா மசாலா எண்டர்டெயினர் என்பதால் நடிப்பை பற்றி பெரிதாய் கவலைபடவில்லை நாகார்ஜுன். அவரது ஸ்டைலிஷான ப்ர்பாமென்ஸ் படத்தின் பெரிய பலம். அந்த ஓப்பனிங் சண்டைக்காட்சியும் அதில் ஸ்டைலாக நடந்துக் கொண்டே சண்டையிடும்  காட்சி ஒன்றே போதும் அவர் ரசிகர்களுக்கு. கிட்டத்தட்ட மகேஷ்பாபுவின் போக்கிரிக்கு இணையான கேரக்டர். அதே போல செய்திருக்கிறார். அனுஷ்காவுடனான ரொமான்ஸ் இண்ட்ரஸ்டிங்..

ragada wallpaper
அனுஷ்கா ஸ்டைலிஷான பெண் டான் கேரக்டரில் வருகிறார். ஸ்டைலாக இருக்கிறார். முடிந்த வரை பாடல்களில் உரித்தெடுத்திருக்கிறார்கள். மனதினுள் வஞ்சம் வைத்து காத்திருக்கும் கேரக்டரில் சரியாக சூட் ஆகிறார். சும்மா மொழு மொழுவென இருக்கிறார். ம்ஹும். அனுஷ்க்க்க்க்க்க்காஆஆஆஆஆ… ப்ரியாமணிக்கு ஒரு லோக்கல் லூசுப் பெண்ணாய் வந்து வில்லியாய் மாறி பின்பு ஒரு ஸ்மார்ட் பெண்ணாய் மாறும் கேரக்டர் ஓகே.. காட்ட வேண்டிய இடத்தில் காட்டி நிலை பெற்று விடுகிறார். அனுஷ்காவும், இவரும் நாகார்ஜுனுடன் ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கின்றார்கள்.

Anushka_Ragada_Movie_wallpapers_stills_01
கோட்டா சீனிவாசராவ், ஒரு விதயாசமான கேன்சரால் பாதிக்கப்பட்ட தாதாவாக வருகிறார். பிரம்மானந்தம் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுவதோடு சரி. ப்ளாஷ் பேக்கில் நாகார்ஜுன் தங்கையாக வரும் ஃபிகர் நச்சென இருக்கிறார். வில்லன் பெத்தண்ணாவைவிட அவருக்கு டப்பிங் கொடுத்தவர் நன்றாக நடித்துள்ளார். நாகார்ஜுன் அம்மாவாக வரும் வெண்ணிறாடை நிர்மலாவை மிரட்டாமலேயே கொன்று விடலாம் போலிருக்கிறார்.
சர்வேஷின் ஒளிப்பதிவு ஓகே. தமனின் பாடல்களில் பெரிதாய் ஏதும் இம்ப்ரஸ் செய்யவில்லை. பிந்தாஸ் இயக்குனருக்கு ரேஸின் பாதிப்பு நிறைய இருக்கிறது.  கதையை கேட்கும் போது சும்மா காட்சிக்கு காட்சி பரபரவென ட்விஸ்டும் டர்னுமாய்  போகும் போலிருக்கிறதே என்று தோன்றும் ஆனால் அவ்வளவு ட்விஸ்ட் டர்னே படத்தின் சுவாரஸ்யத்துக்கும் தடையாய் அதிலும் அந்த எம்.ஜி.ஆர். சே.. சாரி என்.டி.ஆர். காலத்து ப்ளாஷ் பேக்கும், க்ளைமாக்ஸும். முடியலையடா சாமி.. 
Ragada – Masala potpori
அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Dec 30, 2010

தென்மேற்கு பருவக்காற்று.

கூடல் நகர் சீனு ராமசாமியின் இரண்டாவது படம். எனக்கு அந்த படத்தின் லவ் ட்ராக் ரொம்ப பிடிக்கும். இப்படத்தின் மெயின் லைனும் காதல் தான். ஆடுகளை மேய்ப்பனுக்கும், அதை திருடி பொழைப்பு நடத்தும் கூட்டத்தின் பெண்ணிற்குமான காதல் கதை.

லைனில் இருக்கும் காண்ட்ராஸ்டான விஷயமே கொக்கி போடத்தான் செய்கிறது. தன் பட்டியில் ஆடுகளை திருட வரும் கும்பலில் ஒருவரை மடக்கி பார்க்கும் போது அது பெண்ணாக இருக்க, முருகையன் அவளின் முகத்தை பார்த்த கணத்தில் காதலாகிறான். அந்த காதலினால் தன் தாய் வீராயி பார்த்து வைத்திருக்கும் முறைப் பெண்ணையும் விலக்கி வைக்கிறான். களவாணிக் குடும்பத்திலிருந்து நிச்சயம் நான் பெண்ணெடுக்க மாட்டேன் அப்படி மீறி அவளை திருமணம் செய்தால் சங்கரத்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள் வீராயி. முருகையா எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று அவனை கொலை செய்ய முயற்சிக்கிறது களவாணிப் பெண்ணின் அண்ணன் கும்பல். அதனால் அவர்களை போலீஸில் காட்டிக் கொடுக்கிறான் முருகையன்.  மேலும் காண்டாகி சுத்தும்  அவர்களிடமிருந்து காதல் ஜோடி ஜெயித்ததா என்பதுதான் கதை. படத்தின் முக்கிய கேரக்டர் என்றால் அது செழியனின் ஒளிப்பதிவுதான். டைட்டில் காட்சியிலிருந்து எண்ட் கார்ட் வரை ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு லைவாக இருக்கிறது. அடை மழையில் ஆடுதிருட வரும் காட்சியாகட்டும், புழுதிக்காட்டில் சண்டையிடும் காட்சியாகட்டும், நம்மை அங்கேயே கொண்டு போய் உட்கார வைத்துவிடுகிறார்.  அடிக்கடி வரும் காலியான வைட் ஷாட் பொட்டல் காடுகளும், பஸ் வழித்தடங்களும் இண்டர்நேஷன்ல் தரம்.
T-DESIGN-01 கதாநாயகனாய் அறிமுகமாகியிருக்கிறார் விஜய சேதுபதி. இவரை அடிக்கடி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பாராஜின் குறும்படங்களில் கதாநாயகனாய் பார்த்திருப்பீர்கள். குறை சொல்ல முடியாத நடிப்பு. தண்ணியை போட்டு அது பாட்டுக்கு திரியும் இளந்தாரி கேரக்டர் என்றாலும் “ஏ.. என்னாங்குற?” என்பது போன்ற பருத்திவீரன் பாதிப்பில்லாமல் நடித்தற்கே அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குரலில் இருக்கும் வீர்யம் பாடி லேங்குவேஜில் இல்லை. இன்னும் கொஞ்சம் முயன்றால் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு.

பேராணமை படத்தில் நாயகிகளில் ஒருத்தியாய் வந்த வசுந்தராதான் நாயகி. மிக இயல்பான மேக்கப்பில்லாத முகம். பெரிதாய் நடித்திருப்பதாய் சொல்ல முடியவில்லை. கதையில் முருகையன் மனதை கொள்ளை கொண்ட அளவுக்கு நம் மனதை கொள்ளை கொள்ள்வில்லை என்றே சொல்லவேண்டும். இருந்தும் பழுதில்லை.
என்னதான் காதல் கதையாக இருந்தாலும் அடிநாதமான விஷயமே தாய்பாசம் எனும் போது அதற்கு உயிர் கொடுத்திருக்கும் வீராயி கேரக்டரில் நிச்சயம் வாழ்ந்திருக்கிறார் சரண்யா. நிஜ கிராமத்து தாயை கண் முன்னே வளையவிட்டிருக்கிறார் தன் சிறந்த நடிப்பின் மூலம். தன் மகன் மீது காட்டும் பாசமாகட்டும், அவனுக்காக சண்டையிடும் போது காட்டும் ரெளத்திரம் ஆகட்டும், க்ளைமாக்ஸ் காட்சியிலாகட்டும் மனதை விட்டு அகல மறுக்கிறார். சரண்யா.

படத்திற்கு இசை புதிய இசையமைப்பாளர் ரஹ்நந்தன்.  வைரமுத்துவின் வரிகளில் பல பாடல்கள் கேட்கும் போது பளிச்சிடுகிறது. பாடல்களில் இருக்கும் அளவுக்கு பின்னணியிசையில் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் ஒரு காட்சியில் திடீரென ஆலாபனை போன்ற ஒரு இடம் வருகிறது. அதை பாடியவர் குரலில் பிசிறு தட்டி அபஸ்வரமாய் போகிறது. கிராமிய படம் அபஸ்வரமாக போகலாம் என்று பதில் சொன்னால்.. சாரி.. அப்படியானால் அங்கே அந்த அளவுக்கான ஆலாபனையே போட்டிருக்ககூடாது.

T-DESIGN-02
எழுதி இயக்கியவர் சீனு ராமசாமி. ஒரு லைவ்வான கிராமத்து படத்தை தர முயன்று அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவ்வள்வு தின்னான லைன் என்று முடிவு செய்தபின் இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையில் பளிச்சென சொல்லியிருக்க வேண்டாமோ..? ஒரு ஆட்டை திருடும் கும்பல்  மாட்டிக் கொண்டால் ஜெயிலுக்கு போவதை கூட சாதாரணமாய் வாழ்த்தி அனுப்பும் குடும்பத்தில் இருப்பவர்கள் எதற்காக ஆட்டை திருடிய தங்களை முருகையன் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று கொல்ல முயற்சிக்க வேண்டும்?. கதைக்கு வில்லன்கள் வேண்டுமே என்று சொருகப்பட்ட கேரக்டர்களாகவே தெரிகிறது. முருகையன் மீது கொலைவெறி கொள்ளும் அளவிற்கு ஏதாவது வைத்தால் தான் க்ளைமாக்ஸில் பெப் இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ..?. சரண்யா அந்த ஊரில் உள்ள களவாணி பெண்ணை எடுக்க மாட்டேன் என்று சொல்லும் அஜயன் பாலா சரண்யா ப்ளாஷ்பேக் எதற்கு?  அதே போல பல இடங்களில் கண்டின்யூட்டி மிஸ்ஸிங்.. ஜி.

ஒரு கட்டத்திற்கு பிறகு காதலியை போலீஸோடு தேடும் காட்சிகளிலும், ஊருக்கு சமூக சேவை செய்ய வரும் ஸ்கூல் பிள்ளைகளோடு சமையல் வேலைக்கு வருபவளை பார்க்க ஸ்கூல் வாசலில் நிற்கும் காட்சிகளிலும் அலுப்பு தட்ட ஆரம்பித்துவிடுவது கண்டெண்டாக ஏதும் இல்லாததால் வரும் வெறுப்பு என்றே சொல்ல வேண்டும்.

முருகையனின் நண்பராக வரும் தீப்பெட்டி கணேசன் ஆங்காங்கே வ்ந்து கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார். ஆனால் இம்மாதிரியான படங்களுக்கு ஏன் டெம்ப்ளேட் மாதிரியான ஒரே ஒரு நண்பன் கேரக்டர்? எல்லா படங்களிலும் ஒரு சிறுவனை போட்டிருப்பார்கள். இதில் உயரம் குறைந்தவர் அவ்வளவுதான்.

இடைவேளைக்கு முன் ஆங்காங்கே பளிச் பளிச்சென வரும் வசனங்களும், ஓவர்லாப்பில் வரும் வசனங்களும் லேசாய் புன்முறுவல் பூக்க வைக்கிறது. கப்பை திருடியவன் வீட்டிலிருந்து கப்பை வாங்க சரண்யா சண்டைபோடுமிடத்தில் அந்த வீட்டுக்கார அம்மா கப்பை எடுத்துக் கொண்டு வந்து இந்தாம்மா உன் கப் இதில குழம்பு கூட ஊத்தி வைக்க முடியாது என்று சொல்லிவிட்டு போவது உதாரணம். எங்கேயிருந்து பிடித்தீர்கள் அந்த கருத்த முறைப் பெண்ணை. அந்த பளீர் சிரிப்பும், வெள்ளந்தியான முகமும்.. இயல்பான வெட்கமும்.. மென் சோகமும். செம க்யூட்.  இனிமேல் உங்க போட்டோவை வச்சிக்க கூடாது என்று திரும்பிக் கொடுக்கும் இடத்தில் அவர் பேசும் வசனம் கைத்தட்டல் பெறுகிறது.

ரத்ததான முகாமில் வந்து பிரச்சனை செய்துவிட்டு, அப்பனில்லாதவனுக்கு எல்லாம் ரத்தம் கொடுப்பாங்கன்னு சொன்னதும் ரத்தம் கொடுக்க போவது, பையன் ஆட்டுக்கிடா போட்டியில் ஜெயித்த கப்பை தட்டி பறித்த எதிர்கோஷ்டியின் வீட்டிற்கே போய் அலப்பறை செய்துவிட்டு கப்பை வாங்கி வீட்டில் தூக்கியெறிந்துவிட்டு மகனை தேடுவது, பையனுக்கு ஒரு கால்கட்டை போட பால்சங்கை வெத்தலைபாக்கை வைத்து தாம்பூலம் மாற்றும் காட்சி, பையனுக்கு முடிவெட்ட ஓடிப்பிடித்து வெட்ட முயலும் காட்சி, க்ளைமாக்ஸ் காட்சியில் குத்துப்பட்ட வயிற்றில் துண்டைக் கட்டிக் கொண்டு பஸ்சேறி அட்மிட் ஆகும் காட்சி, ஜெயிலுக்கு போறதுக்கா புழுதிக் காட்டுல ஒழைசேன்.. என்று புலம்பும் காட்சி, களவாணி குடும்பப் பெண்ணை ஏற்கும் காட்சி  என்று சரண்யாவிற்கான  ஒவ்வொரு காட்சியியும் ஒரு குட்டி சிறுகதையாய் அமைத்திருப்பதையும், ஆனா ஊனா அருவாளை எடுத்துட்டு போய் வெட்டுவது, அதை வீரம் என்பது போன்று பில்டப் செய்வது, பழிவாங்குவது, எல்லாரையும் சாகடித்து படம் எடுத்தால் தான் லைவ்வான படம் என்கிற க்ளீஷேக்களை  கட்டுடைத்து ஒரு கிராமத்து ஃபீல் குட் படத்தை கொடுத்தற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும்.
தென் மேற்கு பருவக்காற்று- சாரல்…..
அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Dec 29, 2010

தமிழ் சினிமா-2010-2

ஜூலை
Madharasapattinam-Movie-Stills-009

அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசபட்டினம், அனந்தபுரத்து வீடு, தில்லாலங்கடி, மற்றும் சில சின்ன படங்கள் வெளியாயின. சன் தொடுப்பில்லாம வெளியான கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி அவரது  சொந்தப்படம். படம் சுமாராக இருந்தாலும் பெரியதாய் செல்ப் எடுக்கவில்லை. ஆர்யா, விஜய் கூட்டணியில் வெளிவந்த மதராச பட்டினம் தான் இம்மாதத்திய பெரிய ஹிட் என்று சொல்ல வேண்டும், படத்தின் கதாநாயகிக்காகவே நிறைய பேர் படம் பார்த்தார்கள். டைட்டானிக்கின் உல்டா என்று சொல்லப்ப்ட்டாலும் சுவாரஸ்யமாக கதை சொல்லப்பட்டதால் வெற்றி நிச்சயமானது. மீண்டும் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ஆனந்தபுரத்துவிடு ஒரு பெரிய தோல்வியை சந்தித்தது. வித்யாசமான பேய் படமாய் அமைந்திருந்தாலும் வெகு ஜன ரசிகர்களை சென்றடையாதது சோகமே. சன் டிவியில் மட்டுமே மாபெரும் வெற்றி என்று சொல்லிக் கொண்ட இந்த வருடத்தின் அடுத்த தோல்வி படம் தில்லாலங்கடி. மதராச பட்டினம் சுமார் பதினான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு சுமார் 20 கோடி வரை வசூல் செய்ததாய் சொல்லப்படுகிறது.
ஹிட்: மதராசபட்டிணம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆகஸ்ட் Naan-Mahaan-Alla-wallpaper
பாணா காத்தாடி, வம்சம், காதல் சொல்ல வந்தேன், நா மகான் அல்ல, இனிது..இனிது, மாஸ்கோவின் காவேரி ஆகிய படங்கள் வெளியாகியது. சத்யஜோதியின் “பாணாகாத்தாடி” டீல் அறுந்து போனது வேதனைக்குரியது. பர்சனலாகவும் தான். முதல்வரின் பேரன் அருள்நிதி நடித்து பாண்டிராஜ் இயக்கிய வம்சம் ஓரளவுக்கு சுமாராக போனதற்கு அவர்களின் விளம்பரமும், இயக்குனர் முந்தைய படங்கள் தந்த மரியாதையும் காரணம் என்று சொல்லலாம். பரிதி இளம்வழுதியின் மகன் அறிமுகமான காதல் சொல்ல வந்தேன் கிட்டத்தட்ட பாணா காத்தாடியின் க்ளைமாக்ஸை ஒட்டியிருந்தாலும், நல்ல நகைச்சுவை, மற்றும் பாடல்கள் இருந்தும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. மீண்டும் தயாநிதி அழகிரியின் வெளியீட்டில் கார்த்தி நடித்து, சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான நான் மகான் அல்ல ஒரு கல்ட் வெற்றியை பெற்றது. பிரகாஷ்ராஜ் தயாரித்து வெளியிட்ட  தெலுங்கு சூப்பர் ஹிட்டான ஹேப்பி டேசை டப் செய்யாமல் ரீமேக்கியது படு வீக்காகிவிட்டது.  அதே போல் வெகுகால சிலபல ப்ரச்சனைகளின் காரணமாய் வெளிவராமல் இருந்த ஆஸ்கர் ரவியின் தயாரிப்பிலிருந்து சுரேஷுக்கு மாற்றப்பட்டு, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்கோவின் காவிரி இரண்டு மூன்று ஷோக்கள் கூட தாங்கவில்லை என்பது பெரும் வருத்தம்
ஹிட்: நான் மகான் அல்ல
ஆவரேஜ்: வம்சம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செப்டம்பர்  
Boss-Engira-Baskaran சிந்து சமவெளி, பாஸ்(எ) பாஸ்கரன், திருப்பூர், ஆகிய படங்கள் வெளியானது. எந்திரன் வருகிறது என்று பல தியேட்டர்களில் படங்கள் வெளியிடவே யோசித்தார்கள். சிந்து சமவெளி கிடைத்த சந்தில் வெளியாகி, மிகப்பெரிய சர்சைக்குள்ளானது. தியேட்டரில் ஒரு பார்வையாளர் இயக்குனர் சாமியை அடித்துவிட்டார் என்று கூட புரளி எழுந்தது.  இல்லை அது எழுப்பப்பட்டதா? என்று தெரியவில்லை.  திருப்பூர் போன்ற படங்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. பாஸ் (எ) பாஸ்கரன் தான் அம்மாதத்திய பெரிய ஹிட்.. கதை என்று பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும், வழக்கம் போல் ரெட்ஜெயண்ட், ஆர்யா, சந்தானம், ராஜேஷ் கூட்டணி காமெடியில் கொடி கட்டியதால் பட்டொளி வீசியது.
ஹிட்: பாஸ்(எ) பாஸ்கரன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அக்டோபர்
enthiran` மிகவும் எதிர்பார்த்த எந்திரன் ரீலீசான மாதம்.. அதற்கு முன் மாதமும் இந்த மாதமும் வேறு படங்களே வெளியாகவில்லை. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் பெரிய ஓப்பனிங்கை பெற்றபடம். ஆந்திராவில் நிஜாம் ஏரியாவில் தெலுங்கு நேரடி படமான மகதீராவின் கலக்‌ஷனை ஆல்மோஸ்ட் ரீச் செய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹிந்தியில் ஒரு தமிழ் டப்பிங் படத்திற்கு பெரிய ஓப்பனிங் என்று திரும்பிய இடமெல்லாம் எந்திரன் பற்றிய பேச்சாக இருந்த மாதம். மேலும் சில சின்ன படங்கள் அந்த மாதம் வந்தாலும் எந்திரனின் புயலில் வந்த சுவடே தெரியவில்லை என்பது தான் உண்மை. IMDBயில் 2010ஆம் வருடத்தின் வெற்றி படங்கள் வரிசையில் 35வது இடம் பெற்ற படம் என்று நினைக்கிறேன். அநேகமாய் இவ்வருட டிசம்பருக்கு முன்  தமிழ் சினிமாவில் பெரிய வசூலை பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும். ரஜினியின் ரசிகர்களுக்கு பெரிய அளவில் திருப்தியளிக்காத படமாய் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர் அல்லாதவர்களுக்கு பிடித்தது படத்தின் வெற்றிக்கு பலம்.ரஜினியின் படம் என்பது ஒரு பக்கமிருந்தாலும் இம்மாதிரியான வெற்றியை பெறுவதற்கு சன் டிவியின் அக்ரஸிவ் மார்கெட்டிங் ஒரு முக்கிய காரணம். சன்னின் மாபெரும் உழைப்புக்கு ஏற்ற பலனை அளித்தது என்றும் சொல்லலாம். இதையெல்லாம் மீறி அதிக எம்.ஜி.கொடுத்து கையை சுட்டுக் கொண்ட திரையரங்கு உரிமையாளர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் என் நண்பரும் ஒருவர். சில ஏரியாக்களில் எம்.ஜி கொடுத்து வாங்கிய திரையரங்கு அதிபர்களிடமிருந்து லாஸ் ஆகும் என்பதால் ஜெமினி பிக்சர்ஸை வைத்து திரும்பி வாங்கியது நடந்தது. அவர்கள் சொல்லும் வசூல் பணம் ஸ்பெகுலேஷ்னாய் இருந்தாலும் தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட பதினாறு அடி பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும். அது முழுக்க, முழுக்க சன்னின் விஸ்தாரமான அதிரடி மார்கெட்டிங்கினால் மட்டுமே கிடைத்த வெற்றி என்பதை எந்த ஒரு பிரபல விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் ஒத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.
ஹிட்: எந்திரன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நவம்பர்
Maina _1_ தீபாவளி மாதம் ஆதலாம் நிறைய படம் வரும் என்று எதிர்பார்த்த நேரத்தில் நான்கே நான்கு படம் மட்டுமே தீபாவளிக்கு வெளியானது. நீதானா அவன்?, மைனா, வ குவாட்டர் கட்டிங், உத்தமப்புத்திரன், வல்லக்கோட்டை, மந்திரப்புன்னகை, நகரம், நந்தலாலா, கனிமொழி மற்றும் சில படங்கள் வெளிவந்தது. மீண்டும் இம்முறை ரெட்ஜெயண்டின் மைனா சிறு முதலீட்டில் பெரிய லாபம் பார்த்த படமாகியது. சுமார் 1.30 கோடியில் தயாரிக்கபப்ட்ட படத்தை வாங்கி ப்ரோமஷனல் செய்து சுமார் 15 கோடி வரை வசூலித்திருக்கும் படம். சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு வகையில் ஆக்ஸிஜன் கொடுத்த படம் என்றும் சொல்லலாம். தமிழ் படம் தயாரிப்பாள்ர்களின் ‘வ’ குவாட்டர் கட்டிங் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்து பெரிய தோல்வியை சந்தித்தது. அர்ஜுனின் வல்லக்கோட்டை வந்த சுவடும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. உத்தமபுத்திரன் எந்திரன் எடுத்த தியேட்டரில் எல்லாம் பில்லப் செய்து இன்றளவில் சுமார் ஹிட் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் பின்னணி அரசியல் வேறு.  கரு.பழனியப்பன் நடித்து வெளிவந்த மந்திரப்புன்னகை பற்றி கொஞ்சம் சீரீயஸ் படம் பார்பவர்கள் மட்டும் பேசினார்களே தவிர, வசூல் ஏதுமில்லை. அதே போல் நகரம் சுந்தர்.சி, வடிவேலுவின் காமெடி பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் செல்ப் எடுக்காதது சோகமே. கொஞ்சமே கொஞ்சம் சி செண்டர்களில் ஓடினால் உண்டு. மிஷ்கின் நடித்து வெளிவ்ந்த நந்தலாலா தமிழ் சினிமாவில் ஒரு பெரிய எழுச்சியையும், சர்ச்சையையும் உண்டாக்கிய படம். விமர்சகர்களிடம் மிகவும் பெயர் பெற்ற அப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய தோல்வி என்றே சொல்ல வேண்டும். என்ன செய்வது நல்ல படம் எந்த ஊரிலும் ஏன் நாட்டிலும் ஓடாது.. இது ஒலக நியதி. அதிலும் பதிவர்களால் அஹா ஓஹோ என பாராட்டப்பட்ட எந்த படமும் ஓடாது என்று ஒரு நம்பிக்கை திரையுலகில் உலவுவதாக சொல்கிறார்கள். உடன் வந்த கனிமொழி சமீபத்திய மொக்கைகளின் உச்சம். கொஞ்சமே கொஞ்சம் கவனமாய் திரைக்கதை அமைத்திருந்தால் நிச்சயம் ஒரு சுமார் ஹிட் படமாய் அமைந்திருக்கும். லைவ் சவுண்டில் வந்த படங்களில் இதுவும் ஒன்று.
ஹிட்: மைனா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டிசம்பர்
manmadhan-ambu-movie-review
தா, சிக்கு புக்கு, ரத்த சரித்திரம், சனிக்கிழமை சாயங்காலம்5 மணி, விருதகிரி, அகம் புறம், சித்து +2, அய்யனார், நில்.. கவனி.. செல்லாதே, ஈசன், ஆட்டநாயகன், மன்மதன் அம்பு, அரிது அரிது, தென்மேற்கு பருவக் காற்று, காந்திபுரம், நெல்லு, மைடியர் குட்டிச்சாத்தானின் மறு பதிப்பு, கோட்டி, நலந்தானா போன்ற பல சின்ன பெரிய படங்கள் குவிந்த மாதமானாலும் பெரும்பாலான வருடங்களில் இம்மாதம் புதிய படங்களுக்கான மாதமல்ல. இதை பற்றி சினிமா வியாபாரம் புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். பெரிய நடிகர்கள் படங்களை தவிர பெரியதாய் சின்ன படங்களை பார்பதற்கு மக்களிடையே ஆர்வமிருப்பதில்லை. ஏனென்றால் இம்மாதம் தொடங்கி தொடர்ந்து கிறிஸ்துமஸ், புதுவருடம், பொங்கல் என்று பண்டிகைகளின் மாதமாய் இருப்பதால் மக்களின் பெரும்பாலான கவனம் ஊருக்கு போவதிலும், புது துணி பண்டிகை செலவுகள் என்று மட்டுமே இருக்கும். இம்மாதிரியான மாதங்களில் பெரிய நடிகர்கள் படம் மட்டுமே ஓப்பனிங் இருக்கும். தா என்கிற படம் பத்திரிக்கைகளிடமும், பதிவர்களிடையேவும் நல்ல விமர்சனம் இருந்தும், இவர்கள் ரிலீஸ் செய்த நாள் முதல் மழை தமிழ்நாட்டில் பின்னி எடுக்க, அடுத்த வாரம் எல்லா தியேட்டர்களிலும் தூக்கப்பட்டு வேறு படங்கள் வந்துவிட்டன. சூரியாவின் அபரிமிதமான எதிர்பார்ப்புக்கிடையே ரத்தசரித்திரம் கவனிப்பாரில்லாமல் போனதற்கான காரணம் டப்பிங் படமாகவும், தமிழ் நாட்டுக்கு சம்மந்தமேயில்லாமல் இருந்ததும் எனலாம். சனிகிழமை சாயங்காலம் 5 மணியெல்லாம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அகம்புறம், சித்து +2 அய்யனார், நில்.கவனி..செலலதே.. போன்றவையும் அந்த வந்து போனதில் அடங்கும். சசிகுமாரின் ஈசனுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும் பெரிதாய் எடுபடவில்லை. ஆட்டநாயகன் லஷ்மி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பு. சக்திக்கு இந்த படமாவது கைகொடுக்குமா என்று எதிர்பார்த்திருந்தது வீணாய் போனது.
கமலின் மன்மதன் அம்பு பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே வந்தது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே ரிசல்ட்டாய் அமைந்திருக்கிறது. புதியதாய் வேறு பெரிய படங்கள் பொங்கல் வரை இல்லாததால் ஏ செண்டர்களில் ஓட வாய்பிருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று.. பற்றி லேசாய் காற்று அடிக்க தொடங்கியிருக்கிறது. அடுத்த சில வாரங்கள் தான் படத்தின் தலைவிதியை நிர்ணையிக்கும் என்று தெரிகிறது. வருடத்தின் கடைசி மாதத்தின் பாதியில் வரும் படங்கள் பற்றிய சரியான ரிசல்ட் அடுத்த மாதம் தான் தெரியும் என்றாலும் ஒரு தோராயமான அனுமானம் தான் இம்மாததிய ரிப்போர்ட். இருப்பதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் கேப்டனின் விருதகிரி.. எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலே நன்றாகவே ஓடிக் கொண்டிருப்பது ஒரு சந்தோஷ விஷயமே.. 

ஹிட் மற்றும் சூப்பர் ஹிட் லிஸ்ட் படங்கள்
1 ) தமிழ் படம் – தயாநிதி அழகிரி
2 ) விண்ணைத்தாண்டி வருவாயா? – உதயநிதி ஸ்டாலின்
3 ) பையா – தயாநிதி அழகிரி
4 ) சிங்கம்-  சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன்
5 ) களவாணி – டிரீம்லேண்ட் பிக்சர்ஸ்
6 ) மதராசப்பட்டிணம் – கல்பாத்தி அகோரம், ரெட்ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின்
7 ) நான் மகான் அல்ல – தயாநிதி அழகிரி
8 ) பாஸ் (எ) பாஸ்கரன் – ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின்
9 ) எந்திரன் – சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
10) மைனா – ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின், கல்பாத்தி அகோரம்

சிலாகிக்கக் கூடிய படங்கள் (ஆவரேஜ் என்பதை மீறி விமர்சகர்களின் பாராட்டும். குவாலிட்டி பட பார்வையாளர்களின் பார்வையில்)
1 ) அயிரத்தில் ஒருவன்- டிரீம் வேலி கார்பரேஷன்
2 ) அங்காடித்தெரு-  ஐங்கரன் மூவி இண்டர்நேஷனல்
3 ) இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்- கல்பாத்தி அகோரம்
4 ) வம்சம் - அருள்நிதி

5 ) தா - புதிய தயாரிப்பாளர்.
 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டிஸ்கி:
எல்லா படங்களும் நிதிகளின் வெளியீட்டில் வெற்றி பெற்றது என்பது உண்மையாக இருந்தாலும் அவர்களும் சில பல படங்களில் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். உதாரணமாய், சன்னுக்கு, தீராத விளையாட்டு பிள்ளை, தில்லாலங்கடி, தயாநிதிக்கு வா குவாட்டர் கட்டிங், ரத்த சரித்திரம்,  என்று. நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று நினைக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கும் படங்களைத்தான் இவர்கள் வாங்கி விநியோகம் செய்திருக்கிறார்கள். அது தான் வியாபாரமும் கூட.. என்ன எல்லா வெற்றியும் அவர்களுக்கே எனும் போது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யும்.
அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Dec 28, 2010

கொத்து பரோட்டா-28/12/10

சென்ற வாரம் பல பத்திரிக்கைகளில், இணைய பத்திரிக்கைகளிலும் ஒரு அதிர்ச்சி செய்தி என்று போட்டிருந்தார்கள். அந்த அதிர்ச்சி என்னவென்றால் இயக்குனர் சேரனிடம் உதவியாளராக சேர விருப்பமென்றால் ஐந்து லட்சம் ரூபாய் கட்டிவிட்டு  தன்னுடன் மூன்று படங்களுக்கு வேலை செய்தவுடன் அவர்களுக்கு காண்டேக்ட் சர்டிபிகேட்டோடு பணத்தையும் திரும்பித் தருவார் என்று. என்ன காரணம் என்று கேட்டால் ஒவ்வொரு படத்திற்கு அஸிஸ்டெண்ட் செட்டாகவே மாட்டேனென்கிறதால். நிலையான ஒரு அஸிஸ்டெண்டுக்காகவும், தன்னிடம் உதவியாளர்களாய் இருக்கும் போது அவர்களுக்கும் சினிமா பற்றிய அறிவை முழுக்க தெரிந்து கொள்ள பணம் கட்டி படிப்பது போல பணம் கட்டினால் தான் சரியாக படிக்க  உதவியாக இருக்குமென்று  சொல்லியிருப்பதாக தெரிகிறது. ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டரின் வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டு வந்திருப்பான் என்று சேரனுக்கு தெரியாததில்லை.  அவன் வாழ்நாளில் முதல் ஒரு லட்ச் ரூபாயை முழுசாக பார்பதற்கே ஒரு படம் இயக்கினால் மட்டுமே. சேரன் ஒன்றும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ரவிக்குமாரிடம் அஸிஸ்டெண்டாய் சேரவில்லை. அப்படியிருந்திருந்தால் சேரன் சினிமாவிற்கு வந்திருக்கவே முடியாது. எனவே இச்செய்தி புரளியாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

ஒரு சில இயக்குனர்களிடம்  உதவியாளர்களாய் சேர காத்திருக்கும் ஆட்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.  அவர்கள் தொடர்ந்து படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் இருந்துக் கொண்டேயிருக்கும் அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் உதவி இயக்குனர்களுக்கான சரியான அங்கீகாரமும், நல்ல மரியாதையும், ஓரளவுக்கு நல்ல சாப்பாடும், மாத சர்வைவலுக்கான பணமும் கிடைக்கும். வேலை செய்யும் படத்தில் பேசிய சம்பளத்தை வாங்கிக் கொடுக்கும் இயக்குனர்களை பார்பதே அரிது. கே.எஸ்.ஆரிடம் வேலை பார்க்கும் உதவியாளர்கள் சொல்லி கேள்வி. அவருடய அஸிஸ்டெண்டுக்கான சம்பளம் பேட்டா போன்றவை சரியாக வரவில்லை என்றால் தயாரிப்பாளரிடம் நேரடியாய் சண்டையிடுவாரம். அதான் அவர் பின்னால் எவ்வளவு உதவியாளர்கள் என்று. ஏன் கமலிடம் ஒரு படத்திற்கு மட்டுமே டிஸ்கஷனுக்காக போன என நண்பர் ஒருவர் இரண்டு  மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். நண்பர் சொன்ன விஷயம் என்னவென்றால் நான் இதுவரைக்கும்  வெறும் டிஸ்கஷனுக்காக இரண்டு மாதத்திற்கு ஐம்பதாயிரம் வாங்கியதேயில்லை என்பதுதான். இத்தனைக்கும் பத்து வருட அனுபவம் உள்ளவர். பல இயக்குனர்கள் அவர்கள் உதவியாளர்களிடம் சொல்லும் விஷயம் என்னவென்றால் நீ யார் கிட்ட வேலை செய்யுற தெரியுமா? என்பது தான். யாரிடம் வேலை செய்தால் என்ன வாயும் வயிறும் வேறதானே..?  மனித நேயம், பெண்ணுரிமை, போன்ற சிறந்த கருத்துக்களை சொல்லும் பல இயக்குனர்கள் உதவி இயக்குனரின் சம்பளத்தை கூட மொத்தமாய் பேசி அள்ளி தருவதற்கு பதிலாய் கிள்ளிக்கூட தருவதில்லை என்பதும் கேள்விப்படத்தான் செய்கிறோம். வாய்ப்பு தேடியலையும் எனக்கே ஒரு உதவியாளர் இருக்கிறார்.:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வீடியோ
ட்ரைலர்கள் பல சமயங்களில் சின்ன படங்களுக்கு ஒரு எதிர்பார்பை தரும். எஸ்.பி.பி.சரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த நாணயம் படத்தின் தோல்வி அவர்களின் அடுத்த படமான ஆரண்ய காண்டம் படத்தை தள்ளிப் போட்டாலும் அவர்களது முயற்சி South Asian International Film Festivalலில் செலக்ட் ஆகியிருக்கிற விஷயம் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதான் புது ட்ரைலர். இவர்களோட முதல் தியேட்டர் ட்ரைலரும் அட்டகாசமாய் இருக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்

தமிழ்நாட்டில் ஒரு வருஷத்துக்கு மேல் ஓடி களைத்த படம். ஆனந்த் மிலிந்தின் பாடலுக்காகவும், அமீர், ஜூஹியின் இளைமைக்காகவுமே ஓடிய படம். முக்கியமாய் இது இந்திப்படம் கூட கிடையாது. உருது படம். இப்படத்தின் பாடல்கள் அன்று மட்டுமல்ல இன்று கூட சூப்பர் ஹிட்தான். அதிலும் இந்த பாடல்.. பேர்வெல் பாடல்களில் பசுமையானது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
அட்டகாசமான விளம்பரம். விளம்பரத்தின் முடிவில் இருக்கும் பாஸிட்டிவ் செய்தியை நிச்சயம் விரும்புவீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கும்பகோணம் நிறைய மாறிவிட்டது. சிலபல சிக்னல்கள்  புதிதாய் முளைத்திருப்பதாய் தெரிகிறது. தெருவுக்கு தெரு இருக்கும் காபி க்ளப்புகளையும், அய்யர் ஓட்டல்களையும் காணோம். வெத்தலை சீவல் குதப்பி கொண்டு திரியும் ஆட்களையும் காணோம். கவுளி நாலணாவுக்கு வாங்கி அளவுக்கு இப்போது ஒரு அம்மணி பத்து ரூபாய் கொடுத்து வாங்கினார். வாங்கும் போது பாத்து தம்பி ஒத்தப்படையா கொடுக்காத இரட்டை படையா கொடு என்று கேட்டு வாங்கினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
நாளை என்பது தினமும் வரும், ஆனால் இன்றைய நாள் இன்று மட்டுமே, அதனால் இன்றைய நாளை உபயோகி..

நம்பிக்கை வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை  கொள்வதற்கு உதவும். ஆனால் தன்நம்பிக்கை மட்டுமே அதை அடைய உதவும். எனவே தன்நம்பிக்கையோடு இருங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
டீ
ச்சர்: நம் உடலில் எந்த பாகம் முதலில் கடவுளிடம் போய் சேரும்? என்று கேட்க
ஜானி: நம்முடய பாதங்கள் தான் டீச்சர் என்றான். அதை கேட்ட டீச்சரும் அதெப்படி என்று கேட்க.
ஜானி: ஒவ்வொரு நாள் ராத்திரியும் என் அம்மா இரண்டு கால்களையும் மேலே தூக்கிய படி “O god.. iam coming..iam coming” என்று கத்துவதை பார்த்திருக்கிறேன் என்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Dec 27, 2010

வேரைத்தேடி - கும்பகோணம்

ரெண்டு மூன்று வருடமிருக்கும் குல தெய்வ கோயில் ஊரான கும்பகோணத்துக்கு போய். ரெண்டு வருடம் முன்பு போகவேண்டுமென்று ப்ளான் செய்த போது போக முடியவில்லை. அதற்குபிறகு அப்பாவின் மறைவினால் போகக் கூடதென்று சொன்னதால் இந்த வருடப் பயணம். குழந்தைகளின் விடுமுறையை முன்னிட்டு திடீரென கிளம்ப ப்ளான் செய்தாகிவிட்டது.

என் நண்பர்களின் புத்தக வெளியீட்டை மிஸ் செய்துவிட்டு போக வேண்டிய கட்டாயம். அன்றே என் புத்தக விமர்சனமும் கூட நிகழ்ந்தது. வேறு வழியில்லை. விழாக்களும், விமர்சனக் கூட்டமும் சிறப்பாக நடைப் பெற்றது என்றார்கள். பங்கு கொண்டு சிறப்பித்த நண்பர்கள், பதிவர்கள், வாசகர்களுக்கு மிக்க நன்றி.

நெடுந்தூர கார் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் திண்டிவனம் ரோட்டில் போவதென்றால் அது ஒருவிதமான எக்ஸ்டஸி என்று கூட சொல்லலாம். மிதமான 80-100ல் அந்த நாற்கர சாலையில் இடதும் வலதுமாய் வேகம் குறைக்காமல் செல்வது மிகவும் உற்சாகத்தை தரும் விஷயம். காலை ஏழு மணிக்கு கிளம்பினேன். நடுவில் சேத்தியாத்தோப்பு போகும் வரை சுமார் 20 கி.மீட்டர் ரோடு அவ்வளவு நன்றாக இல்லை. சாப்பாடு, இயற்கை இம்சை, பையன்களின் அதை வாங்கு, இதை வாங்கு என்ற எல்லாவற்றையும் மீறி ஒரு மணிக்கு கும்பகோணம் போயாயிற்று. வழியெங்கு நீர் நிலைகளில் ஏகப்பட்ட  தண்ணீர். மழை 21 நாட்கள் வெளுத்து வாங்கியிருக்கிறது.  இதற்கு நடுவில் கும்பகோணம் வருவதை பற்றிய நான் பதிவில் எழுந்தியிருந்ததை பார்த்து அபி அப்பா வரும் போது மாயவரம் வழியா வாங்க.. நம்ம வீட்டுக்கு ஒரு நடை என்று அழைப்பு விடுத்தார். பிரபல பதிவர் ஜோசப்  வேறு தஞ்சாவூர் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள எல்லாருக்கும் டைமிருந்தால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கும்பகோணத்துக்குள் நுழைந்தால் ஒரே மூச்சடைத்து போயிருந்தது அந்த குட்டி ஊர்.

இருக்கிற குட்டி குட்டி ஓட்டலெல்லாம் ஃபுல். க்யூ, ஒரு ஹோட்டலில் கூட ரூமில்லை. எங்கு  பார்த்தாலும் கார்கள், வேன்கள், சாதாரண ஓட்டலில் கூட ரூம் வாடகை 1000த்துக்கு மேல். ஒரு சில ஓட்டல்களில் முன்றாவது மாடியில் உள்ள ஓட்டலில் வேலை செய்யும் ஆட்களுக்கான ரூம்களையெல்லாம் வாடகைக்கு விட ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவு கூட்டம். வெக்கேஷன் சார்.. அதான் ஒரு பத்து நாளைக்கு அப்புறம் பழைய படிதான் என்றார் ஒரு ஹோட்டல் காரர். மாமி மெஸ்ஸில் ஒன்பது மணிக்கே கடை மூடிவிட்டார்கள். பக்கத்தில் வெங்கட்ரமணா என்று ஒரு கடை புதிதாய் ரெஸ்டாரண்டும், லாட்ஜிங்கும் திறந்திருக்கிறார்கள். சைக்கிள் கூட நிறுத்தி வைக்க வசதியில்லாத எடத்தில் எப்படி ஹோட்டல் கட்ட அனுமதித்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை.  அங்கும் செம கும்பல். ஒரு வழியாய் பெரிய தெரு கே.வி.ஆரில் இரண்டு சிங்கிள் ரூம் கிடைத்தது. கும்பகோணம் முழுவதும் எல்லா கோவில் சுவர்களிலும் நோட்டீஸ், போஸ்டர்கள். கும்பேஸ்வரர் கோயில் சுவற்றில் கொஞ்சம் அதிகமே. ஒட்டுபவர்களை போலீஸ் வசம் ஒப்படைக்கபப்டுவார்கள் என்று போட்டிருந்தார்கள். போஸ்டர் ஒட்டியிருந்த திமுக, அதிமுக,காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எல்லாரையும் யார் போலீஸிடம் ஒப்படைப்பார்கள்?. அவர்களுக்கு தெரிய வேண்டும் அவர்கள் ஊரின் தொன்மையை பற்றி. அமெரிக்காவில் ஒரு மாநிலம் இருக்கென்று சொல்வார்கள் பெயர் மறந்துவிட்டது. பழம் பெரும் நகரமான அவ்வூரை இன்றளவில் அதன் தொன்மை கெடாமல் பாதுகாத்து வருகிறாகளாம். ஒரு போன் கனெக்‌ஷன், போஸ்ட் போடுவது போன்ற ஒவ்வொரு விஷயத்துக்கு யோசித்துதான் செய்வார்களாம். அவ்வளவு வேண்டாம் கோயில் சுவற்றையாவது விட்டு வைக்கலாம் இல்லையா..? 

ஒரு தூக்கத்தை போட்டுவிட்டு நான்கு மணிக்காய் சுவாமிமலை வந்தோம். அருமையான அபிஷேக தரிசனம். பெரியவனை விட சின்னவனுக்கு படு உற்சாகம். அங்கிருந்த யானையை பார்த்து. பத்து ஒரு ரூபாய்க்கு யானையின் ஆசிர்வாதம். பழம், தேங்காய் கொடுத்தால் கிடையாது. அது சரி.. யானைக்கா பசி.

போன முறை சிறியவனுக்கு மொட்டை போடும் போது யானை கிட்டவே போக பயந்தவனுக்கு ஆச்சர்யமாயிருக்க, “டேய்.. அந்த யானை பக்கத்தில உக்காந்திருக்கிறாரே அந்த அங்கிள்.. கம்பால தும்பிக்கையா தொட்டாத்தான் யானை ஆசீர்வாதம் செய்யும் என்று ஆசிர்வாதத்தின் மீதான ஆச்சர்யம் விலகி யானை மீது மட்டுமான ஆர்வத்துடன் பெரியவன். அடுத்து ஒரு வாரிசு உருவாகிவிட்டது. அங்கேயே உட்கார்ந்து கோயில் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் சக்கரைப் பொங்கல் தவிர ஏதுமில்லாததால் வாங்கினேன். ஸ்பூனில் கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய் என்றார்கள். சாயங்காலக் கொள்ளை. முருகன் கண்ணை குத்துவார். அப்பா எப்பவும் அப்படித்தான் ஒவ்வொரு முறை வரும் போது அந்த அந்த கோயில் பிரசாதங்களை கோயிலில் வாங்கி சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்புவார். அடுத்த வாரிசு.. பாலோயிங்..

அங்கிருந்து திருக்கருக்காவூர்.  பாபநாசம் வழியாக போய் அங்கே போய் சேர்ந்த போது மார்கழி குளிரும், காற்றும் சில்லென அடிக்க இருட்டியிருந்தது. எட்டு மணிக்கு நடை சாத்திவிடுவார்கள் என்றார்கள். வழி கேட்க நின்ற இடத்தில் பூ விற்றுக் கொண்டிருந்த கிழவி. வழி சொல்லிவிட்டு உள்ளார கடை ஏதும் கிடையாது இங்கயே வாங்கிட்டு போயிருங்க. என்று அர்சனை தட்டுகளையும், மாலைகளையும் தர, வாங்கிக் கொண்டு கோயிலை அடைந்த போது வாசலில் பத்து  கடைகள். ட்யூப்லைட் வெளிச்சத்தில் மின்னியது. கிழவியின் புத்தி சாதுர்யம் என்பதா? அல்லது திருட்டுத்தனம் என்பதா?. மிக அருமையான தரிசனம். வந்திருந்த எல்லாருக்கும் இவ்வூரை பற்றிய விஷேசத்தோடு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்.

ரொம்ப நாள் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு அங்கு பூஜித்து மந்திரிக்கப்பட்ட நெய்யும், எண்ணெய்யும் தருகிறார்கள். அதை 41 நாள் கணவனும், மனைவியும் தினமும் உள்ளுக்குள் ப்ரீயட் நாட்களை தவிர உட்கொண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது நம்பிக்கை. அது மட்டுமில்லாமல் நல்ல படியாய் குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைக்கு பால் சுரக்க என்று பல நம்பிக்கைகள். கண்களில் ஒரு வித சோகத்தொடு வந்திருந்த தம்பதிகளையும், கர்பிணிகளையும், அம்மன் சந்நிதியில் அவளின் ஆசியால் பிறந்த குழந்தைகளை  தொட்டிலிட நேரம் கேட்டும்  நிற்கும்  பெற்றோர்கள்.  அமெரிக்காவிலோ, ஐரோப்பவிலோ வாழும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு குழந்தை பிறக்க, அவர்கள் சார்பாய் வந்து நெய்யும் எண்ணெய்யும் வாங்கிப் கொரியரில் அனுப்பப் போகும் பெரியவர்கள்.  என்று ஒரு விதமான உணர்ச்சி களவையாக இருந்தது அக்கோயில். என் முதல் மகன் ஒரு அவசரக்காரன். ஏழரை மாதத்தில் பிறந்தவன். அவனின் பிறப்புக்காக வேண்டிக் கொண்டு போக தள்ளிப் போட்டுக் கொண்டுவந்த விஷயம் இம்முறை நிறைவேறியது. சக்தியின் நிதர்சனம்.

நண்பர் வாசகர் முத்து பாலகிருஷ்ணனும் தூத்துக்குடியிலிருந்து கும்பகோணம் வந்திருந்தார். என் பதிவை மொபைலில்  பார்த்துவிட்டு போன் செய்தார். முடிந்தால் சந்திப்போம் என்றேன். முடியவில்லை. சாரி நண்பரே..

காலையில் குலதெய்வக் கோவிலில் அபிஷேகம் ஆராதனை என்று எல்லாம் அவள் அருளில் சிறப்பாக நடந்தது. மனதில் ஒரு பெரிய நம்பிககை வந்தது. அடுத்த சில மாதங்களுக்கான எனர்ஜியை பெற்றுக் கொண்டது போலிருந்தது.  பூசாரி… சில விஷயங்களை கோவிலுக்கு செய்ய வேண்டுமென்றார். நிச்சயம் செய்வோம் என்ற போது என் தாத்தா, அப்பாவோடு போய் வந்த போது இலலாத ஒரு உணர்வு இப்போது வேறு மாதிரியாய் இருந்தது. என் மகன்களிடம்  கோவிலை பற்றிச் சொல்லும் போது. கடவுளுக்கும் நமக்குமான  நெருக்கம் அதிகமானது போலிருந்தது. பொறுப்பு அதிகமானது போலிருந்தது. என் அடுத்த தலைமுறைக்கான செய்தி கடத்த வேண்டிய கடமை தெரிந்தது. பெரியவன் சர்வேஷிடம் பேசும்போது ஏனோ என் குரல் அப்பாவின் குரல் போலிருந்தது. நிச்சயம் அவள் அருளில் அவளின் கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அது அவள் கையில் தான் இருக்கிறது.

காலையிலேயே விசேஷம் எல்லாம் முடிந்ததால் ஜோசப்பை சென்னையில் பார்பதாய் சொல்லிவிட்டு, மாயவரத்தில் அபி அப்பாவை சந்தித்தோம்.  ஒல்லியாக நாகேஷ் போலிருந்தார். அபியை பார்த்தேன். அமைதியான பெண். அபி அப்பா, அவரது தம்பி செளம்யன் ஆகியோருடன் ஒரு அருமையான அரட்டைக் கச்சேரி எல்லாம் முடித்து கிளம்பினேன். அபி அப்பா, செளம்யன் நிச்சயம் இன்னொரு மீட் போடுவோம். செம இண்ட்ரஸ்டிங் அரட்டை. கிளம்பும் போது உங்க ஊர்ல யாராவது சினிமா அர்வமுள்ள தயாரிப்பாளர் இருந்தா சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வந்தேன். செளம்யனிடம் ஒரு ஒளி தெரிந்தது.  திருபுவனம் வருகையில் சரியாய் ஒரு போன் அபிஅப்பாதான். “தலைவரே.. இவ்வளவு தூரம் வர்றீங்க.. நீங்க இப்ப சரியா திருபுவனத்திலதான் இருப்பீங்க.. அங்க சரபேஸ்வரர் ரொம்ப பிரஸித்தம். இவரை பார்த்துட்டா எல்லாமே ஓக்கே.. உடனே ஒரு நட போயிட்டு வந்துருங்க” என்று போன் அடித்தார். நான் அவர் போனை அட்டெண்ட் செய்ய காரை நிறுத்திய இடம் சரபேஸ்வரர் கோயிலுக்கு திரும்பு அந்த ரோட்டின் முனையில். எல்லாம் அவன் செயல்.

மாயவரம், சிதம்பரம், நன்னிலம் என்று வளைந்து, வளைந்து செல்லும் சாலையின் வழியாய் வரும்போது தஞ்சை மண்ணின் பசுமை தெரிந்தது. ஊரெங்கும் கிடைக்கும் பவண்டோவின் ஆதிக்கம் சந்தோஷம் கொடுத்தது. எல்லாவிடங்களிலும் இலவசத் தொலைக்காட்சி சரியாக ரீச் ஆகியிருக்கிறது. ரோட்டோர எல்லாக் கடைகளில் தொலைக்காட்சிபெட்டி ட்ரான்ஸிஸ்டரை ரீப்ளேஸ் செய்திருந்தது. மழை மாவட்டத்தின் வளர்ச்சியை மூழ்கடித்திருக்கிறது. மக்கள் அரசிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் நிவாரணமாக.

வழியில் பாண்டி வந்து மதர் செண்டரை அடைந்து அங்கு ஒரு விசிட் முடிந்ததும், அங்கிருந்து திண்டிவனம் ரோடு பிடித்து சென்னைகான பயணம் சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  ஒரு மணி நேரம் வரை. அதற்கு பிறகு கொடுமையான ட்ராபிக் ஜாம். விடுதலை சிறுத்தைகளில் தமிழுணர்வு இயக்க கூட்டமாம் மறைமலைநகரில். எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு நடு ரோட்டில் ஆடிக் கொண்டிருக்கும் தோழர்களும், பக்கத்து வண்டியில் இருக்கும் பெண்களை பார்த்ததும் எக்ஸ்ட்ராவாக அட்ரிலின் ஏறி அசிங்க வார்த்தைகளின்  ஆர்பரிப்பும், அவர்கள் வண்டியை யார் முந்த முயற்சித்தாலும் அதிரடியாய் உள்நுழைந்து பதற வைப்பதுமாய் வந்தது. மிக அருமையான பயணமாய் ஆரம்பித்து மிகக் கொடுமையான பயணமாய் அமைவதந்தற்கான காரணம் திருமாவளவனார். அரசு இம்மாதிரியான விஷயங்களுக்கு முன்னெச்செரிக்கையாய் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?. பல இடங்களில் போலீஸ் ஆளுங்கட்சி ஆதரவு என்பதற்காக எதுவும் செய்யாமல் இருந்தது அவர்களின் ஆட்டத்தை அதிகப்படுத்தியது. எந்த ஒரு காரணத்துக்காக நிற்கிறோம் என்று தெரியாமல் மணிக்கணக்கால் நிற்பது போன்ற கொடுமையை அனுபவித்தால்தான் தெரியும். பாண்டியிலிருந்து  சென்னை வர.. ஆறு மணி நேரம் ஆனது.
கொத்து பரோட்டா நாளை வெளிவரும்.. கேபிள் சங்கர்

Dec 25, 2010

புத்தகக் கொண்டாட்டம்

ஆம் கொண்டாட்டம் தான். டிசம்பர் வந்து விட்டால் எப்படி சங்கீத சீசன் ஆரம்பித்துவிடுமோ அது போல புத்தக கண்காட்சியையொட்டி புதிய, பழைய, சமகால எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியாக ஆரம்பித்துவிடும். அவ்வகையில் வலைப்பதிவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அவர்களின் எழுத்து புத்தக வடிவில்  அதிகம் வெளியாவதும் இம்மாதத்தில் தான். அவ்வகையில் இம்மாதம் நம் சக பதிவர்களின் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
சுரேகா
மிக இனிமையாக பழக்கக்கூடிய நண்பர். பல விஷயங்கள் அறிந்த சுய புத்திக்காரர். சந்தித்த மறு நிமிட மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் புரிந்துணர்வு கொண்டவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரின் முதல் நூலான “நீங்கதான் சாவி” என்கிற தன்னம்பிக்கை நூலை நாகரத்னா பதிப்பக உரிமையாளரும், பதிவருமாகிய குகன் வெளியிடுகிறார். அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் நேரம் : 4.30 மணி, தேதி:25.12.10
For BLOGநர்சிம்
இவரை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிரபல பதிவர், ஏற்கனவே அய்யனார் கம்மா எனும் சிறுகதை தொகுதி வெளியிட்டவர். தமிழின் பால் ஈடுபாடு கொண்டவர். நல்ல சிறுகதைகளால் அறிமுகமான இவரின் ஆர்வம் கொஞ்சம், கொஞ்சமாய் கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்டு ஒரு கவிதை புத்தகமே வெளியிடும் அளவிற்கு எழுத ஆரம்பித்துவிட்டவர். தேதி: 26.12.10, இடம்: எல்.எல்.ஏ.பில்டிங், அண்ணாசாலை மாலை:6.00 மணி
theekadal_final.jpg 1அகநாழிகை வாசு
என் இனிய நண்பர், பதிவர், நிறைய இலக்கிய அனுபவம் உள்ளவர். பதிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், வழக்கறிஞர், வாழ்க்கையை கொண்டாடுபவர், அகநாழிகை சிற்றிதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். இவரது முதல் கவிதை தொகுப்பு 26.12.10, எல்.எல்.ஏ.பில்டிங், அண்ணாசாலையில் மாலை ஆறு மணிக்கு உயிர்மை  வெளியாகிறது.
நிலா ரசிகன்
ஏற்கனவே இரண்டு புத்தகங்களுக்கு சொந்தக்காரர். மிகவும் இயல்பாய் பழக்கக்கூடிய நண்பர். தான் மட்டுமில்லாமல் தம்மை சுற்றியுள்ளவர்களை தன்னுடன் அழைத்துச் சொல்பவர். இவரது கவிதை நூலும் 26.12.10 எல்.எல்.ஏ பில்டிங், அண்ணாசாலையில் மாலை ஆறு மணிக்கு உயிர்மை வெளியிடுகிறது.
யாத்ராவின் மயிரு கவிதை தொகுப்பை அகநாழிகை பதிப்பகம் வெளியிடுகிறது 29ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில்..
yathra_invitation எனவே பதிவர்கள், வாசக நண்பர்கள் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க நண்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.

26ஆம் தேதியன்று ஈரோட்டில் நடக்கவிருக்கும் சங்கமம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    

டிஸ்கி: நாளையும், நாளை மறுநாளும் கும்பகோணம், தஞ்சாவூரில் இருப்பேன். பதிவுலக நண்பர்கள், வாசகர்களை சந்திக்க விருப்பம். தொடர்பு கொள்ள: 9840332666
கேபிள் சங்கர்

Dec 24, 2010

மன்மதன் அம்பு

manmadhan சென்ற வருட வெற்றிப் படமான உன்னைப் போல் ஒருவனுக்கு பிறகு கமலின் அடுத்த படம். மன்மதன் அம்பு. மன்னார், மதன், அம்புஜாக்‌ஷி எனும் மூன்று பேரை குறிக்கும் பெயர் தான் என்றாலும் மன்மதனின் அம்பு பாய்ந்ததில் காதலர்களுக்கிடையே நடக்கும் ஊடலையும், பிரிவையும் பற்றிய  நகைச்சுவை படம் தான்.

அம்புஜாக்‌ஷி என்கிற நிஷா ஒரு வெற்றி பட நடிகை. அவளுடய காதலனும், வருங்கால கணவனுமாகிய மதன கோபாலுக்கு அவள் மற்ற நடிகர்களிடம் நெருக்கமாய் பழகுவது பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவனுடய அம்மா. அவளுக்கு ஒரு நடிகை தன் மருமகளாய் வருவது பிடிக்கவில்லை. மதன கோபாலின் சந்தேகப் புத்தியினால் அம்புஜாக்‌ஷி என்கிற நிஷா அவனை விட்டு பிரிகிறாள்.

manmadhan1
மூன்று வருடங்களுக்கு பிறகு தன் பள்ளித் தோழியான தீபாவுடன் ஒரு ஹாலிடே டூருக்காக வெனீஸ் வருகிறாள். தீபா ரெண்டு குழந்தைகளுடன் வாழும் டைவர்ஸி.  அம்புஜாக்‌ஷியை பற்றி டிடெக்டிவ் வேலை செய்யச் சொல்லி மன்னார் என்கிற மேஜர் ராஜ மன்னாரை அனுப்புகிறான் மதன கோபால். மன்னார் அவளை பற்றி நல்ல தகவலாய் கொடுக்கிறான். நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்கு நான் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மதன் பணம் தர மறுக்க, தன் நண்பனின் கான்ஸர் ஆப்பரேஷனுக்காக இந்த ப்ராஜெக்டை எடுத்தவன் வேறு வழியில்லாமல் அம்புஜாக்‌ஷியை பற்றி மதனிடம் பொய் சொல்கிறான்.  அம்புஜாக்‌ஷிக்கும் மதனுக்குமான காதல் என்ன ஆனது? மன்னாருக்கும் அம்புஜாக்‌ஷிக்குமான உறவு என்ன? என்பதை காமெடியாய் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்த்ததும் அப்படியே மெய்மறந்து போய் விட்டேன். நான் பார்பது என்ன தமிழ் படமா? இல்லை ஆங்கில படமா என்று?. அவ்வளவு பர்பெக்டான ஒரு மேக்கிங்கும், காட்சியமைப்புகளும்.  ஆரம்ப காட்சியிலிருந்து படத்தின் பலம் டயலாக்குகள். கதையே கொஞ்சம் ஹைக்ளாஸாக இருப்பதால் அவர்கள் பேஷிக் கொள்ளும் தமிழும், கொஞ்சம் பாலீஷாகவே இருப்பது தவிர்க்க முடியவில்லை.  மிக அருமையான டயலாக்குகள்.  ஸ்மார்ட் ஒன்லைனர்கள். முக்கியமாய் அம்புஜாக்‌ஷியும் மதனும் விவாதம் செய்து கொண்டே வண்டி ஓட்டும் காட்சி, விஷுவலாகட்டும் நடிப்பாகட்டும், மேக்கிங்காட்டும் அட்டகாசம். அந்த காட்சியில் ஐஸ்ட் லைக்தட்டாக நடக்கும் விபத்து படத்தின் முக்கிய விஷயமாய் உருவெடுப்பது இண்ட்ரஸ்டிங்.

manmadhan-ambu-desktop-wallpapers022
இவ்வளவெல்லாம் இருந்தும் வெனீசில் கமல் அறிமுகமானதும் இன்னும் சூடு பிடிக்க வேண்டிய படம் கொஞ்சம் ஸ்லோவாகத்தான் போகிறது. படத்தின் மிக முக்கிய கேரக்டர் தீபாவாக வரும் சங்கீதாவின் கேரக்டர். மிக லைவ்லியான இரண்டு குழந்தைகள் பெற்ற டைவர்ஸியாய் இருந்தாலும், மற்றொரு வாழ்க்கைக்காக தயாராக இருக்கும் அவரது கேரக்டர் அட்டகாசம். மனுஷி செம பர்மாமென்ஸ். நிச்சயம் இவரது லைவ்வான பர்பாமென்ஸுக்காகவே பார்கலாம்.  தன் பையன் தூங்கிட்டான இல்லையான்னு கண்டுபிடிக்க தூங்கும்போது கால் கட்டைவிரல் ஆடும் சொல்லும் சீன் இம்ப்ரசிவ். தன் கல்யாணத்தை பற்றி சொல்லும் போது “matrimony may not be good but alimony is good”, என்பது போன்ற வசனங்கள் படம் பூராவும் நச் நச்சென விழுந்து கொண்டேயிருக்கிறது.
 
த்ரிஷாவை விட சங்கீதாவிற்கு செம கேரக்டர். கமலும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் தங்களை பற்றிய உண்மைகளை சொல்ல விழையும் காட்சிகள் மிக இயல்பு. கமல் நன்றாக நடித்தார் என்று சொல்வது சூரியனுக்கே.. சரி விடுங்கள். மாதவனின் இயல்பான உருவம் மல்டி மில்லியனர் கேரக்டரில் சரியாக சூட் ஆகிறது. மனுஷன் பாரில் குழறியபடி பேசும் பேச்சு சரி காமெடி. அதே போல க்ளைமாக்ஸில் வரும் ஆள் மாறாட்ட மேட்டர் நடக்கும் காட்சிகளில் கமல், சங்கீதா, அந்த சின்னப் பையன், மாதவன் எல்லோரும் கலகலப்பூட்டுகிறார்கள். கமலின் முன்னாள் வாழ்கையை ஒரு பாடலில் ரிவர்ஸிலேயே சொன்னதில் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியன் தெரிகிறான்.  அந்த முனைப்பை படத்தின் முதல் பாதியில் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது பாதியில் தான் படம் வேகமெடுக்கிறது.

manmadhan-ambu-movie-press-meet-stills_3_054036123
படம் பெரும்பாலும், ரோம், பார்சிலோனா, ஸ்டார் க்ரூஸில் எடுக்கபட்டிருக்கிறது. ரெட் ஒன் டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டிருக்கிறது. அருமையான ஒளிப்பதிவு. முக்கியமாய் அந்த க்ரூய்ஸின் டாப் ஆங்கிள் ஷாட்டுகளும், கடலின் பின்புறத்தில் பேசும் காட்சிகள், ரோம், பர்சிலோனா காட்சிகள் எல்லாம் நச். வாழ்த்துக்கள் மனுஷ் நந்தன்.  இன்னொரு விஷேசம் லைவ் சிங்க் சவுண்டும், ஷானின் எடிட்டிங்கும்.
சூரியா ஒரு கேமியோ செய்திருக்கிறார். படம் பூராவும் வரும் அந்த மலையாள தம்பதிகள் குஞ்சனும், மஞ்சு பிள்ளையும் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல சமயங்களில் எரிச்சல் படுத்துகிறார்கள். மாதவனின் அம்மாவாக வரும் உஷா உதூப் சரியான செலக்‌ஷன்.  கேன்சரால் பாதிக்கப்பட்ட கமலின் நண்பரான மொட்டை தலை ரமேஷ் அரவிந்தும், அவர் மனைவி ஊர்வசியை பற்றி  கொடுத்த வேலையை சரிவர செய்திருக்கிறார்கள். ஊர்வசியுடன் கமல் போனில் பேசும் காட்சியில் அவர் இங்கு ஒரு பக்கம் அழுவதை வெளிக்காட்டாமல் பேச முயல, இன்னொரு பக்கம் ஊர்வசி பேசுமிடமும் நெகிழ்ச்சி. இவர்கள் எல்லோருடனும் சிறப்பாக நடித்த செல்போன்களுக்கு வாழ்த்து.  தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஓகே. பின்னணியிசையில் பாடல்களின் பி.ஜி.எம்மையும், மற்ற பாடல்களை மாண்டேஜுகளாகவும், கதைய்னை நகர்த்திச் செல்லவே  பெரும்பாலும் பயன்படுத்தியிருப்பது நன்று.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் செல்போனில் பேசியபடியே நகர்வதால், முதல் பாதியின் தொய்வை தவிர்க்க காட்சிகள் இல்லாததாலும், கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. கமலுக்கும், த்ரிஷாவுக்குமிடையே காதல் என்ற விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். என்ன தான் க்ளாஸான மேக்கிங், ஷார்ப்பான வசனங்கள், சங்கீதா, மாதவன், கமல் ஆகியோரின் சிறந்த நடிப்பு, உறுத்தாத ஒளிப்பதிவு, தொந்தரவு செய்யாத பாடல்கள்,  லாஜிக்கில்லாத மேஜிக்காய் க்ளைமாக்ஸ் பட்டாசு காமெடி என்று பல Positive விஷயங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவான உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

மன்மதன் அம்பு – இலக்கையடைந்தும் தைக்கவில்லை.
கேபிள் சங்கர்

Dec 23, 2010

சினிமா வியாபாரம்-2-4

பகுதி-4


ஆமாம் நண்பர் கொண்டு வந்த செய்தி கொஞ்சம் சந்தோஷம் கொடுக்கத்தான் செய்தது. ஒரு புதிய பட நிறுவனம் தயாரித்த படமொன்றை நண்பர் ஒருவர் வாங்கியிருப்பதாகவும், சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் அலைவதாகவும் சொன்னார். அது முரளி நடித்த மனுநீதி என்கிற படம். இன்றைய பிரபல நடிகராய் இருக்கும் தம்பி ராமையா இயக்கிய படம். மறைந்த நடிகை பிரதிக்யுஷா அறிமுக மான படம் என்றும் நினைக்கிறேன்.

உடனடியாய் அந்த விநியோக கம்பெனிக்கு போனவுடன், எங்களை வரவேற்றவர், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் சுரத்து குறைந்துவிட்டார். அவர் சொன்னதும் கடைசி காலங்களில் பிட்டு படங்கள் வெளியிட்டதால் முகம் சுளித்தார். அதனால் தான் யோசிக்கிறேன் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவர் கொஞ்சம் பிகு செய்வதாய் தான் தெரிந்தது. என் நண்பரிடமும், வாத்தியாரிடமும் லேசாக சைகை காட்டிவிட்டு.. சரி விடுங்க சார்... என்று கிளம்ப எத்தனித்த போது.. அவர் வாத்தியாரை பார்த்து.. என்ன சார் கோச்சிட்டு போறாரு.. இப்படி கோவப்பட்டா நம்ம தொழிலுக்கு ஆவுமா? உட்காருங்க.. என்றார்..

எனக்கு மனசுக்குள் ஒரு சந்தோஷம் கூத்தாடியது. நான் போட்ட கணக்கு ஒர்க்கவுட் ஆகியதே என்று.. அங்கே இங்கே பேசி.. ஒரு வழியாய் ஒரு ஐம்பதாயிரம் பிரிண்டுக்கு மட்டுமான அட்வான்ஸ் கொடுத்துவிட்டு எங்கள் தியேட்டருக்கு முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை ஒப்பந்தம் போட்டு வந்தோம்.

வெளியே வந்த போது என் நண்பர் கேட்டார் எப்படி திடீர்னு கோபப்பட்டு எழுந்தா மாதிரி சீன் போட்டே? என்று ஆச்சர்யமாய் கேட்க.. அது வேற ஒண்ணுமில்ல.. உதயத்தில பெரிய படம் வருது. மத்த காம்ப்ளெக்ஸுல ஏற்கனவே ரெண்டு படம் ஓடிட்டிருக்கு. பக்கத்தில இருக்கிற ஒரு தியேட்டர் காசி.. அதில வேற படம் ரிலீஸாகுது. அப்படியிருக்க, இவருக்கு இந்த தியேட்டரை விட்டா வேற தியேட்டர் சிட்டி பார்டர்ல இருக்கிற செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் வேறேதும் கிடையாது.. இதையெல்லாம் கால்குலேட் செஞ்சிதான் சுமமா சீன் போட்டேன். ஒரு வேளை சரி போங்கன்னு சொல்லிட்டான்னா.. என்ன பண்றதுன்னு யோசனை வந்தாலும் ஒரு நம்பிக்கைதான் எழுந்திட்டேன். ஒர்கவுட் ஆயிருச்சு. என்றேன்.

ஒரு வழியா படம் போட்டாச்சு ரிலீஸ் டேட்டுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம், சரியாக தியேட்டர் திறக்க பத்து நாட்களுக்கு முன் போட்டோ கார்டுகள், போஸ்டர்கள் எல்லாம் எக்ஸ்ட்ராவாக வாங்கி வந்து தியேட்டர் டிஸ்ப்ளேவில் வைத்துவிட்டு, கொஞ்சம், கொஞ்சமாக ஏரியாவுக்கு ஒன்றாய் போஸ்டர் ஒட்டி தியேட்டர் திறக்கப் போவதை அறிவித்தோம்.

ஒரு திரையரங்குக்கான போஸ்டர் ஒட்டுவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அதில் எத்தனை தில்லாலங்கடிகள் இருக்கிறது என்று அன்று எங்களுக்கு தெரியவில்லை.

தியேட்டர் திறக்கும் நாளும் வந்தது. காலையில் நல்ல நேரம் பார்த்து பூஜையெல்லாம் போட்டு ஆர்வமாய் காத்திருக்க ஆர்ம்பித்தோம். பெரிய படம் ஒன்றும் வெளிவந்திருந்த நேரத்தில் முரளி அவ்வளவு பெரிய ஹீரோவாக இல்லாததால் பெரிய கூட்டமில்லை என்று நாங்கள் நினைத்திருந்ததற்கு மாறாக பப்ளிசிட்டி இலலை என்று ஒரு பேச்சு எழும்பிய போதுதான் போஸ்டர் பப்ளிசிட்டி செய்தோமே என்ற யோசனை எழும்பியது.

தியேட்டரை பற்றி முன்பே தெரிந்த ஆடியன்ஸ்தான் தியேட்டருக்கு வ்ந்து புதிப்பிக்கப்பட்டிருக்கும் அரங்கை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்கள். பெயிண்ட் அடித்து பளபளக்கு ஸ்க்ரீன் கூட அவர்களுக்கு ஆச்சர்யத்தை தரவில்லை.. அவர்கள் ஆச்சர்யப்பட்டது நேராக்கப்பட்ட சீட்டுகளூம், அதற்கான நம்பர்களும் தான்.

சீட்டு நம்பர்படிதான் உட்கார வேண்டும் என்று சொன்னவுடன் பலருக்கு கோபம் வந்தது. காலியாத்தானே இருக்கு நான் என் இஷ்டத்துக்குதான் உட்காருவேன் என்று அடம்பிடித்தார்கள். ஏதோ அவர்கள் வீட்டில் கிடைத்த சுதந்திரம் கெட்டுவிட்டதாகவே நினைத்து புலம்பினார்கள்.

வரிசை என் சீட்டுகளில் உட்கார மாட்டேன் என்று அடம்பிடித்தவர்களில் இன்னொரு வகையினரும் உண்டு, ஃபேன் காற்று சரியாக வராத இடங்களில் அவர்கள் உட்காருவதில்லை என்றும் அதனால் காலியாய் இருக்கிற ஃபேனுக்கு அடியிலான சீட்டுகளில் தான் உட்காருவோம் என்றார்கள். அவர்களுக்கு தெரியாது எல்லா பேன்களும் பழுது பார்க்கப்பட்டு, எங்கு உட்கார்ந்தாலும் காற்று வருகிறார் போல திரையரங்கு பூராவும் இண்டஸ்ட்ரியல் பேன்கள் ஆறு போட்டிருந்ததை கவனிக்கவில்லை. உட்கார வைத்து அவர்கள் வரிசைக்கான ஃபேனை போட்டதும் தான் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.

இதெல்லாம் இருந்தும் உட்கார மாட்டேன் என்று சொன்னவர்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கவே முடியாது. அவர்கள் தியேட்டரின் உள்ளேயே தம் அடிப்பவர்கள். இவர்கள் எல்லாம் முடிந்த வரை தண்ணி அடித்துவிட்டு, போதையோடு பிட்டுபடங்களுக்கு வந்து முன் சீட்டில் கால் போட்டபடி அவரவர் வசதிக்கேற்ப பீடியோ, சிகரெட்டையோ வலித்தபடி, அவ்வப்போது போதையில் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள், தியேட்டரை ஏதோ தன் வீட்டு பாத்ரூம் என்று நினைத்துக் கொண்டு எச்சில் துப்பிக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் அலைபவர்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்களை தியேட்டர் ஊழியர்கள்தான் எழுப்பி விடுவார்கள். இவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

முதல் நாள் ஆகையால் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தியேட்டருக்குள் ஒரு நடை நடந்து சிகரெட், பீடி வாசனை வந்தால் அந்த வரிசையை கண்டு பிடித்து, திட்டி வெளியேற்றுவது தான் எங்கள் முக்கிய வேளையாக இருந்தது. அடுத்த நாளிலிருந்து முடிவெடுத்தோம். தண்ணியடித்துவிட்டு வருபவர்களுக்கு டிக்கெட் கொடுக்கக்கூடாது என்று அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று அடுத்த நாள் தான் தெரிந்தது.. அத்தோடு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போஸ்டர்கள் ஒட்டியும் படம் பற்றிய விளம்பரமேயில்லையே என்று கேள்விப்பட்டு அதன் பின்னணியை விசாரித்த போது கிடைத்த செய்தி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
கேபிள் சங்கர்

Dec 22, 2010

2010- தமிழ் சினிமா-1

பெரிய படத்திற்கு நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்களினால் பெரிய ஓப்பனிங் கிடைத்துவிடும். அட்லீஸ்ட் இரண்டு வாரம் கேரண்டி. அதே சிறிய படங்களை பற்றிய செய்தி மக்களிடம் போய் சேருவதற்கே ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிடும். ஆனால் அப்படி நல்லாருக்கு என்று சொல்லி மக்கள் போய் பார்ப்பதற்குள் திரையரங்கிலிருந்து படம் எடுக்கப்பட்டுவிடுகிறது என்பது மிகப் பெரிய சோகமே. அப்படி ஓரளவுக்கு சுமாரான படங்கள் கூட வந்த சுவடு தெரியாம போன வருடமும் இந்த 2010 தான்.
ஜனவரி
புகைப்படம், ஆயிரத்தில் ஒருவன், நாணயம், குட்டி, போர்களம், தமிழ்படம், கோவா ஆகிய படங்களுடன் இன்னும் சில சின்ன படங்கள் வந்தது. அதில் புகைப்படம் மேக்கிங்கிலும் ஒளிப்பதிவிலும் பேசப்பட்டாலும் பெரிதாக போகவில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் கிரிட்டிக்கலாக நிறைய விவாதிக்கப்பட்டாலும், பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த மாதத்திய சிறந்த ஓப்பனிங் என்று தான் சொல்ல வேண்டும், நாணயம், குட்டி, போன்ற படங்கள் எல்லாம் பெரிதாக பேசப்படவேயில்லை. போர்களம் அதன் மேக்கிங்குக்காக பேசப்பட்டது. கோவா பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி புஸ்ஸானது. இந்த மாதத்திய ஆச்சர்யப்படுத்தும் ஹிட்.. தமிழ் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட தமிழ் படம் தான். சுமார் இரண்டரை கோடியில் தயாரிக்கப்பட்டு ஏழு எட்டு கோடிகள் வசூலித்தது என்கிறது வியாபார வட்டாரம்.
Aayirathil-oruvan-Stills-040 tamilpadam
ஹிட் – தமிழ் படம்
ஆவரேஜ்- ஆயிரத்தில் ஒருவன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிப்ரவரி
டிவி நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, அஜீத்தின் அசல், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா? ஆகியவை வெளியாகியது. கதை வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அஜீத், சரண், பரத்வாஜ் என்று வெற்றிக்கூட்டணியாக வலம் வரும் என்று நினைத்த கருப்பு குதிரை.. கழுதையாய் போனது மிகப் பெரிய சோகமே. விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையை சன் டிவிக்கு தத்துக் கொடுத்துக் கூட வெளங்காத சவலை பிள்ளையானது. அம்மாதத்தின் கடைசியில் வெளிவந்த ரெட் ஜெயண்டின் விண்ணைத்தாண்டி வருவாயா?வுக்கு கிடைத்த ஓப்பனிங், கவுதமுக்காகவா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கா என்று யோசிக்க வைத்தது. அம்மாதிரியான மிகப் பெரிய ஹிட் என்று தான் அப்படத்தை சொல்ல வேண்டும். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. வி.தா.வ.
vinnai-thaandi-varuvaaya-01 ஹிட்: விண்ணைத்தாண்டி வருவாயா?
ஆவரேஜ்: ஏதுவுமில்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்ச்
angadi-theru-3041 சென்ற மாத முடிவில் வந்த விண்ணைத்தாண்டி வருவாயா?வின் தாக்கம் இந்த மாதமும் தொடர்ந்தது. அவள் பெயர் தமிழரசி, தம்பிக்கு இந்த ஊரு, முன் தினம் பார்த்தேனே, அங்காடித்தெரு ஆகியவை வெளியாகின.. மோசர்பியர் தயாரிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி, இந்த டைட்டிலே படம் பார்ப்பவர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, ஆனால் அது நிலைக்கவில்லை. தம்பிக்கு எந்த ஊரு இயக்குனர் பத்ரியின் மூன்றாவது படம், தமிழ் படம் படத்தில் கிண்டல் பண்ணியதை எல்லாம் ஒரெ படத்தில் வைத்து வந்த சுவடு தெரியாமல் போன படம். முன் தினம் பார்த்தேனே.. கொஞ்சம் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டிருந்த படம். கவுதம் மேனனின் உதவியாளர் இயக்கியிருந்தார். படம் முழுவதும் கவுதமின் தாக்கம். காமெடி ஆங்காங்கே கொஞ்சம் ஒர்க்கவுட் ஆனாலும் பேசக்கூட படவில்லை. இம்மாதத்திய சிறந்த படமென்றால் அய்ங்கரனால் வெளியிட முடியாமல் வெகு நாட்களுக்கு கழித்து வெளியான அங்காடித்தெருதான். ஐய்ங்கரனுக்கும் வசந்தபாலனுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தப் படம். 
ஹிட்: விண்ணைத்தாண்டி வருவாயா?, அங்காடித்தெரு
ஆவரேஜ்: ஏதுவுமில்லை
.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏப்ரல்
பை
யா, கின்னஸ் ரெக்கார்ட் படமான சிவப்பு மழை, ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைச்சுழி ஆகியவை வெளியான மாதம். தயாநிதி அழகிரியின் வெளியீடு, கார்த்தியின் மூன்றாவது படம், யுவனின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்று சகல அம்சங்களும் சேர்ந்து கொள்ள, சுமார் 25 கோடிக்கும் மேலே வசூலான படம். இன்னொரு கின்னஸ் சாதனை படம் தியேட்டரில் ஓடிய நாட்கள் கின்னஸ் சாதனையே. இயக்குனர் இமயமும், சிகரமும் இணைந்து நடித்த படம் வந்த சுவடே தெரியாத அளவிற்கு தோல்வி அடைந்தது.
Paiya-Stills-051 ஹிட்: பையா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மே
singam-1815 சன்
னின் அடாவடி மார்க்கெட்டிங்கில் விஜய் நடித்து வெளிவந்த சுறா, இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், கோரிப்பாளையம், கனகவேல் காக்க, கொலை கொலையாம் முந்திரிக்கா, மீண்டும் சன்னின் சிங்கம். என்று சம்மர் வெக்கேஷனை வைத்து நிறைய படங்கள் வெளியானது. சூப்பர் ஓப்பனிங்கில் ஆர்ம்பித்த சுறா பாதி கடலிலேயே மூழ்கிவிட்டது படு சோகமே. அறை என் 305ல் கட்வுளுக்கு பிறகு  சிம்பு தேவனின் அடுத்த ஸ்பூக் வகை படம். பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி இல்லை என்றே சொல்லப்படுகிறது.  மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இயக்குனர் இயக்கி வெளிவந்த கோரிப்பாளையம் இன்னொரு சுப்ரமணியபுரமாய் படு செண்டிமெண்டுடன் வந்து எந்த விதமான இம்பாக்டும் இல்லாமல் போய்விட்டது. கரண் மிகவும் எதிர்பார்த்த கனகவேல் காக்க, கொலை கொலையாம் முந்திரிக்கா படத்தை பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. இம்மாத வெற்றிப் படமே சன், சூரியா  காம்பினேஷனான சிங்கம் தான். மாதக் கடைசியி வந்தாலும் சும்மா பின்னி பெடலெடுத்தது.
ஹிட்: சிங்கம்
ஆவரேஜ்: இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜூன் 
kalava4குற்றப்பிரிவு, காதலாகி, ஓர் இரவு,கற்றது களவு, ராவணன், திட்டக்குடி, களவாணி, மிளகா ஆகிய சிறிய பெரிய படங்கள் வெளிவந்த மாதம். இதில் குற்ற்ப்பிரிவு, காதலாகி, போன்றவை லிஸ்டில் கூட சேர்க்க முடியவில்லை.  ஓர் இரவு ஒரு புதிய முயற்சியாய் இருந்தாலும் அதை பற்றி செய்தி வெளிவருவதற்குள் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டார்கள். மணிரத்னத்தின் ராவணன் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பெரிய அளவில் வெளியாகி எல்லா மொழிகளிலும் படு தோல்வி அடைந்த படம். திட்டக்குடி, மிளகா போன்ற படங்கள் பற்றியும் பெரிதாய் சொல்ல முடியவில்லை. ஆனால் அம்மாதத்திய கருப்பு ஆடு களவாணி. மிக குறைந்த தியேட்டர்களில் வெளியாகி மவுத் டாக்கில் சூடு பிடித்து நல்ல வசூல் செய்த சினன பட்ஜெட் படம்.}
ஹிட்: களவாணி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொடரும்…
நில்.. கவனி.. செல்லாதே.. திரை விமர்சனம் படிக்க.. கேபிள் சங்கர்

Dec 21, 2010

நில்.. கவனி.. செல்லாதே…

ngs-stills-1 வெண்ணிலாக் கபடிக்குழு படத்தயாரிப்பாளர் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு சின்ன பட்ஜெட் படம். இப்படி வாரம் ஐந்து படங்கள் புற்றீசல் போல வந்துக் கொண்டிருந்தால் படத்தில் அடுத்தடுத்து விழும் சாவு போல படங்களும் விழுந்து கொண்டேத்தானிருக்கும்.

சம காலத்தில் பெரிதாய் ஒரு ஹாரர் பேஸ்டு த்ரில்லர் படங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது த்ரில்லர் ஜெனரை  தொடுவது கூட இல்லை. அப்படியில்லாமல் இப்படம்.. ஓரளவுக்கு ஆரம்பத்திலிருந்து நல்ல ப்ளோவோடு போவது சந்தோஷமாய் இருந்தது.
ngs-stills-7 புதிதாய் ஏதுமில்லை வழக்கமான ஒரு ஆளில்லாத இடத்தில் நான்கு பேர் மாட்டிக் கொள்வது, ஒவ்வொருவராய் சாவது, ஏன்? எது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் கதை.  நண்பர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள். அதில் ஒருவர் காமெடியன், மற்றவர்கள் காதலர்கள். கதையில் இவர்களது காதலுக்கோ… அல்லது இவர்களுக்கோ வீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. வழக்கமான ஆரம்ப பூர்வாங்க காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாம் முடிந்து இண்டர்வெல்லின் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.
ngs-stills-8 அதற்கு அப்புறம் நடக்கும் விஷயங்கள் எல்லாம் வழக்கமாய் ஹாலிவுட் பி கிரேட் சி கிரேட் ஹாரர் படங்களில் பார்த்த அத்தனை விஷயங்களும் தொடர்ந்து வருகிறது. அதே தரத்துடன். எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு பக்கா காரணம் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை அவர்கள் சொல்லும் கதை பொசுக்கென ஆகிவிடுகிறது.
ngs-stills-9 டெக்னிக்கலாய் ஆரம்ப டாப் ஆங்கிள் ரோடு காட்சியிலிருந்து, எல்லா காட்சிகளுமே ஒளிப்பதிவாளர் லஷ்மண் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார். த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின் எதற்காக பாடல்கள். ஒரு வகையில் அவை இப்படத்தின் முதல் பாதியை ஓட்ட பயன்படுகிறது என்றாலும் செல்வ கணேஷின் பாடல்கள் பெரிதாய் சோபிக்கவில்லை. டூர் பாடல் ஒன்று தில் சாதாஹேவில் ஆரம்பித்து ஒரு பழைய் இளையராஜாவின் பாடலில் முடிகிறது. பின்னணியிசையும் ஓகே தான். நடிப்பு என்று பார்த்தால் பெரிதாய் யாரையும் சொல்ல முடியாது. நண்டு ஜெகன் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பெண்ணின் பின்புறம் லாரி ஹெட்லைட்டாய் உருவெடுக்கும் காட்சியை தவிர நகைக்க முடியவில்லை.
நில்…கவனி.. செல்லாதே- போவறதும் போவாததும் உங்க இஷ்டம்.
கேபிள் சங்கர்

Band Baaja Baarat

band ரொம்ப நாளாகிவிட்டது I hate Luv storyக்கு பிறகு ஒரு நல்ல ரொமாண்டிக் காமெடி வகை ஃபீல் குட் படம் பார்த்து. ஒரு ஸ்ட்ராங் மைண்டட் பெண்ணுக்கும், இலக்கில்லாமல் அலையும் பையனும் சேர்ந்து ஒரு ”பிஜி”னெஸ் ஆரம்பிக்கிறார்கள். அது என்ன தெரியுமா? வெட்டிங் ப்ளேனர் எனும் திருமண ஏற்பாட்டாளர்கள் தொழில்.

வெட்டிங் ப்ளானர் என்றதும் நிறைய பேர் உடனே இது அதே பெயரில் வெளிவந்த ஒரு ஆங்கிலப்படத்தின் உட்டாலக்கடி என்று கையை தூக்குவது தெரிகிறது. அலோ.. ப்ளீஸ்.. கொஞ்சம் கையை இறக்குங்கள். இது அதில்லை. ஆங்கில படத்தில் வெட்டிங் ப்ளானர் செய்யும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் காதல் வந்துவிடும். ஆனால் இங்கே வெட்டிங் ப்ளானர் தொழில் செய்யும் இரண்டு பேர் காதலில் விழுகிறார்கள். வேண்டுமானால் இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை கதை மாந்தர் செய்யும் தொழில் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
Band-baaja-baaraat-330x234
சரி கதைக்கு வருவோம் 20 வயது ஸ்ருதி ஒரு ஸ்ட்ராங் மைண்ட் கொண்டவள். ஒரு பெரிய வெட்டிங் ப்ளானர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவள். பிட்டு ஷர்மா ஒர் இலக்கில்லாத, இளைஞன். ஒரு கல்யாணத்தில் ஸ்ருதியை பார்த்துவிட்டு, அவளிடம் இம்பரஸ் ஆகி அவளை நூல் விடும் போது.. அவள் தன்னிடம் இந்த கடலை எல்லாம் வேண்டாம். எனக்கென ஒரு இலக்கு இருக்கிறது என்று முகத்திலடித்தார் போல் சொல்லிவிடுகிறாள். காலேஜ் முடிந்து கிராமத்துக்கு போவதை தவிர்க்க அவளுடன் சேர்ந்து பிஜினெஸ் ஆரம்பிக்க போவதாய் சொல்லி விட்டு அவளிடம் கெஞ்சி கூத்தாடி பார்ட்னராய் சேர்ந்து, ஷாதி முபாரக் என்ற வெட்டிங் ப்ளானர் கம்பெனியை ஆரம்பிக்கிறார்கள். அதன் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாய் காதல் வரை போய் ஒரு சின்ன பிரச்சனையில் பிரிகிறார்கள். அவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா என்பதுதான் கதை.
 band-baaja-baarat
இது வழக்கமான ரொம்-காம் வகையான படம் தான் என்றாலும். மிகவும் ப்ரெஷ்ஷான திரைக்கதையாலும், அனுஷ்கா ஷர்மா, ரன்வீர்சிங்கின் நடிப்பினாலும் நம்மை கட்டிப் போடுகிறார்கள். யாஷ் சோப்ராவின் கம்பெனியின் தொடர் தோல்விக்கு பிறகு இப்படம் ஒரு ஸ்வீட் ஆக்ஸிஜன் என்றே சொல்ல வேண்டும்.

பிஜினெஸ் ஆரம்பிப்பது என்று முடிவாவதற்கு முன்பு, ஒரு பெரிய வெட்டிங் ப்ளானரிடம் வேலை பார்க்க இரண்டு பேரும் போக, அங்கே அவளுக்கு ஏற்படும் பிரச்சனைக்காக பொங்கி எழுகிறான் ரன்வீர். அப்புறம் என்ன பிஸினெஸ் ஆரம்பித்தாகிவிட்டது. முதல் கஸ்டமரை எங்கே போய் தேடுவது? என்று அலையும் போது ஒரு சாதாரண நடுத்தர குடும்பஸ்தரிடமிருந்து ஆரம்பிகிறது அவர்களது முதல் பயணம். பெரிய வெட்டிங் ப்ளானரிடம் வேலை பார்த்த தான் செய்த தவறினால் பிரச்சனைக்குள்ளானவன் இவர்களுடன் சேர, கொஞ்சம் கொஞ்சமாய் டீம் செட்டாக ஆரம்பிக்கிறது. அதற்கு பிறகு எங்குமே திரும்பி பார்க்க முடியாத வளர்ச்சி.  என்ன தான் இருவரும் வேலை காரணமாய் ஒரே ஆபீஸில், கட்டிலில் படுத்திருந்தாலும் அவர்களுக்குள் ஏதுவும் இல்லை என்றுதான் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அனுஷ்கா இம்பரஸ் ஆக, ஆக ரன்வீரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெரிய ஆர்டர் முடித்து செக்கோடு வந்து பார்ட்டி கொண்டாட, பார்ட்டியின் முடிவில் இருவருக்கு உடலுறவு வரை சென்று விடுகிறது. தான் தான் தவறு செய்துவிட்டோம் என்று ரன்வீர் மருக, அவளோ.. தன் காதலை புரிந்து கொள்ளாதவனாய் இருக்கிறானே என்று அவனிடம் தன் காதலை சொல்லாமல் அலைகிறாள்.
 band-baaja-barat
இந்த காட்சியில் இருவருக்குமான நடிப்பில் யார் முந்தி என்று போட்டி போடுகிறார். அனுஷ்கா.. ஒரு ஸ்ட்ராங் மைண்டட் இளம் பெண்ணை கண் முன்னே நிறுத்துகிறார். புது முகம் ரன்வீரும் தன் பங்குக்கு மிக இயல்பான பாய் நெக்ஸ்ட் டோர் வகையான, ஒரு துறு,துறு, பையனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆங்காங்கே சிறப்பான வசனங்கள் படத்திற்கு பலம். புதிதாய் தொழில் ஆரம்பிக்க, சமையல்காரனை தேடும் போது குழுவில் உள்ளவர் ஒருவரை அறிமுகம் செய்கிறார். “அவரு புதுசாச்சே..?” என்று யோசிக்கும் ரன்வீரை பார்த்து..” நீ மட்டும் என்ன பழசா...?. புதுசு நீயே அவனை வச்சிக்கலைன்னா.. வேற யாரு வச்சிப்பாங்க.. உன்னை நம்பி அவங்க புதுசுன்னு யோசிக்காம கொடுக்கலை?”. என்பது போன்ற இயல்பான வசனங்கள்.

இயக்குனர் மணீஷ் சர்மா முதல் படத்திலேயே வெற்றியை பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு துணையாய்  ஹபீப் பைசலும் தன் பங்கிற்கு ஒரு இண்ட்ரஸ்டிங்கான திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். யாஷ் சோப்ராவுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு ஹிட்.
Band Baaja Baraat – A Feel Good Rom- Com
கேபிள் சங்கர்

Dec 20, 2010

கொத்து பரோட்டா-20/12/10

இந்த வார சந்தோஷம்
இந்த வாரம் பூராவும் பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப்படவும், விமர்சிக்கப்படவும் போகிற வாரமாய் அமைய இருக்கிறது. வருகிற சனிக்கிழமை நண்பர் பதிவர் சுரேகாவின் “நீங்கதான் சாவி” என்கிற நூலின் வெளியீடும், பரிசல் மற்றும் என்னுடய லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகங்களின் விமர்சனக் கூட்டம், நம் எல்லோருக்கும் தெரிந்த டிஸ்கவரி புக் பேலஸில் 25ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. அடுத்த நாள் 26 ஆன்று நண்பர் நர்சிம், மற்றும் நிலாரசிகன், அகநாழிகை வாசுவின் கவிதை தொகுப்புகள் மவுண்ட் ரோடில் உள்ள எல்.எல்.ஏ. பில்டிங்கில் வெளியாகிறது.  புத்தக விமர்சனக்கூட்டத்தில் ஏற்கனவே படித்த நண்பர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை பற்றி பேசினால் தன்யநாவேன். நம் பதிவுலக நண்பர்கள், வாசகர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு அவர்கள் சார்பாக அழைக்கிறேன். வருக.. வருக…
#######################################################
இந்த வார ப்ளாஷ் பேக்
இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்.. படம் வெளியான போது முகேஷுக்கும் ராஜ்கபூருக்கு பெரும் பாராட்டை பெற்றுத்தந்த பாடல். கேட்டால் நாமும் கரைந்து போய் அழ ஆரம்பித்துவிடுவோம்.  மேரா நாம் ஜோக்கர். பாடுவது ஜோக்கராக இருந்தாலும் உள்ளுக்குள் அழும் மனதை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குனர். யார்னு சொல்லுங்க பாப்போம்.
########################################################
விஜய் அரசியலுக்கு வருவார், தனிகட்சி ஆரம்பிக்க இருக்கிறார் என்பதெல்லாம் உட்டாலக்கடி என்றே தோன்றுகிறது. சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிக்க நினைத்து அவர் செய்யும் அத்துனை விதமான பார்முலாக்களையும் ஃபலோ செய்பவர் விஜய். இப்போது சரிந்திருக்கும் தன் மார்கெட்டை நிறுத்திக் கொள்ள, அரசியல் நாடகம் போடுகிறார். சந்திரசேகரை வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராய் இருப்பது போல ஒரு பில்டப் செய்து வருகிறார். தன்னை ஒழித்து கட்ட பார்க்கிறார்கள் என்று சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தி சிம்பதியை அள்ள பார்க்கிறார். பத்திரிக்கைகளும் ஒரு காலத்தில் ரஜினி பெயரை வைத்து ஓட்டி நீர்த்து போய்விட்டதால். வேறு ஒரு நடிகர் தேவையெனும் நேரத்தில் விஜய் அவர்களுக்கு அவலாய் இருப்பது ரொம்ப சந்தோஷமே.. விஜய் வெறும் அவல்தான்
###############################################
இந்த வார வீடியோ
டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் வெரி மச்.. இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.
#################################################
இந்த வார விளம்பரம்
######################################
நண்பர் கார்த்திகை பாண்டியன் வந்திருந்தார் அத்திரியுடன். இரண்டு பேரையும் ஒரு அருமையான பாருக்கு நானும் பதிவுலக பயில்வான் பெஸ்கியும் அழைத்துச் சென்றோம். க.பாண்டியன் இருந்த வடை ப்ளேட்டுகளை மட்டும் ஒரு கட்டு கட்டினார். ஏற்கனவே மதுரை மண்ணின் மாறாத அன்புக்கு சொந்தக்காரர். வெறும் சைட் டிஷ்சை மட்டும் சாப்பிடும் ஆளாய் இருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது. அப்புறம் ஒரு ரகசியம் மனுஷன் ரெண்டு போன் வச்சிருக்காரு.. அந்த நம்பரை கேட்டா தர மாட்டேங்குறாரு… சரி.. விடுங்க ஒரு கெட்ட பழக்கமில்லைன்னா.. இன்னொரு கெட்ட பழக்கம் இருக்கும் போல.. அத்திரி வீடு போய் சேர்ந்துவிட்டாரா என்று கேட்க போன் செய்த போது “அய்யோ.. அம்மா” என்று வலிக்காமல் போட்ட சத்தம் கேட்டது.. வாழ்க குடும்பஸ்த்ரீகள்.
####################################################
சமீபகாலமாய் எனக்கு மிகவும் பிடித்த ஜாயிண்ட் என்றால் அது சினி சிட்டி எனும் ஹோட்டல் தான். அதில் இருக்கும் கரோக்கே பாரில் கையில் ஒரு க்ளாஸ் ஓயினையோ, பீரையோ, ப்ரெஷ் ஜூசையோ, மாக்டெயிலையோ, சப்பிக் கொண்டு, நமக்கு பிடித்த பாடல்களை பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருப்பது குடிப்பதை விட ஒரு மடங்கு அதிகமான  போதையே.. ஆம நிஜமாகவே சொல்கிறேன் இசை ஒரு போதை அதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும். சினிமா தொடர்புள்ள, ஆசையுள்ள, இருந்து இல்லாமல் பொட்டி தட்டுபவர்கள் என்று பல பேர் அங்கு வருவார்கள். நிறைய பதிவர்கள், வாசகர்கள் என்று யாராவது ஒருவர் புதிதாய் அறிமுகமாகி என்னிடம் வந்து பேசாமல் இருக்கமாட்டார்கள் ஒவ்வொரு விசிட்டிலும். எனக்கும் அப்துவுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது. அவரது நூறுவருஷம் பாட்டிற்கும், நானும் அவரும் சேர்ந்து பாடும் வேட்டையாடு விளையாடு படப் பாடலுக்கும், என்னுடய பழைய ராஜா பாடல்களுக்கும். நேரமிருந்தால் சென்னையில் இருப்பவர்கள் ஒரு முறை வந்து உணரலாம் இசையெனும் போதையை.
#####################################################
ஸ்ரீலங்காவிலிருந்து ஜனா, லோஷன், கூல்பாய் கிருத்திகன்,மற்றும் பல பதிவர்கள் முந்தா நாள் மதியம் ஒன்றாய் கூடியிருந்த நேரத்தில் போன் செய்து பேசினார்கள். அவர்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பு மாற்றி, மாற்றி போனை வாங்கி பேசியதில் தெரிந்தது. இலங்கை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து பதிவர் சந்திப்புக்கு முன் நாள் கிரிக்கெட் போட்டி வைத்து விளையாடியிருக்கிறார்கள். பதிவர் சந்திப்பு இனிதே நடந்திருக்கும் என்று நம்புகிறேன். மதி.சுதாவை பற்றி கூட கேட்டேன். அவர் அங்கு வர இயலவில்லை என்று சொன்னார்கள். நன்றி நண்பர்களே...
###################################################################
இந்த வார கடுப்பு
இம்சைகளில் பல விதமான இம்சைகள் இருக்கிறது அது போன் இம்சை. நண்பர் ஒருவர் இது வரை நான் அவரை பார்த்ததில்லை. எப்படியோ ஒரு முறை என் நம்பர் கிடைத்து என்னிடம் பேச ஆரம்பித்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பேசிவிடுவார். எப்போது போன் செய்தாலும் போனவாரம் தான் சென்னைக்கு வந்தேன் அர்ஜெண்டா கிளம்பிட்டேன் என்பார். எடுத்தவுடன் தான் செய்யும் ஏதோ ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் பற்றி சொல்ல ஆரம்பிப்பார். நானும் ஒரு மரியாதைக்காக  கேட்டுவிட்டு ஆர்வமில்லை என்று சொல்லிவிடுவேன். இம்முறை நான் ஷூட்டிங் லேட் நைட் தான் வந்தேன். ஏழு மணிக்கு ஒரு போன். புதிய நம்பர். தூக்க கலக்கத்தில் எடுத்தேன். என் குரலின் தன்மை கேட்டு “என்ன தூங்கறீங்களா? என்று கேட்டார். தூக்கம் என்னை கெஞ்சியது. ‘ஆமாம் என்றேன். அவர் “சரி அதான் எழுப்பியாச்சே.. என்று எதோ ஒரு புதிய மார்க்கெட்டிங்கை கான்செப்டை பற்றி சொல்ல ஆர்ம்பித்துவிட்டார். Dont they have any basic ethics?
###################################################################
இந்த வார தத்துவம்
மற்றவர்கள் முன் நீ திறமையானவனாக இரு. உன் மனைவியிடம் மட்டும் முட்டாளாகவே இரு. வாழ்கையில் சிறக்க அதி புத்திசாலித்தனமான யுக்தி.

எதிர்காலம் என்பது நாம் நாளை பற்றி ப்ளான் செய்தது இல்லை. நான் இன்று செய்த செயல்களுக்கான பதில் தான் அது. எனவே இன்றே செய் அதை நன்றே செய்.
###################################################################
பெண்கள்
இன்னொசெண்ட் பசங்களை ஏமாற்று
அழகான பையன்களுடன் சந்தோஷமாய் இரு
நல்ல பையன்களுடன் நட்பாயிரு.
நம்பிக்கையான பையனுடன் காதலாயிரு.
கல்யாணம் மட்டும் நல்ல பணக்கார அங்கிளாய் பார்துக் கொள்.
##################################################################
ஜோக்
ஒரு ஆட்டோமொபைல் இன்ஞினியரின் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. உடனே அவன் மனைவி அவனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள். “உன் புதிய வண்டி வெளிவந்துவிட்டது” என்று.. அதற்கு அவன் பதிலுக்கு அனுப்பினான் “வித் கியரா.. வித் அவுட் கியரா?” என்று.

நானோ காரிலிருக்கும் இரண்டு பிரச்சனைகள் 1)ஒரு கர்பிணிப் பெண்ணை சுலபமாய் உள்ளிருக்க வைக்க முடியாது 2) ஒரு பெண்ணை கர்பிணியாக்கவும் முடியாது.
###################################################################
அடல்ட் கார்னர்
டெல்லியில் ஒரு நியூஸ் பேப்பரில் விளம்பரம் வந்திருந்தது. பெண்களில் முக்கிய இடங்களில் ஷேவ் செய்ய ஆட்கள் தேவை என்று. உடனே தில்காசிங் போன் போட்டார். எதிர்முனை உனக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்று கேட்டார்.
தில்கா: இல்லை
எதிர்முனை: இல்லை இந்த கல்யாணம் ஆன ஆளுங்களோட பொண்டாட்டிக்கு இந்த வேலை பிடிக்கலை, சரி.. உன் கிட்ட பாஸ்போர்ட் இருக்கா? என்றதும் தில்கா சந்தோஷமாய்.
தில்கா: ம்.. இப்பத்தான் வாங்கி வச்சேன்
எ.முனை: இல்லை.. வெளிநாட்டு மாடல்கள் எல்லாம் ஊர் ஊரா சுத்துரவங்க… அதனால அவங்க கூடவே போகணும், ஷேவ் பண்ணனும் அதான். அப்புறம் உலகத்தில சூப்பர் சூப்பரான அழகான பொண்ணுங்களுக்கு ஷேவ் பண்ணனும். நீ டென்ஷன் ஆக மாட்டியே ஏன்னா தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்கு தெரியுமில்ல. ஆனா அவ இஷ்டபட்டா அவங்களோட ஈவினிங் டின்னர் பார்ட்டின்னு கம்பெனி கொடுக்கணும் ஓகேயா..?
தில்கா: சந்தோஷத்துடன்.. சார் நான் அப்படியெல்லாம் இல்ல சார்.. நான் சரியா தொழில் செய்வேன்
சார்
எ.முனை:அப்ப நீ அவங்களுக்கு அந்த இடத்தில ஷேவ் பண்ணும் போது டெம்ப்ட் ஆக மாட்டே அப்படித்தானே.
தில்கா: அட நான் ரொம்ப நேர்மையான தொழிலாளிசார்.. என்று உறுதியளிக்க
எ.முனை: சரி அப்படின்னா உனக்கு நாளைக்கு கன்யாகுமரிக்கு டிக்கெட் போட்டு தர்றேன் நீ கிளம்பிடு. என்றதும் தில்கா சிங் சந்தோஷமாகி
தில்கா: அப்ப நாளைக்கு அங்கதான் நான் ஜாயின் பண்ணணுமா? என்று ஆர்வத்துடன் கேட்க,
எ.முனை; அங்க தான் இண்டர்வியூக்கான க்யூ லைன்ல உன் நம்பர் வருது என்றார்
###################################################################
கேபிள் சங்கர்

Dec 18, 2010

ஈசன்

eesan-movie-stillsதமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம் சசிகுமாரை. தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட படங்களின் வெற்றி அவருக்கு தந்த மகுடம் அது. அவர் இயக்கும்  இரண்டாவது படம் என்கிற போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது  ஒன்றும் ஆச்சர்யமில்லை.. அது தியேட்டர்களில் கூடியிருந்த கூட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம். இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, சசிகுமாரோ நடிக்காத படம்.

eesan-movie-stills-1
கிராமம் சார்ந்த படங்களிலிருந்து  விலகி நகரம் சார்ந்த கதைக்களனை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியே சென்னையின்  டிஸ்கோ பப்பிலிருந்து கிளம்பும் ஒரு பெண்ணை துரத்தி அவள் இறந்து போவதில் ஆரம்பிக்கிறது. முழுக்க, முழுக்க, ஹைஃபை பப் கலாச்சாரம் பழகும் இளைஞர்களை  சுற்றி நடக்கும் கதையாய் ஆரம்பித்து, அரசியல்வாதி, நேர்மையான ஆனால் எதுவும் செய்ய முடியாமல் கையாலாகமல் இருக்கும் போலீஸ், அரசியல்வாதியின் மகன், அரசியல் வாதியின் ஆதிக்க ஆக்ரமிப்புகள், அதற்கான கொலைகள், அரசு அதிகாரியின் அதிகாரம். அரசியல் வாதிகளை உருவாக்கும் பணம் கொழுத்த தொழிலதிபர். அவரின் மகள். அவளுக்கும் அரசியல் வாதி மகனுக்குமான காதல். காதலை அறுக்க தொழிலதிபர் செய்யும் சூழ்ச்சி, அதற்கு அரசியல் வாதி நடத்தும் சைக்கலாஜிக்கல் கேம். காதல் ஓகே என்று எல்லாம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, அரசியல்வாதி மகன் தனியாக கடத்தப்பட்டு ஒரு பெரிய கியர் ஹாண்டிலால் தாக்கப் படுகிறான். யார்ரா நீ என்று கேட்கும் போது ஈசன் என்கிறான். அப்புறம் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க.

டைட்டில் காட்சியில் நம்மை நிமிர உட்கார வைத்தவர்கள்.. அதற்கு பிறகு எழுப்ப முயலவேயில்லை என்பது சோகமே..  மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் சரியான நேரேஷனில் சொல்லியிருந்தால் சும்மா பின்னி பெடலெடுத்திருக்கும். நிச்சயமாய் தமிழ் சினிமாவில் ஒரு கார்பரேட், மற்றும் அரசியல் பொறுக்கித்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட படமாய் அமைந்திருக்கும். ஆனால் அதற்கு பிறகு வரும் காட்சிகள் எல்லாம் வழக்கமான பழி வாங்கும் கதையாய் போய்விட, அட இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சசிகுமார் ரசிகனே என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். எதையோ சுவாரஸ்யமாய் சொல்ல போகிறார்கள் என்று முதல் பாதியை பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. பெரிய ஏமாற்றம்தான்.
eesan-movie-stills-6 ஜேம்ஸ் வசந்தனின் பாடல்களில் நா.முத்துக்குமாரின் வரிகளில் வரும் இந்த இரவுதான் போதுமே போதுமேவும், அந்த தஞ்சை செல்வியின் குத்து பாடலையும் தவிர பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. பின்னணியிசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும் தலைவரே.. ஆனால் டிஸ்கோ பப்புகளில் தமிழ் பாடல் ஒலிபரப்புவது பெரிய ஆச்சர்யம். எனக்கு தெரிந்து வெகு சில இடங்களில் அதுவும் யுவன், ஏ.ஆர். ஆரின் பாடல்கள் மட்டும் விதிவிலக்கு. இதில் ஒரு பப்பில் பின்னணியில் வரும் ராஜாவின் ‘நேத்து ஒருத்தரை ஒருத்தர பாத்தோம்” ரீமிக்ஸ் அட்டகாசம்.

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு, இயக்குனர் நமக்கு சொல்ல நினைத்த உணர்வுகளை முடிந்த வரை நம்மிடம் கடத்த முயற்சி செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அந்த ஓப்பனிங் ஒயின் க்ளாஸில் ஒயின் ஊற்றப்படும் காட்சியும். ஒரு ஏரியல் வைட்டில் போரூர் இடத்தை காட்டும் டாப் ஆங்கிள் ஷாட் என்று பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்.

eesan-movie-stills-11
நிஜமாகவே ஒரு ஹானஸ்ட் மற்றும் கையாலாகத அஸிஸ்டெண்ட் கமிஷனரை சரியாக பிரதிபலித்திருக்கிறார் சமுத்திரகனி. அமைச்சர் தெய்வநாயகமாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். உணர்வுகளை வெளிக்காட்டாமல் குளிர் கண்ணாடிக்குள் யோசிக்கும் அரசியல்வாதி கேரக்டரில் பொருந்துகிறார்.  சரியான இடங்களில் அவர் முகத்தில் உணர்வுகளை நடிப்பாக கொண்டுவர முடியாமல் திணறுகிற பல இடங்களில் கூலிங் கிளாஸ் நன்றாக நடித்திருக்கிறது. அவருடய அல்லக்கையாக வரும் துபாய் ராஜா கலக்குகிறார். முதலமைச்சருக்கு க்ளோசான கலெக்டர், அந்த பிம்ப் நாகராஜ், ரெய்டின் போது நிர்வாண பெண்ணை கடமையாய் வீடியோ எடுக்கும் கான்ஸ்டபிள், என்று நிறைய டீடெயிலிங்கே படத்தின் வேகத்தையும் குறைக்கிறது.

தயாரிப்பாளர் காஜாமைதீன் கமிஷனராக வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸி அபிநயாவின் அப்பாவாக வருகிறார். அவர் வரும் கிராமத்து எபிஸோடில் தேவையிலலாத சுப்ரமணியபுர திருவிழா காட்சிகள் இடிக்கிறது. என்னதான் சாமியாடி ஒரு ஆட்டின் ரத்தத்தை சொட்டு விடாமல் குடிப்பவர் என்றெல்லாம் காட்டி பில்டப் செய்தது எதற்கு?. பின்னால் அவர் எடுக்கும் முடிவுக்குமான காண்ட்ரடிக்ஸனை காட்ட உபயோகப்படுத்த என்றால் சாரி.. அது ஏறவில்லை. அதற்கு பதிலாய் அக்காவை கிண்டல் செய்த மூன்று பேரை அடிக்கும் பையன் மேட்டர் ஓகே.

eesan-movie-stills-12
எழுதி இயக்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் செய்த சசியா? என்று ஒரு ஆச்சர்ய கேள்வி எழத்தான் செய்கிறது. அவ்வளவு திருத்தமான திரைக்கதையும், இயக்கமும் இருக்கும் அப்படத்தில். ஒரு கதை என்றால் அதில் மூன்று நான்கு கோணங்களில் கதை சொன்னாலும் யார் மீதாவது ட்ராவல் ஆக வேண்டும். ஆனால் இப்படத்தில் மிகப் பெரிய குறையே.. அதுதான்.. அராஜக அமைச்சர் மீதும் ஓடவில்லை, இன்னொரு பக்கம் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சங்கையாவின் மீதும் ஓடவில்லை, இப்படி யார் மீதும் ட்ராவல் ஆகாத திரைக்கதையை என்ன காரணத்துக்காக முதல் பாதி முழுவதும் காட்ட வேண்டும். இவர்களை பழிவாங்க வரும் கேரக்டருக்கு ஒரே காட்சியில் சொல்ல முடிந்தவர் தானே நீங்கள்? இவர்களின் கேரக்டர்கள் பற்றி, சுற்றி கதை சொல்லி யார் அமைச்சர் பையனை கடத்தியிருப்பார்கள் என்று ஒரு கேள்வியை போட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தினால் திடுக்கிடும் திருப்பமாய் இருக்கும் என்று நினைத்தீர்களோ..? சாரி.. இது தானா உங்கள் திடுக் சசி?. முதல் பாதியிலிருந்து தனியாய் துண்டாய் நிற்கிறது இரண்டாம் பாதி.  எப்போது ஒரு அழகான அக்கா, அதிலும் வாய் பேச முடியாத ஊமை என்று காட்டி விட்டீர்களோ.. அப்பவே கதை என்ன என்ன தெரிந்து விடுகிறது.

இவ்வளவு கூட்டமில்லாத, கொஞ்சம் கூட உற்சாகமேயிலலாத பார்களை பப்புகளை எங்கே பாத்திருக்கிறீர்கள் சார்..? எனக்கு தெரிந்து சமீப காலத்தில் ஒரு ரியல் பப் டிஸ்கோ பார்த்தது ஆயுத எழுத்து யாக்கைத்திரியில் மட்டுமே..  இப்படி டிஸ்கோக்களில் சுற்றும் இளைஞர்களை கொஞமேனும் கவனித்திருந்தால் நிச்சயம் அவர்களின்  பாடி லேங்குவேஜுகளை உங்களால் கவனித்திருக்க முடியும். சுண்டக் கஞ்சி காட்சியில் நடிக்கும் நடிகர்களின் உடல் மொழியையும், சாமியாடும் கிராமத்து காட்சிகளில் தெரியும் இயல்புத்தன்மை உள்ளுக்குள் இன்னமும் மதுரைக்காரனாகவே இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. சென்னையின் ஹைஃபை கலாசாரத்தில் மூழ்கியிருக்கும் இடங்கள் இவ்வளவு உற்சாகமிழந்தா காணப்படுகிறது. அரசியல் வாதியின் பலத்தை காட்டும் குற்றச் செயல்  காட்சிகள் கூட மிகவும் மெதுவாகத்தான் செல்கிறது. பையனை காணவில்லை என்றதும் முதல் நாள் கவலைப்படாமல் இருப்பது ஓகே. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் கூட கொஞ்சம் கூட பதட்டமேயில்லாத அப்பாவை.. அதுவும் எல்லா சொத்துக்கும் ஒரே வாரிசான பையனை தொலைத்த அப்பாவை இப்படத்தில்தான் பார்க்கிறேன்.
eesan-movie-stills-2 பாராட்ட வேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் நேர்மையான போலீஸுக்கு இருக்கும் இயலாமை. அரசியல் வாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் அரசு அதிகாரம். அதே அரசு அதிகாரம் செய்யும் துஷ்பிரயோகம், தொழிலதிபர்களின் கமிஷன். அவர்களுக்காக செய்யும் அரசியல். ஆங்காங்கே நச்சென வரும் வசனங்கள் “ அய்யா.. நாம வேணுமின்னா பணம் சம்பாரிச்சு தொழிலதிபர் ஆயிரலாம். ஆனா அவனுங்க எவ்வளவுதான் சம்பாரிச்சாலும் அரசியல்வாதி ஆக முடியாது.” போலீஸ் விசாரணையின் நுணுக்கங்கள் என்று  ஆங்காங்கே தெரியும் ஒரு சில நல்ல விஷயங்களோடு நல்ல திரைக்கதையும் இருந்திருந்தால் நிச்சயம் மீண்டும் ஒரு ஹிட் படம் கிடைத்திருக்கும்.
ஈசன் – சிவன்.. சொத்து..
கேபிள் சங்கர்