Posts

Showing posts with the label priyamani திரை விமர்சனம்

Just Go With It- கல்யாணம் பண்ணி காதல்

Image
ப்ளாஸ்டிக் சர்ஜனான டானிக்கு ஒரு கெட்ட பழக்கம். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதனால் மிகப் ப்ரச்சனையில் இருப்பதாக சொல்லி, சென்சிட்டிவாக உள்ள பெண்களை வளைத்து ஜாலி பண்ணும் பேர்வழி. உடன் வேலை செய்யும் காத்தரீனுடன் அப்படி ப்ளிரிட் செய்து கொண்டிருக்கிறான். காத்தரீன் ஒரு சிங்கிள் மாம். இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஒரு பார்ட்டியில் பால்மர் எனும் ஒரு பாம்ஷெல்லை பார்த்து டானி மயங்கிவிட, அவளிடம் தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், அவளுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகப் போகிறதென்றும், சொல்லி சிம்பதி தேடிக் கொள்ள, இருவரும் உடலுறவு வரை போய்விடுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது பால்மர் அவனுடய மனைவியை பார்க்க விரும்ப, வேறு வழியில்லாமல் காத்தரீனை நடிக்கச் சொல்கிறான். அவளுடய குழந்தைகளை தன் குழந்தைகள் என்று பொய் சொல்லிவிட, அவர்களை சமாளிப்பதற்காக ஹவாயன் டிரிப் ஒன்றை லஞ்சமாய் கூட்டிக் கொண்டு போக, அங்கு இருக்கும் நாட்களில் காத்தரினுகும், பால்மருக்கும், டானிக்குமிடையே நடக்கும் காதல் போராட்டம் தான் படம்.

Sakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..

Image
சக்தி..பிருந்தாவனம் படத்திற்கு பிறகு என்.டி.ஆரின் மிகப் பெரிய பட்ஜெட் படம். அதாவது தெலுங்கு மஹதீராதான் இது நாள் வரை தெலுங்கு படங்களிலேயே அதிக பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சக்தியின் பட்ஜெட் மஹதீராவை விட அதிகமில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த கோடை கால சீசனுக்கு வந்திருக்கிற முதல்  பெரிய பட்ஜெட் படம். படம் ஏற்படுத்திய ஹைப்பை தக்கவைத்துக் கொண்டதா என்று பார்த்தால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். 

Dongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்களும், ராம்கோபால் வர்மாவும்

Image
ராம் கோபால் வர்மா. இந்த பெயர் இந்திய சினிமாவில் பல பேருக்கு உற்சாகத்தை கொடுக்கும் பெயர். பல புதிய, கல்ட்டான விஷயங்களை மிகச் ஈஸியாக உடைத்தெறிந்தவர். அதே சமயம் அதற்காக படு பயங்கரமாய் விமர்சிக்கப்பட்டவரும் கூட. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டது கிடையாது. தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பது ஒன்றுதான் அவருடய முயற்சி. அப்படிப்பட்ட முயற்சியில் இந்தப்படமும் ஒன்று. இதில் அவர் நினைத்ததில் பாதி வெற்றி மீதி தோல்வி என்று தான் சொல்ல வேண்டும்.

Ragada

Image
நாகார்ஜுன், அனுஷ்கா, ப்ரியாமணி என்று நட்சத்திர பட்டாளம், அதிரடியான ஓப்பனிங், குத்து பாடல்கள், ஸ்கின் ஷோக்கள் என்று ஒரு பரபர மசாலாவை இயக்குனர் வீரு போட்லா கொடுத்திருக்கிறார். அது சுவையாக இருந்ததா இலலையா என்று சொல்ல வேண்டுமென்றால் அங்கு தான் பிரச்சனை. நாகார்ஜுன் கடப்பாவிலிருந்து வந்து ஒரு ரவுடி கேங்கில் ஜாயின் செய்கிறான். அவர்களுடன் சேர்ந்து அந்த ரவுடியின் எதிரிகளை தன்னுடய புத்திசாலித்தனமான ஆட்டத்தால் காய் நகர்த்துகிறான் (அப்படித்தான் இயக்குனர் ஃபீல் செய்திருக்கிறார்). அப்போது அங்கே கிட்டத்தட்ட பெண் டானாக இருக்கும் அனுஷ்காவின் காதலில் விழுகிறார். அப்போது திடீரென ப்ரியாமணி அவருடன் வந்து சேருகிறார். நாகார்ஜுனின் காதல் பார்வை அவர் மேல் விழ, ஒரு சுபயோக சுபதினத்தில் ப்ரியாமணி நாகார்ஜுனை வைத்து ஒரு பெரிய அமெளண்டை ஆட்டையை போட்டு விட்டு எஸ்ஸாகிவிட,  அந்த பணம் ஊர் பெரிய தாதாவான பெத்தண்ணாவுடயது. ஏற்கனவே அப்பணத்தை டபுள் கிராஸ் செய்து கொள்ளையடித்த பணத்தைதான் கைப்பற்ற கடத்தியவனை பிடித்து வைத்திருக்க, ப்ரியாமணியின் தில்லாலங்கடியால் அவனை தப்பிக்க வைத்துவிட்டு,  துமபை விட்டு வாலை பிடிக்...