நாகார்ஜுன், அனுஷ்கா, ப்ரியாமணி என்று நட்சத்திர பட்டாளம், அதிரடியான ஓப்பனிங், குத்து பாடல்கள், ஸ்கின் ஷோக்கள் என்று ஒரு பரபர மசாலாவை இயக்குனர் வீரு போட்லா கொடுத்திருக்கிறார். அது சுவையாக இருந்ததா இலலையா என்று சொல்ல வேண்டுமென்றால் அங்கு தான் பிரச்சனை.
நாகார்ஜுன் கடப்பாவிலிருந்து வந்து ஒரு ரவுடி கேங்கில் ஜாயின் செய்கிறான். அவர்களுடன் சேர்ந்து அந்த ரவுடியின் எதிரிகளை தன்னுடய புத்திசாலித்தனமான ஆட்டத்தால் காய் நகர்த்துகிறான் (அப்படித்தான் இயக்குனர் ஃபீல் செய்திருக்கிறார்). அப்போது அங்கே கிட்டத்தட்ட பெண் டானாக இருக்கும் அனுஷ்காவின் காதலில் விழுகிறார். அப்போது திடீரென ப்ரியாமணி அவருடன் வந்து சேருகிறார். நாகார்ஜுனின் காதல் பார்வை அவர் மேல் விழ, ஒரு சுபயோக சுபதினத்தில் ப்ரியாமணி நாகார்ஜுனை வைத்து ஒரு பெரிய அமெளண்டை ஆட்டையை போட்டு விட்டு எஸ்ஸாகிவிட, அந்த பணம் ஊர் பெரிய தாதாவான பெத்தண்ணாவுடயது. ஏற்கனவே அப்பணத்தை டபுள் கிராஸ் செய்து கொள்ளையடித்த பணத்தைதான் கைப்பற்ற கடத்தியவனை பிடித்து வைத்திருக்க, ப்ரியாமணியின் தில்லாலங்கடியால் அவனை தப்பிக்க வைத்துவிட்டு, துமபை விட்டு வாலை பிடிக்க அனுஷ்காவுடன் ஹாங்காங் எல்லாம் போய் கண்டுபிடிக்கிறார்கள். பணம் கிடைத்ததா? நாகார்ஜுன் ஏன் பணம் பணம் என்று அலைகிறார்? பெத்தண்ணா என்ன செய்தான்? நாகார்ஜுன் வேலை செய்த தாதாவின் காதலியாய் நடித்து வந்த அனுஷ்காவை காதலித்து தூக்கி வந்த நாகார்ஜுனை அவன் என்ன செய்தான்? அனுஷ்காவிற்கும், ப்ரியாமணிக்குமான தொடர்பு என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்.
நாகார்ஜுனுக்கு 50 வயசாம். கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. அவரின் மகன் நாக சைதன்யாவை விட இளமையாய் இருக்கிறார். அவ்வளவு க்யூட்டாக ரொமாண்டிக்காக இருக்கிறார். அதற்காக காட்சிக்கு காட்சி.. நீ அழகு, நீ அழகு என்று ஆளாளுக்கு சொல்லும் போது எரிச்சலாய்தான் இருக்கிறது. பக்கா மசாலா எண்டர்டெயினர் என்பதால் நடிப்பை பற்றி பெரிதாய் கவலைபடவில்லை நாகார்ஜுன். அவரது ஸ்டைலிஷான ப்ர்பாமென்ஸ் படத்தின் பெரிய பலம். அந்த ஓப்பனிங் சண்டைக்காட்சியும் அதில் ஸ்டைலாக நடந்துக் கொண்டே சண்டையிடும் காட்சி ஒன்றே போதும் அவர் ரசிகர்களுக்கு. கிட்டத்தட்ட மகேஷ்பாபுவின் போக்கிரிக்கு இணையான கேரக்டர். அதே போல செய்திருக்கிறார். அனுஷ்காவுடனான ரொமான்ஸ் இண்ட்ரஸ்டிங்..
அனுஷ்கா ஸ்டைலிஷான பெண் டான் கேரக்டரில் வருகிறார். ஸ்டைலாக இருக்கிறார். முடிந்த வரை பாடல்களில் உரித்தெடுத்திருக்கிறார்கள். மனதினுள் வஞ்சம் வைத்து காத்திருக்கும் கேரக்டரில் சரியாக சூட் ஆகிறார். சும்மா மொழு மொழுவென இருக்கிறார். ம்ஹும். அனுஷ்க்க்க்க்க்க்காஆஆஆஆஆ… ப்ரியாமணிக்கு ஒரு லோக்கல் லூசுப் பெண்ணாய் வந்து வில்லியாய் மாறி பின்பு ஒரு ஸ்மார்ட் பெண்ணாய் மாறும் கேரக்டர் ஓகே.. காட்ட வேண்டிய இடத்தில் காட்டி நிலை பெற்று விடுகிறார். அனுஷ்காவும், இவரும் நாகார்ஜுனுடன் ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கின்றார்கள்.
கோட்டா சீனிவாசராவ், ஒரு விதயாசமான கேன்சரால் பாதிக்கப்பட்ட தாதாவாக வருகிறார். பிரம்மானந்தம் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுவதோடு சரி. ப்ளாஷ் பேக்கில் நாகார்ஜுன் தங்கையாக வரும் ஃபிகர் நச்சென இருக்கிறார். வில்லன் பெத்தண்ணாவைவிட அவருக்கு டப்பிங் கொடுத்தவர் நன்றாக நடித்துள்ளார். நாகார்ஜுன் அம்மாவாக வரும் வெண்ணிறாடை நிர்மலாவை மிரட்டாமலேயே கொன்று விடலாம் போலிருக்கிறார்.
சர்வேஷின் ஒளிப்பதிவு ஓகே. தமனின் பாடல்களில் பெரிதாய் ஏதும் இம்ப்ரஸ் செய்யவில்லை. பிந்தாஸ் இயக்குனருக்கு ரேஸின் பாதிப்பு நிறைய இருக்கிறது. கதையை கேட்கும் போது சும்மா காட்சிக்கு காட்சி பரபரவென ட்விஸ்டும் டர்னுமாய் போகும் போலிருக்கிறதே என்று தோன்றும் ஆனால் அவ்வளவு ட்விஸ்ட் டர்னே படத்தின் சுவாரஸ்யத்துக்கும் தடையாய் அதிலும் அந்த எம்.ஜி.ஆர். சே.. சாரி என்.டி.ஆர். காலத்து ப்ளாஷ் பேக்கும், க்ளைமாக்ஸும். முடியலையடா சாமி..
Ragada – Masala potpori
அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Comments
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்
நிசமாத் தாங்க... பொறுங்க சந்ப்பம் கிடைத்தால்படத்தையும் ஒருவாட்டி பார்ப்போம்...
ச்சே...ragada மிஸ் ஆயிடுச்சே....:((
http://scrazyidiot.blogspot.com/
இதுனாலதான் நீங்க பதிவுலக யூத்தோ?
விமர்சனம் ஓ.கே,இங்க கிடைச்சா பார்த்துடுவோம்.இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் உரித்தாகட்டும்.
தலைவா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com