Thottal Thodarum

Dec 3, 2010

தா

Tha_Movie_Stills_018
மீண்டும் ஒரு சிறிய பட்ஜெட் படம். மூச்சு முட்டக்கூடிய அளவுக்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இடுக்குகளில் கிடைக்கும் புதிய வெளிச்சமும், காற்றைப் போல இறுக்கத்தை குறைக்க சில படங்கள் வரத்தான் செய்கிறது.

tha_movie_photos_21
கல்யாணக் கோலத்தில் இருக்கும் சின்னக் கண்ணா என்கிற சூர்யா தன் திருமணத்தை பற்றி பேசுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. சின்னக்கண்ணன் என்கிற சூர்யா.. தன் உருவத்தை பற்றியோ, அழகை பற்றியோ… கவலையில்லாமல், ஒரு இரும்பு கம்பெனியில் வேலை செய்துவிட்டு, நற்பணி மன்றம், நண்பர்கள், தண்ணி, பீடி என்றலையும் சாதாரணன். பெண்கள் விஷயத்தில் துளியும் ஆர்வமில்லாதவன். நிமிர்ந்தே பார்க்காதவன். முரடன். நண்பனின் தங்கை காதலிக்கும் ஆளை நண்பன் சொன்னதால் அடித்துவிட, வெகுண்டெழுந்த தங்கை, முரடனான உனக்கு பெண்களின் மனசை பற்றி என்ன தெரியும் என்று சொல்லி திட்ட, அது முதல் பெண்களை பற்றிய பார்வை மாறி, தானும் காதலிக்க ஆரம்பிக்க முயற்சி செய்யும் வேலையை ஆரம்பிக்கிறான். இவனின் ஆர்வம் தெரிந்து அவனுக்கு வீட்டில் ஒரு காலேஜ் படிக்கும் பெண்ணை பார்த்து முடிவு செய்ய, அவளின் அழகை பார்த்து பிரம்மித்து போகிறான் சூர்யா.. பார்த்த மாத்திரத்தில் அவள் மேல் காதல் கொள்கிறான். ஆனால் அவளுக்கோ.. இவனை பிடிக்கவில்லை. திருமணம் நடந்த்தா? இல்லையா? எனபதை உருக்கமாய் சொல்லியிருக்கிறார்கள்.

tha_movie_photos_28
முதலில் மதுரை ஸ்லாங்கில் படமெடுத்து வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை இல்லாமல் கோவை பாஷை காதுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. முக்கியமாய் நாயகனின் தாய்.. ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் நர்வஸாக இருந்தாலும் பின்னால் வரும் காட்சிகளில் நடந்து கொண்டே பேசி க்ளாப்ஸ் வாங்குகிறார். சின்ன கண்ணனின் நண்பர்களாய் வரும், வட்டிக்கு விடுபவன், படிக்காமல் சரக்கடிப்பதற்காகவே அலைபவன், வீடியோ, போட்டோ ஸ்டூடியோ நடத்திக் கொண்டே வரும் பிகர்களை கரெக்ட் செய்யும் அன்பு, அவனின் மச்சான், சிகப்பு ரோஜாக்கள் காலத்தில் இளைஞனாக இருந்து இப்போதும் பதினாறு வயது பெண்ணைத்தான் லவ் பண்ணித்தான் கல்யாணம் செய்வேன் என்றலையும் ஒருவன் என்று இயல்பான கிராமமும் நகரமுமில்லாத ஊர்களில் காணப்படும் கேரக்டர்கள். ஓரிரண்டு காட்சிகளில் கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் இம்பரசிவ்.
Tha_Movie_Stills_020 முக்யமாய் அவர்கள் நண்பர்களில் ஒருவர் பஸ்ஸ்டாண்டில் வரும் பெண்ணை காதலிக்க, காதல் ஓக்கே ஆக அந்த பெண் அட்வைஸ் செய்யும் காட்சிகளும், அதற்கு பிறகு நடக்கும் காட்சிகளும் குபீர் சிரிப்பு. நிச்சயம் இந்த வருடத்தின் சிறந்த  நகைச்சுவை. அந்த பெண்ணின் டயலாக் டெலிவரியும், இவரது ரியாக்‌ஷன்களும் அய்ய்யயோ.. அதகளம்.

படத்தில் நடித்திருக்கும் எலலா நடிகர்களும் புதுமுகங்களாய் இருந்தாலும் கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு பளிச், பளிச். முக்கியமாய் அந்த பிகர் மடிக்கும் அன்பு, தண்டல் கொடுக்கும் நண்பன், அந்த காமெடி நண்பன், பஸ்ஸ்டாண்ட் பெண், என்று எல்லா கேரக்டர்களும் மின்னுகிறார்கள்.

கதாநாயகன் ஸ்ரீஹரிக்கு அறிமுகம் என்று தெரியாத அளவிற்கு நடிப்பு வருகிறது. ஆரம்பக்காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் நிறைவாய் செய்திருக்கிறார். கதாநாயகி நிஷாவின் முகம் கொஞ்சம் முத்தலாய் கோவைப் பெண் போலில்லாம அந்நியப்பட்டு இருந்தாலும் ஸ்ரீஹரிக்கும் அவருக்குமான காதல் காட்சிகளில் மிக இயல்பாய் பழக்கமாகிவிடுகிறார்.

ஸ்ரீவிஐய்யின் இசையில் பின்னனியிசையை விட பாடல்கள் அருமை. அதிலும் சின்ன கண்ணனுக்கு காதல் பற்றி ஒரு உணர்வு வரும் போது வரும் பாடலும், தன் வருங்கால மனைவியை கொச்சியிலிருந்து அழைத்து வரும் போது வரும் பாடலும் நிச்சயம் ஹிட் லிஸ்ட். பின்னணியிசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Tha_Movie_Stills_022 எழுதி இயக்கியவர் புதியவர் சூரியபிரபாகர். முதலில் படத்தின் களத்தை மதுரையிலிருந்து கோவைக்கு மாற்றியதற்கு வந்தனம். வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க.. என்று கேட்டுக் கேட்டு அலுத்து போய்விட்டிருந்த நேரத்தில் கோவை ஸ்லாங்.. இனிமை.  ஆரம்ப் காட்சியில் கொஞ்சம் கிராமம், அராத்து ரவுடிப்பையன், தண்ணி, குத்து பாட்டு, பைட் என்று க்ளிஷேவாக சென்றாலும், இடைவேளை வரும் போது கதாநாயகியை அறிமுகப்படுத்தி நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் காதல் வருவது என்பது ஒரு புதிய முயற்சிதான் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஸ்ரீஹரி மறந்து போய் தன் பாக்கெட்டில் காண்டம் பாக்கெட் வைத்துவிட, திடீரென எழுந்து பார்த்து தேடும் ஸ்ரீஹரி, அம்மாவிடம் சட்டைய ஏன் தோய்ச்சே? என்று கேட்க, என்னைக்கு நான் தானேடா தோய்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சியில் பையனுக்கு பெண் பார்க்க போகும் காட்சியில் என்ன திடீர்னு என்று கேட்கும் அப்பாவிடம், “என்ற பையனுக்கு எப்ப எதை செய்யோணுமின்னு எனக்கு தெரியும்” என்று சொல்லுமிடம் அருமை. அந்த காண்டம் மேட்டரை பார்த்துவிட்டு தான் இந்த ஏற்பாடு என்பதை மிக இயல்பாய் ஆனால் நச்சென சொல்லியிருக்கிறார். பின்பகுதியில் வரும் காட்சிகள் எல்லாமே நண்பர்களுக்குள் நடக்கும் பிரச்சனையாகட்டும், மற்ற காதல் காட்சிகளாகட்டும் சுவையாக சொல்லியிருக்கிறார். எதிர்பார்ககாத க்ளைமாக்ஸுடன். தலைவா.. எனக்கொரு கேள்வி தாங்கிற பேருக்கு என்ன அர்த்தம்?
தா- மீண்டும் ஒரு குட்டி பொக்கே
கேபிள் சங்கர்
Post a Comment

47 comments:

Unknown said...

//வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க.. என்று கேட்டுக் கேட்டு அலுத்து போய்விட்டிருந்த நேரத்தில் கோவை ஸ்லாங்.. இனிமை//

பாத்திட வேண்டியதுதான்! :-)

ம.தி.சுதா said...

அட இம்புட்டு விசயம் நடந்திருக்கோ...
எல்லாம் நேரே பார்க்க ஆசை தான் ஆனால்...

தங்களை என் தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

Unknown said...

நீங்க சொன்னா சரிதான் வாத்தியாரே

a said...

படம் பாக்க வரவங்களுக்கு ஏதோ ஒரு சந்தோசத்த "தந்து" அனுப்புறாங்க்கன்னு சொல்லுங்க......

ஜெயந்த் கிருஷ்ணா said...

தைரியமா படம் பாக்கலாமுன்னு சொல்லுங்க....

Unknown said...

//வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை //

கடும் கண்டனங்கள்

ஜி.ராஜ்மோகன் said...

இந்த மாதிரி சிறிய படங்கள் வரவேற்கப்பட வேண்டும் .உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கும்
ஆவலை தூண்டுகிறது . அது சரி தலைவா எப்ப உங்க படத்துக்கு நாங்க விமர்சனம் எழுதறது .http://www.grajmohan.blogspot.com

bandhu said...

//தாங்கிற பேருக்கு என்ன அர்த்தம்?//
வரி விலக்கு தா

Anonymous said...

// //வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கும் மதுரை பாஷை //

மதுரை வட்டார வழக்கில் வந்த படங்கள் தான் பல விருதுகளை அள்ளி வந்திருக்கின்றன என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

Venkat Saran. said...

அண்ணே உங்க அனுமதி இல்லாம உங்கள பத்தின ஒரு உண்மைய என் ப்ளோக்ல எழுதிட்டேன் .. மன்னிக்க வேண்டுகிறேன் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//முதலில் மதுரை ஸ்லாங்கில் படமெடுத்து வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை//

அடி விழும்..

பாட்டெல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு தலைவரே.. படம் வேற நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்க.. பார்க்கணும்..

நேசமித்ரன் said...

//முதலில் மதுரை ஸ்லாங்கில் படமெடுத்து வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை//

:(

Thirumalai Kandasami said...

"தா" னு ஒரு படம் ரிலீஸ் ஆயிருச்சு,,
**சொல்லவே இல்ல.**

படம் வேற நல்ல இருக்காம்.
** !!! **

http://enathupayanangal.blogspot.com

Anonymous said...

சமீபத்தில் தான் பதிவுலகில் நுழைந்தேன் சங்கர் அவர்களே! உங்கள் பதிவுகளை இன்று முதல் பின் தொடர்வதில் மகிழ்ச்சி! (madrasbhavan.blogspot.com & nanbendaa.blogspot.com)

மர்ம வீரன் said...

//வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை//

மதுரை லோ-க்ளாஸ் ஏரியா. சென்னைக்காரங்க உங்களுக்கு நாங்க பேசுறது காதறுக்கத்தான் செய்யும்.
கோயம்புத்தூர் ஹை-க்ளாஸ்ன்னே...அதான் அவங்க பேசுறது உங்களுக்கு தேனா இருக்கு.
நல்லாயிருங்க.

S. Senthil kumar said...

// //வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கும் மதுரை பாஷை //

தமிழ் சினிமா மதுரை பாஷையை வெட்ட, குத்த, ரௌடித்தனம் பண்றதுக்கே யூஸ் பண்ணி கெடுத்துட்டாய்ங்க ...
அதான் யாருக்குமே புடிக்கல...

மர்ம வீரன் said...

நாளைக்கி நீங்க எடுக்கப் போற படத்துல காதறுக்குற மதுரை பாஷை வராம பாத்துக்கோங்க. 'இது தான்னே இப்போ டிரண்டுன்னு' யாராவது சொன்னாக் கூட, நாங்க எல்லாம் ஹை-க்ளாஸு கொங்கு பாசைல தான் படமெடுப்பேன்னு சொல்லிடுங்க.

Prabu M said...

////முதலில் மதுரை ஸ்லாங்கில் படமெடுத்து வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை//

நானும் என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

இரண்டு வாரத்தில் ஊருக்கு வருகிறேன் அதுவரை தியேட்டரில் இருந்தால் கண்டிப்பா பார்க்கணும்...
நல்ல விமர்சனம்...

க ரா said...

அண்ணே மதுரைக்காரைங்க தங்கமானுவங்கணே... ஆனா அவிங்கள சீண்டி விட்டா புண்ணாக்கிறுவாய்ங்கணே.. பார்த்து :)

வினோ said...

நம்ம ஊரு படமா? பாத்தருன்னுக...

மாதேவி said...

நல்ல விமர்சனம்.

மாணவன் said...

விமர்சனம் அருமை சார்,
உங்கள் விமர்சனமே படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது

நன்றி

jayaramprakash said...

இது போன்ற படங்களுக்கு உங்களின் விமர்சனமே ஒரு நல்ல அங்கீகாரம்.வாழ வைப்போம் வாழ்வோம்.

அமர பாரதி said...

சங்கர், நல்ல விமர்சனம். காப்பியடித்து விருதுப் படம் எடுப்பதை விட, இந்த மாதிரி ஒரிஜினல் படங்கள் நல்லது தானே?

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
உங்கள் சென்னைத் தமிழுக்கு எங்கள் மதுரைத் தமிழ் மட்டமா...

வந்துட்டாங்கய்யா என்றுதான் வரும் வந்திட்டாங்கய்யா என்ற சொல்வதில்லை...

இதற்கு கடும் கண்டனம்...

அப்புறம் உங்கள் விமர்சனம் அருமை...
தா... நிறைவான படம்தான் என்று உங்கள் விமர்சனம் சொல்வதால் நம்பிக்கையோடு பார்க்கலாம்.

hayyram said...

சார், ஒரு விஷயம் கேக்கறேன் கோவிச்சிக்காதீங்க! ஏன் சார் இப்போ வர்ற தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாருமே குப்பை பொறுக்குபவரை கூட்டி வந்து நடிக்க வைச்ச மாதிரியே இருக்காங்க? ஹீரோயினை மட்டும் வெலக்கி வெச்ச வெள்ளிகுத்து விளக்கு மாதிரி காமிக்கிறாங்க. ஹீரோயின் மொகத்தை மட்டுமே ரசிச்சு முழு படத்தையும் எப்படி சார் பாக்குறது. ஹீரோவும் நல்லா இருக்க வேணாமா?

Ganesan said...

கேபிளு,

என்ன அலப்பறையா? என்ன மதுரகாரங்கள பத்தி கமெண்டு.

அப்பு, நாங்கள்லாம் அங்கிட்டு சைக்கிள் ஒட்டி, இங்கிட்டு பார்த்தா பைக்ல வரவிய்ங்க..

ரொம்ப லந்தா?

எங்காளுங்க வந்தாய்ங்கன்னா , அப்பறம் நடக்கிறத வேற,
பாத்து பேசுறது எதுனாலும் பைய பேசுங்க..

அப்புறம் தா, விமர்சனம் சூப்பர் தலைவா.

ரோஸ்விக் said...

மதுரைக்காரய்ங்க பாசக்காரய்ங்கண்ணே... படத்துகள்லதான் கெடுத்துவச்சிருக்காய்ங்க...

மதுரைக்காரன் என்னையப்பாத்தும் உங்களுக்குத் தெரியலையாண்ணே!!!

ரோஸ்விக் said...

ஒரு விளம்பரம்

http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&feature=&p=D6DAEF8E7C777233&index=0&playnext=1

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... படம் நல்லா இருக்கு போல... உங்கள் விமர்சனம் அதைவிட நல்லா இருக்கு...

Philosophy Prabhakaran said...

இங்கே பின்னூட்டம் போட்டவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்... கேபிள் பதிவில் எழுதியதை தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம்... அவர் மதுரை தமிழை கேவலமாக குறிப்பிடவில்லை... திரையில் மதுரை தமிழை பலமுறை பார்த்து சலிப்பு ஏற்பட்டுவிட்டதாகவே குறிப்பிட்டிருக்கிறார்...

Mitra said...

என்ன philosophy prabhakaran sir, நீங்க தமிழ் to தமிழ் dictionary போடுறிங்களா?. கேபிள் சொன்னதுக்கு விளக்கம் கொடுக்கிறீங்க!..உங்களுக்கு சலிச்சுப் போச்சுனா! வாய்க்கு வந்ததெல்லாம் எழுதுறதா?

வன்மையாக கண்டிக்கிறோம்!..

Cable சங்கர் said...

@ஜீ
நன்றி

2ம.தி.சுதா
வந்திட்டா போச்சு

@விக்கி உலகம்
நன்றி

@வழிப்போக்கன்
அஹா..ஹா..

@வெறும்பய
நிச்சயம்
@முகிலன்

சரி.. அப்புறம்..:))

2ஜி.ராஜமோகன்
விரைவில்

@பந்து
தந்திட்டாங்களே..

@வெய்யிலான்.காம்.
அதையாரு.. இல்லேன்னு சொன்னதூ..? அதுக்காக எப்பூட்டு நாள் தான் மதுரை பாசை பேசினாத்தான் ஹிட்டாவும்னு ஆளாளூக்கு லந்து பண்ணிட்டு, அருவா எடுத்துட்டு திரிஞ்சா போறடிக்குதுல்ல.. என்னங்கண்ணா நான் சொல்றது..?

Cable சங்கர் said...

#ப்வெங்கட் சரன்
பார்த்திட்டேன்

@கார்திகைப்பாண்டியன்
அதுக்கெல்லாம் நாங்க ரெடியாயிருப்போமில்ல..

2@நேசமித்ரன்
எதுக்கு..?

@திருமலை கந்தசாமி
ஓகே

சிவகுமார்
வாழ்த்துகள் நண்பா.. வருக..வருக..

@மர்மவீரன்
ஏப்பு.. நாங்களும் லோ..கிளாஸுதேன்.. எங்கிட்டிருந்து வர்றீக.. கிளம்பிட்டு.. :))

Cable சங்கர் said...

@செந்தில்குமார்
அதுவும் ஒன்ணு

மர்மவீரன்
நிச்சயம் வீரரே.. என் படத்தில் நிச்சயம் மதுரை பாசை கிடையாது.
@பிரபு.எம்.
வாங்க..வாங்க..பிரபு.. வந்தவுடனே ஓரு போன் பண்ணுங்க..

Cable சங்கர் said...

@இராமசாமி
யாருண்ணே இல்லேண்ணு சொன்னது.. பாசக்காரபயலுவ தேன்.. படத்திலஎரிச்சலாயிட்டு வருதில்ல..

@வினோ
ஆமா

@மாதேவி
நன்றி

#மாணவன்
பாருங்க

2ஜெயராம் பிரகாஷ்
நன்றி

@அமரபாரதி
அதுவும் நல்லதுதான்

@சே.குமார்
யாருய்யா சொன்னது மட்ட்முன்னு.. போரடிச்சி போச்சுன்னுதானே சொன்னேன்..

Cable சங்கர் said...

@ஹேய்ராம்
அது வேரொன்னுமில்ல.. பருத்திவீரன் பாதிப்புத்தேன்..

@காவேரி கணேஷ்
எனக்கென்ன .. வந்தென்ன பண்ணுவாய்ங்க... நாங்களும் தஞ்சார்வூர்காரன். நமக்கும் ஆளிருக்கில்ல..

நன்றி..

Cable சங்கர் said...

@ரோஸ்விக்
ஏன்னே.. ஊரை தெரிஞிட்டா நாம பழகறோம்

பிலாசபி பிரபாகரன்
நன்றி

2மித்ர
இந்த விமர்சனம் நீங்களா எழுதுறீங்க மித்ரா? நான் தானே எழுதறேன். அதனால எனக்கு என்ன தோன்றியதோ அதைத்தானே எழுத முடியும்? உங்கள் கண்டிப்புக்கு மிக்க் நன்றி..

hayyram said...

//@ஹேய்ராம்
அது வேரொன்னுமில்ல.. பருத்திவீரன் பாதிப்புத்தேன்..// இன்னும் எத்தனை நாளைக்கு... எப்படி மதுரைத்தமிழ் கேட்டு கேட்டு புளிச்சு போச்சோ அதே மாதிரி ஷேவ் பண்ணாத பரட்டை தலை ஹீரோக்களை பாத்து பாத்து சலிச்சு போச்சு.. உங்க சினிமா நண்பர்கள்ட்ட கொஞ்சம் சொல்லுங்க தல! பெங்களூரில் இருக்கும் சில தமிழ் பெண்களிடம் கண்ணடப்படம் பார்ப்பீர்களா என்று கேட்ட போது சே நோ சான்ஸ் என்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அந்த ஹோரோக்களெல்லாம் பார்க்க சகிக்காது என்றார்கள். அதே நிலை தான் தமிழிலும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆண்களே அறுவெறுப்பு படும்முன்பாக சினிமாக்காரர்கள் இந்த ட்ரெண்டை மாற்றினால் தேவலை! நன்றி!

சிவராம்குமார் said...

கண்டிப்பா பார்த்திடலாம் தல!

சி.பி.செந்தில்குமார் said...

செமயான விமர்சனம்.இன்னைக்குத்தான் படம் பாக்கனும்

shortfilmindia.com said...

@siva
பார்த்துட்டு சொல்லுங்க

@சி.பி.செந்தில்குமார்
பாருங்க..

Sundar said...

இருபது வருஷமா பொள்ளாச்சிய தாண்டி தமிழ் சினிமா வெளிய வரவே இல்ல... அப்ப எல்லாம் ஒன்னும் சொல்லலே... ஒரு மாநில மொழிகளுக்குள்ளேயே இப்பிடி பிரிவினை வாதம் இருந்தா, அப்புறம் ஹிந்திகாரன் ஏன் தமிழை திட்டமாட்டான்... படம் எடுத்த முறையை வேணும்னா திட்டுங்க, மொழியை ஏன் திட்டுறீங்க?

Unknown said...

excellent blog post,you have written a nice artical.i like ur thought & views.

Kiruthigan said...

விமர்சனம் எதிர்பார்த்திருந்தோம்...
நீங்கள் இசையும் பாடலும் நன்றாக உள்ளது என பாராட்டியது எனக்கு மிக்க மகிழ்ச்சியே ஏனெனில் இசையமைத்தவர் எங்க ஊர்காரர்.
(இதுவரை தமிழர் ஆதரவுப்பாடல்களையே இசைத்துவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

முதன்முறையாக எம் நாட்டிலிருந்து சினிமாவுக்கு இசையமைக்கும் இந்நேரத்தில் பிரதேசவாதம் பற்றி கதைப்பது வருத்தத்துக்குரியது.

கேபிள் சார் தமிழ்சினிமாவின் பாணி மாறுவதால் ஆரோக்யமாக செல்கின்றது என்பதையே சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி.
http://tamilpp.blogspot.com

Unknown said...

அண்ணே! இங்க மதுரைலெ இந்த படத்தே ஜெயா டிவி ஹாசினி ப்ரொக்ராம் பாத்துட்டு படம் பாக்கலாம்னு தியேட்டர் தேடுனேன். என் கெட்ட நேரம் படத்தே தூக்கிட்டாங்க... இந்த வருசன் எனக்கு சரியில்லே நல்ல படம் ஒன்னு கூட பாக்கலேண்ணே

Deep said...

//வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க என்று காதறுக்கு மதுரை பாஷை //

கடும் கண்டனங்கள்