எண்டர் கவிதைகள்-10
எதிர் வீட்டு வண்டி குறுக்கே நிறுத்தப்படாமல் இருக்க வேண்டும் காலை அவசரத்துக்கு ஒரு உதையில் கிளம்ப வேண்டும் மேம்பாலத்தில் முன் செல்லும் வண்டியின் பிரேக் சரியாக பிடிக்க வேண்டும் அழுந்த பிடிக்கும் போது க்ளட்ச் வயர் கட்டாகாமல் இருக்க வேண்டும் சாயங்காலம் திரும்ப வருகையில் மூச்சடைக்கும் ட்ராபிக் இல்லாமல் இருக்க வேண்டும் பின்னால் வரும் தண்ணீர் லாரி என் மேல் இடிக்காமல் நிறுத்த வேண்டும் வீடு வந்து சேர்வதற்குள் உயிரோடு இருக்க வேண்டும் என ஆயிரம் வேண்டும்கள் இவ்வனைத்தும் நடந்தால் அடுத்த நாளும் அஃதே நடக்க வேண்டும். டிஸ்கி: எண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று கடிதமெழுதியும், தொலைபேசியிலும் விரும்பிகேட்ட, சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி மற்றும் பலரின் விருப்பத்தின்படியால்.. கேபிள் சங்கர்