Posts

Showing posts with the label தந்தி டிவி

கொத்து பரோட்டா - 06/01/14-Uyyala Jampala, நம்ம கிராமம், தந்தி டிவி, புத்தக வெளியீடு, தொட்டால் தொடரும்

Image
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். எங்கு பார்த்தாலும் புத்தக வெளியீட்டு விழாவாய் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மூன்றாவது புத்தகம் வெளியிடுகிறவர்களுக்கும், முதல் புத்தகம் வெளியிடுகிறவர்களுக்கும் என் வாழ்த்துகள்.  தொட்டால் தொடரும் பட டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் நிறைய நண்பர்கள் அவர்களது புத்தக வெளியீட்டிற்கு அழைத்திருந்தும் போக முடியவில்லை. . அதையும் மீறி ஒளிப்பதிவாளர், நண்பர் சி.ஜே. ராஜ்குமாரின் “பிக்ஸல்” புத்தக வெளியீட்டிற்கு அவர்கள் ப்ரசாத் லேப்பை காலி செய்வதற்கு முன் சென்று வாழ்த்தினேன். சற்று முன்னர் வந்திருக்கலாமென்று சி.ஜே. ராஜ்குமார் வருத்தப்பட்டார். புத்தகம் நன்றாக வந்திருப்பதாகவும் நல்ல விற்பனையென்றும், நான்கைந்து கூட்டங்களிடையே நல்ல கூட்டமும் கூட என்று வேடியப்பன் சொன்னார். மகிழ்ச்சி. அதையேத்தான் மனுஷ்யபுத்திரனும் ஃபேஸ்புக்கில் கூறியிருந்தார்.ரெட்டிப்பு மகிழ்ச்சி. அனைவரையும் புத்தக கண்காட்சியில் பார்க்கலாமென்று நினைக்கிறேன். என் புதிய புத்தகமான சாப்பாட்டுக்கடை சென்ற மாதமே வெளியாகிவிட்டது. மதி நிலையத்தில் மட்டுமில்லாது பரவலாய் பல ஸ்டால்களில் கிடைக்கும் ...