Posts

Showing posts with the label சென்சார்

கொத்து பரோட்டா 2.0-59

சென்சார் எனும் கொடுங்கோலன். ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனால் தான் அதற்கு பேர் டெலிவரின்னு வச்சிருக்காங்க என்று நடிகர் சத்யனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். இன்றைய தேதிக்கு நிலைமை மிக மோசம். தயாரிப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நிலையை தாண்டி வருவது என்பது அசாத்யமான விஷயமாகிக் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான நிலை சென்சார். ஏற்கனவே சென்சாருக்கும் நம் திரையினருக்குமிடையே பல விதமான வேறுபாடுகள். பிரச்சனைகள். ஹிந்தி படத்தில் காதலர்கள் கிஸ்ஸடித்தால் “யூ”. அதே நம்மூரில் அடித்தால் “ஏ” என பலவிதமான கலாச்சார வழிகாட்டிகளோடு சிறப்பாக செயல்படுகிறவர்கள் நம்மூர் சென்சார் போர்ட் ஆட்கள். இதில் பெரிய படத்தில் கெட்ட வார்த்தை, டபுள் மீனிங், ரத்தகளறியாய் காட்சி வைத்தாலும் முன்பிருந்த வரிவிலக்கிற்காக “யூ” கொடுப்பார்கள். எவனாவது சின்ன தயாரிப்பாளர் கொஞ்சமே கொஞ்சம் ரத்தம் தூரத்தில் தெளித்தார்ப் போல காட்டினால் கட்டுடன் ‘ஏ” கொடுப்பார்கள். இப்படியான ஓரவஞ்சனைகளை பற்றியும், இவர்கள் தின்றே தீர்க்கும் டிபன் வகையராக்கள் பற்றியும் எழுத நிறைய இருந்தாலும் இன்றைய தயாரிப்பாளர்கள் தலையாய...