Posts

Showing posts with the label Malayalam film

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம்.

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம். பொதுவாகவே மலையாள படங்களில் ஐரோப்பிய படங்களின் தாக்கம் அதிகமாய் இருக்கும். பிரியதர்ஷன் காலத்திலிருந்தே அம்மாதிரியான விஷயங்கள் அங்கு அதிகம். அதற்கு முக்கிய காரணம் தனிமையான வீடுகள். அமைதி. நகர்புறதன்மையற்ற கதைகளை எடுக்கக்கூடிய நிலப்பரப்பு. கிருஸ்துவ குடும்ப அமைப்புகள். தனிமை. குடும்பத்தோடு குடிப்பது என்பது போன்ற பல விஷயங்களை சொல்லலாம். நாடே பல மொழிகளில் கொண்டாடிய திருஷ்யம் ஒரு ஜப்பானிய மொழியாக்கம் என்பது இன்றளவில் உள்ளக் குற்றச்சாட்டாக இருந்தாலும் மலையாளிகள் மிகச் சிறப்பாய் கதைகளை அவர்களுக்கான படங்களாய் ஆக்குவதில் வல்லவர்கள். அதற்கு காரணம் அங்குள்ள எழுத்தாளர்கள். இன்றளவில் எழுத்தாளர்களை கதையின் நாயகர்கள் அளவுக்கு கொண்டாடிக்  கொண்டிருக்கும் ஒரே திரையுலகம் மலையாள உலகம் தான். பல சமயங்களில் அசாதாரணமான கதைகளை மிகச் சாதாரணமாய் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். பட்டர்ப்ளை ஆன் வீல்ஸ் என்ற ஹாலிவுட் படம். நம்ம ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் ப்ரான்சன் நடித்திருப்பார். அது ஒரு த்ரில்லர் வகை படம்  அதை மலையாளத்தில் காக்டெயிலாக்கி கொடுத்திருந்தார்கள்  வெற்ற...

EE.Ma.yau V/S மதயானைக்கூட்டம்.

EE.Ma.yau V/S   மதயானைக்கூட்டம். எப்போது பார்த்தாலும் எப்படா இந்த மாதிரியெல்லாம் ஒரு படம் தமிழ்ல வரும்னு மலையாள படங்களை கொண்டாடிக் கொண்டேயிருக்கிறோம். மீண்டும் ஒரு மலையாளப்படத்தைப் பார்த்து கொண்டாட வேண்டிய கட்டாயம். இந்த ஈ.மா.யூ. ஆனால் அதே நேரத்தில் நம் பக்கத்திலிருந்தும் இது போன்ற படங்கள் வந்திருக்கிறது. அது எதற்காக கொண்டாடப்படாமல் போனது என்பதை   பற்றியும் பேச வேண்டும். முதலில் இ.மா.யூ. ரொம்பவே சிம்பிளான கதை. கடற்கரை கிராமம். வாவேச்சன் ஊர் வருகிறார். வரும் போதே வாத்து ஒன்றை பிடித்துக் கொண்டு வந்து மனைவியிடம் சமைக்கச் சொல்கிறார். சின்னதாய் மனைவியிடம் தோள் தட்டி ரொமான்ஸ். மகள், மருமகளிடம் விசாரிப்பு. மகனுக்காக காத்திருந்து வந்தவனுடன் பிராந்தி களி. கூடவே பேச்சு சுவாரஸ்யம் ஏற, தன் தந்தைக்கு நடந்த   இறுதி ஊர்வலத்தைப் பற்றி பேச்சு போகிறது. அப்படியான ஊர்வலம் ஊரிலேயே நடந்ததில்லை என்கிறார். அதை விட உயர்ந்த தரமான ஊர்வலத்தை உனக்கு நான் செய்வேன் என்று மகன் சத்யம் செய்கிறான். சத்யம் செய்த சில நிமிடங்களில் வாவேச்சன் சரக்கின் போதையில் கீழே வீழ்ந்து மரிக்கிறார். மகன் அவருக...

Poomaram -Malayalam film

Image
பூமரம் தமிழ் சினிமாவின் ஸ்ட்ரைக் என்னை போன்ற தீவிர படம் பார்க்கிறவர்களையே தியேட்டர்களை விட்டு தள்ளி வைத்துவிட்டது. எந்த படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கிறவன் யாராவது பார்த்துவிட்டு சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் என்கிற சோம்பல் வந்துவிடக் காரணம் தொடர் படங்கள் வெளியிடாமை. என்னைப் போன்றவர்களுக்கே இப்படியான எண்ணம் என்றால்.. மாசத்திற்கு ஒரு படம் பார்க்கிறவர்களின் மனநிலை. சரி அதை விடுங்கள். அதையும் மீறி சில படங்கள் பார்க்கச் சென்று அது கொடுக்கும் மனநிறைவு தான் சினிமா.  அப்படியான ஒரு படம் சமீபத்தில் பார்த்த மலையாள படமான “பூமரம்” நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் ஏற்கனவே நடித்திருந்தாலும் அவரின்  முதல் மலையாள படம். வழக்கமாய் மலையாளப் படங்களின் படப்பிடிப்பு 25-30 நாட்களுக்குள் மிகச் சாதாரணமாக பெரிய பட்ஜெட் படங்களையே முடித்துவிடுவார்கள். ஆனால் சுமார் ஒன்னரை வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை முடிக்க. அதனாலேயே கதையின் நாயகனை வைத்து சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்த மீம்ஸ்கள் ஏராளம். ஆனால் அத்தனைக்கும் பதில் சொல்கிறார்ப் போல ஒரு படம். ரொம்பவே சிம்பிளான...

Take Off - Malayalam Film - Silent Review

Image