Posts

Showing posts with the label மெரினா

தமிழ் சினிமா இந்த மாதம் –பிப்ரவரி -2012

பரபரப்பான பொங்கல், புதுவருட ரிலீஸுகளைத்தாண்டி, இந்த மாதத்தில் பெரிய மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வந்தது. வழக்கம் போல சின்ன பட்ஜெட் படங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட கருப்பு குதிரையாய் இருக்கும் என்று நினைத்த படங்கள் துண்டைக்காணோம் என்று ஓடியதும் நடந்த மாதமிது.

மெரினா

Image
முதல் படத்திலேயே வெற்றி பெற்ற இயக்குனர்களில் வெற்றியை மட்டுமில்லாமல் அந்த வெற்றியின் மூலமாய் மரியாதையையும் தேடி பெற்றுக் கொண்டவர் இயக்குனர் பாண்டியராஜ். அவரது இரண்டாவது படமான வம்சம் பெரிதாக போகாததாலும், படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததாலும், அடுத்த படத்திற்கு தானே தயாரிப்பாளராகி களமிறங்கியிருக்கிறார் மெரினாவில். எடுத்துக் கொண்ட களம் அருமையானது. ஒரு நாள் பீச்சுக்கு போய் நின்றாலே பல கதைகள் கிடைக்கக்கூடிய இடமது. மொத்த படமே அங்குதான் எனும் போது எதிர்ப்பார்ப்புக்கு அளவேயில்லை. டீசர் பாட்டும், ட்ரைலரும் கொடுத்த பெப் வேறு எக்ஸ்படேஷன் மீட்டரை ஏற்றிவிட்டிருந்தது.