Posts

Showing posts with the label அனந்தபுரத்துவீடு

ஆனந்தபுரத்துவீடு

Image
வழக்கமான பயமுறுத்தும் பேய் படத்தை எதிர்பார்த்து இப்படத்திற்கு போனீர்களானால் நிச்சயம் பெரும் ஏமாற்றம் ஏற்படுவது உறுதி. ப்ளாங் மைண்டோடு சென்றீர்கள் என்றால் உங்களால் என் ஜாய் செய்ய முடியும். ஏற்கனவே சீரியல் உலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர், கதாசிரியர் இணைந்து இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வந்திருக்கும் படம். நந்தா, சயாசிங், அவரது பையனுடன் தங்களுடய கிராமத்து வீட்டுக்கு வெக்கேஷனுக்காக வருகிறார்கள். வந்த இடத்தில் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதை முதலில் சிறுவன் உணர்கிறான். ஆனால் அவனால் பேச முடியாது. அந்த பேய் வேறு யாரும் கிடையாது  நந்தா சிறு வயதாக இருக்கும் போது ஆக்ஸிடெண்ட்டில் அகாலமாய் இறந்து போன அப்பா அம்மா தான்.  மகன் வந்திருப்பது ஒரு பிரச்சனையில் ஐம்பது லட்ச ரூபாய் கடனை திரும்ப கொடுக்க முடியாமல், அங்கிருந்து பிரச்சனையிலிருந்து தப்ப, யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் நந்தா. நந்தாவை தொடர்ந்து வரும் கடன் கொடுத்த நட்வர்லால் அவன் வீட்டிலேயே ஹவுஸ் அரஸ்ட் செய்து பணம் கொடுத்துவிட்டு வெளியே போ அப்படி இல்லையென்றால் உன் மனைவியை என் பொறுப்பில் வைத்து விட்டு போ...