அம்புலி 3டி
ஓர் இரவு என்றொரு படம். தமிழ் சினிமாவின் முதல் பாயிண்டாப் வியூ படம். டிஜிட்டல் சினிமாவை சரியாய் புரிந்து கொண்டு, அருமையாய் சொல்லப்பட்ட த்ரில்லர் கம் ஹாரர் படம். சென்னையில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த படமாய் தெரிந்தெடுக்கப்பட்ட திரைப்படம். இவ்வளவு பெருமைகள் இருந்தும் மக்களிடையே தெரியாத படமாய், இன்றளவில் பைரஸியாய் கூட மார்கெட்டிலோ, இண்டெர்நெட்டிலோ, இல்லாத படமாய் போனதற்கு காரணம். பெரிய படங்களுடன் மோதுவதற்கு திராணியில்லாமல், தியேட்டர்கள் கிடைக்காமல், சரியான மார்கெட்டிங் இல்லாமல், அதற்கான பட்ஜெட் இல்லாமல் அடிபட்ட புலியாய் பதுங்கியவர்கள், இம்முறை சினிமா வியாபாரத்தை புரிந்து கொண்டு, சிங்கமாய் களமிறங்கியிருக்கிறார்கள்.